Exclusive : விஜய் அடங்க மாட்டாரு.. சங்கீதாவும் லேசுப்பட்ட ஆளில்லை.. பழசை எல்லாம் கிளறிய பிரபலம்

சென்னை: நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான விவாகரத்து சர்ச்சை குறித்த பேச்சுக்கள் தான் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சாக உள்ளது. விவாகரத்து மனுவை திரும்பப் பெறச் சொல்லியும் ரூபாய் 250 கோடிகள் செட்டில்மெண்ட் செய்யத் தயார் என்றும் விஜய் தரப்பில் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இவர்களுக்கு இடையிலான இந்த விவாகரத்து விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான T.R. ரமேஷ் நமது ஃபிலிமி பீட் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், "விஜய்க்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் திமுகவுடன் இணைந்து கொண்டு சங்கீதா செய்யும் செயல். இதையெல்லாம் விஜய் கடந்து வந்துவிடுவார். இவர்களுக்கு இடையிலான இந்த பிரச்னை என்பது கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாகவே உள்ளது. ஆனால் அவை எல்லாம் இப்போது தான் வெளியே வருகிறது. விஜய் படத்தின் புரோமோசனுக்கு சங்கீதா வந்தது எல்லாம் விஜய்யின் அம்மா ஷோபாவின் நெருக்கடியால் தான் வந்தார்.

Producer T R Ramesh Exclusive Interview About Vijay Sangeetha Divorce Amid

விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்று கூறினால், நீங்கள் திருமணம் செய்வதற்கு முன்னரும் அவர் ஒரு நடிகையுடன் மிகவும் நெருக்கமான தொடர்பில் தானே இருந்தார்? அப்போது மட்டும் எப்படி திருமணம் செய்து கொண்டீர்கள். காரணம் விஜய் ஒரு வளர்ந்து வரும் கதாநாயகன் என்பதால் தானே? நீங்கள் தான் பணக்கார வீட்டு பெண்ணாச்சே, அப்படி என்றால் எதற்காக ஜீவனாம்சம் கேட்கிறீர்கள்?

சங்கீதா: நடிகை சோனியா அகர்வால் திருமணம் செய்துகொண்டார், என்ன பிரச்னை என்றே வெளியே சொல்லவில்லை, ஜீவனாம்சம் வாங்கிக் கொண்டு விவாகரத்து பெற்று விட்டு தனியாக வாழ்கிறார். சமந்தா ஜீவனாம்சமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு, காரணத்தையே சொல்லாமல் விவாகரத்து வாங்கி தனியே சென்று விட்டார். இப்படி இருக்கையில் சங்கீதா இவ்வாறு செய்யக் காரணம் விஜய்க்கு அவப்பெயரை உருவாக்கத்தான்.

Producer T R Ramesh Exclusive Interview About Vijay Sangeetha Divorce Amid

அடங்க மாட்டார்: சங்கீதாவும் விஜய்யும் நெருங்கிப் பழக காரணமே அப்போது விஜய்யின் பர்ஷனல் உதவியாளராக இருந்த ராஜன் என்பவர் தான். சங்கீதா திருமணம் செய்து வீட்டிற்குள் வந்ததும் செய்த முதல் வேலை அந்த ராஜன் என்ற பர்ஷ்னல் உதவியாளரை வேலையில் இருந்து தூக்கியது தான். விஜய்க்கு எத்தனை நெருக்கடிகள் கொடுத்தாலும் அவர் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால் அதை அடையாமல், அந்த இலக்கை தொடாமல் அடங்கமாட்டார். ஆளும் திமுகவும் இணைந்து கொண்டு சங்கீதா தொடுத்துள்ள விவாகரத்து சர்ச்சை எல்லாம் அவரது அரசியலை பாதிக்காது" என்று பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X