twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூர்யா கிட்ட பாரதிராஜா தான் சொன்னாரு.. தயாரிப்பாளர் டி. சிவா பேட்டி!

    |

    சென்னை: இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தொடங்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளரான தயாரிப்பாளர் டி. சிவா அளித்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.

    தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக ஏகப்பட்ட பிரச்சனைகள் சென்று கொண்டு இருக்கிறது.

    அதன் காரணமாக ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யவே இப்படியொரு புதிய சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என டி. சிவா விளக்கி உள்ளார்.

    Producer T Siva talks about Bharathiraja and new Producer council!

    மேலும், இயக்குநர் பாரதிராஜாவின் கோரிக்கையை ஏற்றுத் தான் நடிகர் சூர்யா சமீபத்தில் 30 லட்சம் ரூபாய் பணத்தை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தார் என்றும் டி. சிவா ரிவீல் செய்துள்ளார்.

    அமேசான் பிரைமில் சூரரைப் போற்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நடிகர் சூர்யா, சினிமா கலைஞர்கள், கொரோனா முன் கள பணியாளர்கள் என ஏகப்பட்ட நபர்களுக்கு சுமார் 5 கோடி வரை சமீபத்தில் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

    சர்ச்சையை கிளப்பிய ஆபாசப் பட நடிகை கமெண்ட். ஆதரவு அளித்த நிஜ இந்தியர்களுக்கு நன்றி சொன்ன ஊர்மிளா!சர்ச்சையை கிளப்பிய ஆபாசப் பட நடிகை கமெண்ட். ஆதரவு அளித்த நிஜ இந்தியர்களுக்கு நன்றி சொன்ன ஊர்மிளா!

    மேலும், போட்டி சங்கமாக இது ஆரம்பிக்கப்பட வில்லை என்றும், 1500 பேர் உள்ள மிகப்பெரிய சங்கம் விஷால் தலைமையிலான சங்கம் என்றும், இது வெறும் 100 பேர்களுடன் நடக்கும் சங்கம் என்றும், இதில், நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்தல், ஒடிடி பிரச்சனை, சினிமாவை ரிலீஸ் செய்யும் விவகாரம், க்யூப் பிரச்சனைகள் உள்ளிட்டவை மட்டுமே கையாளப் படும் என்றும் கூறினார்.

    English summary
    Bharathiraja and his team inaugurates a new office for their new Producer Council. Bharathiraja and a few other filmmakers stepped out from Tamil Film Producer Council (TFPC) and launched a new association recently.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X