விஜய்க்கு எதிரான சங்கீதாவின் கேஸ் நிக்காது.. நீலாங்கரை வீடேதான் வேண்டுமா? விளாசலில் இறங்கிய பிரபலம்
சென்னை: நடிகர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பான தகவல்கள் வெளி வந்ததில் இருந்து அது குறித்த பேச்சுக்கள் இணையத்தில் தீயாக உள்ளன. இப்படி இருக்கையில் தயாரிப்பாளர் டி.ஆர். ரமேஷ் நமது பிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதாவது அவரது பேட்டியில், " சங்கீதா தொடுத்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் நிக்காது. சங்கீதா திருமணம் ஆகி வந்த வீடு என்பது சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டிற்குத்தானே வாழ வந்தார். நீலாங்கரை வீட்டிற்கு வாழ வரவில்லை தானே? சாலிகிராமம் வீடு இப்போதும் சும்மாதான் உள்ளது. அந்த வீட்டை விஜய் ஒன்றும் வாடகைக்கு விட வில்லை. சங்கீதா அந்த வீட்டில் தங்கிக் கொண்டு, வழக்கை நடத்திவிட்டு போகட்டும்.

மேலும் சங்கீதா பெரிய பணக்கார வீட்டு பெண் என்று கூறுகிறீர்கள், அப்படி என்றால் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கலாமே? மகனும் மகளும் இப்போது என்ன சங்கீதாவுடன் இருக்கிறார்களா? அவரவர் அவரவர் வாழ்க்கைய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீலாங்கரையில் உள்ள 500 கோடி ரூபாய் வீடு வேண்டுமா சங்கீதாவுக்கு? விஜய் என்ன முட்டாளா? இத்தனைக்கும் சாலிகிராமம் வீடு விஜய் பெயரில் உள்ளது. ஆனால் நீலாங்கரை வீடு இன்னும் கடனில் தான் உள்ளது. விஜய் வேண்டாம் விஜய் சொத்து வேண்டும். விஜய் சொத்து வேண்டும் என்றால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு, அரவணைத்துப் போக வேண்டியது தானே?.
விஜய் த்ரிஷா: விஜய் த்ரிஷாவுடன் திருமணத்திற்கு வந்தது என்பது எப்படி தவறாகும்? அவர் என்ன த்ரிஷாவின் தோல் மீது கை போட்டு நடந்து வந்தாரா? தம்பதிகளுக்கு பூங்கொத்து கூட விஜய் தானே கொண்டு வந்தார். திருமணம் செய்தா அழைத்து வந்தார்? இல்லை தானா? எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுடன் இல்லையா? கலைஞர் ராசாத்தி அம்மாளுடன் இல்லையா? பாலிவுட்டில் இது எல்லாம் சாதாரணம்.
கூட்டணி: இந்த ஆண்டு தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் தவெக என மூன்று கட்சிகளும் தான் கூட்டணி வைப்பார்கள். பாஜகவுக்கு திமுகவை காலி செய்ய வேண்டும். அப்படியானால் அதிமுக மற்றும் தவெக அவர்களுடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக விஜய் மீது உள்ள சில வழக்குகளை முடித்து வைக்க பாஜக முன் வருகிறது. அப்படி இருக்கும் போது விஜய் பாஜகவுடன் கூட்டணி வைப்பார் தானே?" என்று தெரிவித்தார். அவரது இந்த பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











