twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேவர்மகன் தான் முதல் அட்டை படம்...30 ஆண்டு வெற்றியை சொல்லும் வர்கீஸ் சிறப்பு பேட்டி

    |

    சென்னை: கலர்புல்லாக இருக்கும் சினிமா இன்ட்ஸ்டரியை தனித்துவமாக்க விரும்பினேன் என்று Cinema Variety Directory நிறுவனர் வர்க்கீஸ் தெரிவித்தார்.

    Recommended Video

    Variety Cinema Directory | Vargheese | முதல் 10 வருஷ போராட்டம் | Filmibeat Tamil

    அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் நூலகங்களில் Cinema Variety Directory ஐ வாங்கி வைத்துள்ளதை நமது சினிமாத்துறைக்கு கிடைத்த கௌரவமாக கருதுவதாகவும் கூறினார்.

    Cinema Variety Directory வந்தபிறகு புரோடக்ஷன் மேனேஜர் வேலை எளிமையாகி விட்டது என்று கூறிய அவர், நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    சன்னிலியோன் வாரிசு சேலையில்… அவரா இவர் எனும் நெட்டிசன்ஸ்சன்னிலியோன் வாரிசு சேலையில்… அவரா இவர் எனும் நெட்டிசன்ஸ்

    கலர்புல் சினிமா

    கலர்புல் சினிமா

    கேள்வி: உங்களுக்கு Cinema Variety Directory உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது?

    பதில்: என்னுடைய பூர்வீகம் கேரளா. நான் பிறந்ததும், படித்ததும் சென்னையில் தான். எம்.காம். மார்க்கெட்டிங் படித்தேன். மலையாள சூப்பர் ஸ்டார் ஜெயன் நடித்த ஒரு படத்தை, எனது அப்பா புரோக்டக்ஷன் கண்ட்ரோலராக பணியாற்றிய கம்பெனி தயாரித்தது. அப்பா சினிமா இன்ட்ஸ்ட்ரியில் இருப்பதால், நாமும் வரக்கூடாது என்று எண்ணினேன். ஆனால் நாம் தனித்துவமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அப்போது சினிமாத்துறை தொடர்பாக எந்தவொரு புத்தகமும் எதுவும் சரியாக போட்டி போட்டது இல்லை. அப்போது நான், கலர்புல்லாக இருக்கும் சினிமா இன்ட்ஸ்டரியை தனித்துவமாக்க விரும்பினேன். அதன் வெளிப்பாடே இந்த Cinema Variety Directory.

    எம்.ஜி.ஆர். குறித்த தகவல்கள்

    எம்.ஜி.ஆர். குறித்த தகவல்கள்

    கேள்வி: Cinema Variety Directory உருவாவதற்கு முன்பு உள்ள புத்தகங்களை நீங்கள் அறிந்தது உண்டா?

    பதில்: சமீபத்தில் ஒரு புத்தக கண்காட்சிக்கு சென்றேன். அங்கு 1957ல் வெளிவந்த சினிமா டைரி புத்தகம் ஒன்றை பார்த்தேன். அதில் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் போன்றவர்களின் விலாசம் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தது. அந்த புத்தகத்தின் விலை ரூ.1.25காசு ஆகும். அந்த புத்தகத்தின் ஆசிரியர் காண்டீபன், உதவி ஆசிரியர் கே.எஸ்.சிவன், புத்தகத்தை வெளியிட்டவர்கள் சுதர்சன் பப்ளிகேஷன்ஸ். மிகவும் ஆச்சர்யமான உண்மை இது

    எனது முதல் அட்டைப்படம் தேவர்மகன்

    எனது முதல் அட்டைப்படம் தேவர்மகன்

    கேள்வி: எந்த வருடத்தில் Cinema Variety Directory ஐ தொடங்கினீர்கள்? அதன் பயணம் எப்படியிருக்கிறது?

    பதில்: 1992ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கிய எனது பயணம் வரும் மே மாதத்துடன் 30ம் ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 1992ம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் தேவர் மகன் திரைப்படம் வெளியானது. அத்திரைப்படத்தின் போட்டோவை நடிகர் கமலஹாசனின் அனுமதியுடன், டிசம்பரில் வெளியான எனது முதல் Cinema Variety Directory க்கு தேவர்மகனின் படமானது அட்டைப்படமானது. என்னுடைய வாழ்க்கையாக தொடங்கிய இந்த Cinema Variety Directory, நாளடைவில் பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக மாறியது. Cinema Variety Directory ஐ பயன்படுத்தி பல பெரிய நடிகர், நடிகைகள் வளர்ந்துள்ளனர். அதில் என்னுடைய பங்கும் இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இதனால் நானும் வளர்ந்துள்ளேன்.

    முதல் 10 வருடங்கள் யாரும் இதை பொருட்படுத்தவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து உழைத்தேன். 2000ம் ஆண்டில் நான் உழைத்ததற்கான அங்கீகாரம் கிடைத்தது.

    வெளிப்புற படப்பிடிப்பிற்கு பேரூதவி

    வெளிப்புற படப்பிடிப்பிற்கு பேரூதவி

    கேள்வி: Cinema Variety Directory க்கு தேவையான விபரங்களை எவ்வாறு சேகரிக்கிறீர்கள்?

    பதில்: எல்லா நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களை சந்திப்பேன். அவர்களது பிறந்தநாள், தொலைபேசி எண், விலாசம், அவரது முதல் படம், 50வது படம், 100வது படம், விருது படம் என அனைத்து தகவல்களை சேகரித்து Cinema Variety Directory இல் இணைப்பேன். ஒரு காலக்கட்டத்தில் இந்த Cinema Directory இல்லாமல் வெளிப்புற படப்பிடிப்பிற்கு யாரும் செல்ல மாட்டார்கள். இயக்குனர் ஆர்ட்டிஸ்ட்களை தேடுவதும், ஆர்ட்டிஸ்கள் இயக்குனர்களை தேடுவதற்கும் இது பெரும் உதவியாக இருந்தது. நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் விலாசம் போன்றவை மாறினால் நானும் Cinema Directory இல் மாற்றி விடுவேன். Directory என்பது வருடம் மட்டும் மாற்றுவது அல்ல. தகவல்களை புதுப்பிக்க வேண்டும். நம்மால் 100 சதவீதம் முடியவில்லையென்றால் கூட 70 அல்லது 80 சதவீதம் செய்திட வேண்டும். நானும் செய்து வருகிறேன். இதற்கு நிறைய சங்கங்கள் எனக்கு உதவி புரிகின்றன.

    Systematic Work 30 ஆண்டுகளாக...

    Systematic Work 30 ஆண்டுகளாக...

    கேள்வி: உங்கள் புத்தங்கத்தில் , சினிமா டைரியில் தனித்துவமாக நீங்கள் கருதுவது என்ன?

    பதில்: சினிமாத்துறை பொக்கிஷங்களை பாதுகாத்து வந்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். நான் தொடங்கிய காலக்கட்டங்களில் கிளாமர் கிருஷ்ணமூர்த்தி என்பவரும், அலைஓசை மணி என்பவரும் இது போன்று Directory தொடங்கினார்கள். பல காரணங்களால் அவர்களால் ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு தொடர்ந்து நடத்த முடியவில்லை. நான் 30 ஆண்டு காலமாக இந்த துறையில் வெற்றி பெறுவதற்கு காரணம் என்னுடைய Systematic Work. தற்போது நான் வெளியிடும் Cinema Variety Directory ஆனது 2 பாகங்களை கொண்டு 2300 பக்கங்களில் தயாராகி உள்ளது. பாகம் 1 ஆர்ட்டிஸ்ட் தொடர்பாகவும், பாகம் 2 டெக்னிஷியன்கள் தொடர்பாகவும் வெளிவந்துள்ளது. இதுவரை நான் 28 எடிசன்களை வெளியிட்டுள்ளேன். 2021ம் ஆண்டு மட்டும் கொரோனாவால் நான் வெளியிடவில்லை. 2022ம் ஆண்டிற்கான Cinema Variety Directory அடுத்த மாதம் வெளியிடுகிறேன்.அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் நூலகங்களில் எனது புத்தகத்தை வாங்கி வைத்துள்ளனர். சினிமாத்துறை என்னவென்று யாரும் கேட்டால், அவர்களிடம் சினிமாவின் Cinema Variety Directory கொடுத்தால் போதும் அனைத்தும் தெரிந்து விடும் என்று நம்பிக்கை எனக்கு எப்போதும் உள்ளது

    28 பதிப்புகள், 30 ஆண்டுகள்

    28 பதிப்புகள், 30 ஆண்டுகள்

    கேள்வி: Cinema Directory ஐ எந்தெந்த மொழிகளில் வெளியிட்டு உள்ளீர்கள்?

    பதில்: இந்த Cinema Variety Directory தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் 1995ம் ஆண்டு முதல் 5 எடிசன்களை வெளியிட்டுள்ளேன். ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் பணிபுரிவதால் தமிழில் வெளியிடுவது தாமதமானது. அதனால் தெலுங்கில் வெளியிடுவதை நிறுத்தி விட்டேன். பின்பு மலையாளத்தில் 2008ம் ஆண்டு முதல் இந்த Cinema Variety Directory வெளியிட்டு வருகிறேன். தென்னிந்தியாவை பொறுத்தவரை 28 எடிசன்கள் வெளியிட்டு, 30 வருடங்கள் பயணித்த ஒரே நபர் நான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்கிறேன்.

    சிறந்த மனிதர் நாகேஷ்

    சிறந்த மனிதர் நாகேஷ்

    கேள்வி: Cinema Variety Directory குறித்து பாராட்டியவர்களில் உங்களால் மறக்க முடியாத நபர்?

    பதில்: அவ்வாறு கூறவேண்டுமென்றால் பட்டியல் ரொம்ப பெரிதாக இருக்கும். நான் முதன்முதலாக நடிகர் மற்றும் டெக்னீஷியன்களுக்கு விருது வழங்கும் விழாவை 2000ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறேன். இது வரை 8 விருதுகள் வழங்கும் விழாவை நடத்தியிருக்கிறேன். சமீபகாலமாக தான் டிவி சேனல்கள் நடத்தி வருகிறார்கள். என்னுடைய விருது வழங்கும் விழாவிற்கு ஏ.வி.எம். சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். நேரம் என்பது அவருக்கு ரொம்ப முக்கியமானது. அவர் கூறுகையில், Cinema Variety Directory வந்தபிறகு புரோடக்ஷன் மேனேஜர் வேலை எளிமையாகி விட்டது என்பார். என்னை மிகவும் கவர்ந்த சிறந்த நடிகர் நாகேஷ் மற்றும் தியாகராஜன்.நாகேஷ் சிறந்த மனிதர் என் உழைப்பை தட்டி கொடுத்தவர் . என்னுடைய விருது விழங்கும் விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.வி.ஆனந்த், நடிகர்கள் நாகேஷ், விக்ரம், சூர்யா, சமுத்திரக்கனி, தியாகராஜன், பிரசாந்த், குமரிமுத்து மற்றும் இப்ராகிம் இராவுத்தர் உள்பட 4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். விருதுகள் வாங்குவதை விட விருதுகள் கொடுப்பதில் தான் சந்தோஷம். ஒரு விழாவில் நடிகர் ஜெயம் ரவிக்கு சிறந்த நடிகர் என்று விருதும், நடிகை அசினுக்கு சிறந்த நடிகை என்றும் விருதும் வழங்கியுள்ளோம்.

    Data முக்கியம்

    Data முக்கியம்

    கேள்வி: Cinema Variety Directory இல்லாமல், வேறு ஏதாவது புத்தகங்கள் வெளியிட்டு உள்ளீர்களா?

    பதில்: Cinema Directory இல்லாமல் லெதர் இண்ட்ஸ்டரி தொடர்பாகவும், எம்.ஜி.ஆர். குறித்த புத்தகங்களும், திரையுலகத்தில் உள்ள அதிசயங்கள் என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளேன்.

    எந்தவொரு வேலையையும் தனித்துவமாக நாம் செய்தால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். நான் யாரை பார்த்தாலும் மொபைல் நம்பரை வாங்கி விடுவேன். Data என்பது முக்கியம். அவற்றை நாம் சரியாக பயன்படுத்தினால் நாம் தனித்துவமாக காணப்படுவோம். இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் எனது மனைவி மற்றும் எனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக தொழிலாளர்களும் தான் என்றார்.

    Mobile Application

    கேள்வி: தற்போது உள்ள டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்றாற்போல் நீங்கள் எவ்வாறு Cinema Variety Directory ஐ மாற்றியமைத்துள்ளீர்கள்?

    பதில்: நாங்களும் டிஜிட்டல் உலகத்துடன் இணைந்து பயணித்து வருகிறோம். 1994ம் ஆண்டு Varietydirectory.com என்ற வெப்சைட் மூலமாகவும், 2016ம் ஆண்டு முதல் Youtube மூலமாகவும் செயல்படுத்தி வருகிறோம். மேலும் Instagram, Whatsapp, Mobile Application மூலமாக Cinema Variety Directoryஐ செயல்படுத்தி வருகிறோம். புத்தகம் வடிவில் வெளியிடும்பொழுது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும். ஆனால் டிஜிட்டல் உலகில் வருடத்திற்கு 2 அல்லது 3 முறை மாற்றம் செய்ய முடியும். குறிப்பாக ஒரு ஆர்ட்டிஸ்ட் தனது Make Up Change குறித்த தகவல்களை மாற்ற முடியும் என்றார் Variety Directory நிறுவனர் வர்க்கீஸ்.இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/Bl4Tf_w-RLc இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் Cinema Variety Directory நிறுவனர் வர்க்கீஸ் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    Production Manager Varghese Shares his Experience in Special Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X