சோனியா அகர்வாலின் புதிய காதலர்.. வீடியோ சாட்டில் காதல் மழை.. இது வெறும் டீசர் மட்டும் தான்!
சென்னை: சோனியா அகர்வால் தனது புதிய காதலருக்கு ஐ லவ் யூ என சொல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அவர், செல்வராகவனையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால், அவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் தொடரவில்லை. இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விட்டனர்.
தனுஷுக்கு ஜோடியாக மட்டுமின்றி சிம்புவுக்கு ஜோடியாக கோவில் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக மதுர படத்திலும் சோனியா அகர்வால் நடித்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில், சில சீரியல்களிலும் சோனியா அகர்வால் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான அருண் விஜய்யின் தடம் படத்தில் அருண் விஜய்க்கு அம்மாவாக நடித்து தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ள நடிகை சோனியா அகர்வால், நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியின் புரொமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.
அவர் யாருக்கு ஐ லவ் யூ சொல்கிறார் என்பதை வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..


Click it and Unblock the Notifications











