twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெறும் 2 நாள்தாங்க நடித்தேன்.. அடேங்கப்பா.. என்னா அனுபவம்.. சிலிர்க்கும் 'சைக்கோ' ப்ரீதம்!

    |

    சென்னை : சைக்கோ படத்தில் வெறும் 2 நாட்கள் மட்டுமே நடித்தேன் என்று ப்ரீதம் கே சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

    இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி மக்களை இருட்டில் அழைத்து கதை சொல்லி கிரங்கடித்திருக்கும் படமான சைக்கோ நம் மனதில் இன்னும் நின்று கொண்டு தான் இருக்கிறது. படத்தில் ஆபாச வார்தைகள், இரத்த காட்சிகள் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிதும் பழக்கப்படாத படமாக வந்திருந்தாலும் சைக்கோ படத்திற்கு நல்ல ஆதரவே கிடைத்து இருக்கிறது.

    இந்த படத்தில் உதயநிதி, அதிதி, நித்யா, சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் என பல முக்கிய நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இதில் ரேச்சல் எனும் கதாபத்திரத்தில் மேடை நாடக ஆசிரியர் ப்ரீதம் கே சக்கவர்த்தி நடித்து இருந்தார். படத்தின் இரண்டாம் பாதியில் வந்து சில காட்சிகளே நடித்து இருந்தாலும் மிக முக்கியமான தாக்கம் நிறைந்த நடிப்பை கொடுத்திருந்தார்.

     நாடக கலைஞர்

    நாடக கலைஞர்

    இவர் சென்னை துவங்கி பல்வேறு நகரங்களில் இருந்து இயங்கும் மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறார். சில வருடங்களாக இவர் மேடை நாடகங்களுக்கும் பல நடிப்பு குழுவில் இருக்கும் நடிகர்களுக்கும் நடிப்பு கற்று தந்து வருகிறார். இவரை இயக்குனர் மிஷ்கின் சைக்கோ படத்திற்காக அழைத்து நடிக்க வைத்து இருக்கிறார். சைக்கோ படத்தில் சுய இன்பம் பற்றி ரேச்சல் கதாபாத்திரம் பேசும் காட்சிகள் தமிழ் சினிமாவிற்கு மிகவும் அறிதான ஒன்று. ஏனெனில் பல வருடங்களுக்கு முன் இயக்குனர் பாலசந்தர் படத்தில் நிரோத் பற்றிய வசனமே மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது

     அடிப்படை அறிவு

    அடிப்படை அறிவு

    சமீபத்தில் இயக்குனர் ராமின் தரமணி படத்தில் கூட சுயமைத்தனம் எனும் வசனத்தை வைத்திருப்பார் ராம். இந்த மிகுந்த கவனத்திற்கு கூறிய வசனங்கள் பற்றி கூறிய ப்ரீதம் தற்போது நிலவிவரும் சமூகத்தில் வன்கலவிகளும் பெண்கள் மீது நடத்தப்படும் பிரச்சனைகளும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு சுய இன்பம் மிகவும் மேலானது ,எனக்கும் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு கலவி பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும் அது நல்லது என்பது எனது பார்வை என்று கூறினார் ப்ரீதம் .

     தூங்காமல் நடித்தேன்

    தூங்காமல் நடித்தேன்

    மேலும் படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பேசிய ப்ரீதம். பாண்டிச்சேரியில் தான் படத்தின் இறுதிகாட்சி படமாக்கபட்டது ,அங்கு அமைக்கப்பட்டிருந்த செட்டை பார்த்ததும் நான் அதற்கேற்ற கதாபாத்திரமாக மாறிவிட்டேன். மேலும் இந்த படத்தில் ப்ரீதம் இரண்டு நாட்கள் தான் நடித்து இருக்கிறாராம். இரண்டே நாட்களில் மிஷ்கின் இவரது காட்சிகளை படமாக்கி விட்டாராம். மேலும் இரு நாட்கள் தூங்காமல் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல நடித்து கொடுத்து விட்டாராம் ப்ரீதம் கே சக்கரவர்த்தி .

     கதைக்கு தேவை

    கதைக்கு தேவை

    அடிப்படையில் ப்ரீதம் சிகரெட் பிடிப்பவர் என்றாலும் .ப்ரீதம் இந்த படத்திற்காக வெறும் 3 சிகரெட்டுகளை மட்டுமே குடித்தாராம். சிகரெட் பற்றி கூறும் போது சமூக பொறுப்பு வேண்டுமே என்பதற்கு பதில் கூறிய பீரிதம், நன்கள் அதாவது சர்ச்களில் இருக்ககூடிய பெண்கள் மற்றவர்களை சரியாக வழிநடத்தினாலும் அவர்களின் இல்லற வாழ்வில் அவர்களுக்கென கெட்டபழக்கங்கள் இருக்கும் அதன் வெளிப்பாடே படத்தில் ரேச்சல் கதாபாத்திரம் சிகரெட் குடித்ததற்காக காரணம் என விளக்கம் அளித்தார். மேலும் தான் அனைத்து நன்கள் பற்றியும் கூறவில்லை என தெளிவாக குறிப்பிட்ட சிலர் பற்றியே கூறுகிறேன் என்றார்.

     துணிச்சலான நடிப்பு

    துணிச்சலான நடிப்பு

    நடிப்பிற்காக தன் வாழ்வை அற்பணித்து பல நாடகங்களின் மூலம் தன் கலைப்பணியில் ஈடுபட்டு வந்த ப்ரீதம் கே சக்கரவர்த்தியை மிஷ்கின் சரியாக பயன்படுத்திவிட்டார். இதே போல சினிமாவின் மற்ற இயக்குனர்களும் இவரை சரியான முறையில் பயன்படுத்தி கொள்வார்களா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். மிஷ்கின் படத்தில் வித்தியாசாமாக , தைரியமாக , துணிச்சலுடன் நடித்த ப்ரீதம் அவர்களுக்கும் பல நல்ல கதாபாத்திரங்கள் அமைய வேண்டும். ப்ரீதம் அவர்களத் குடும்பத்தில் இன்னும் நிறைய மேடை நாடக கலைஞர்கள் உள்ளனர்.

     சூப்பர் மிஷ்கின்

    சூப்பர் மிஷ்கின்

    மிஷ்கின் பயன்படுத்திய இந்த திறமையான நடிகையை பல முன்னணி இயக்குனர்கள் பயன்படுத்த வேண்டும். ஹைதரபாத் மேடைகளில் ப்ரீத்தம் சக்கரவர்த்தி நடிப்பை பற்றி பாடம் எடுத்தால் பலர் கை கட்டுவார்கள். அவர் மேடை ஏறி நடித்தால் எத்தனையோ பேர் கை தட்டுவார்கள். அப்படி பட்ட ஒரு டெடிகேட்டெட் ஆர்ட்டிஸ்ட் தமிழ் மொழி பேசுவதிலும் , ஆங்கிலம் பேசுவதிலும் மிகவும் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Pritam K. Chakravarthy shared his experience in the film 'Psycho'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X