நிர்வாணமாக நடிக்க எந்த தயக்கமும் இல்லை.. சைக்கோ வில்லன் ராஜ்குமார்!
Recommended Video
சென்னை : சைக்கோ படத்தில் நிர்வாணமாக நடிக்க எந்த தயக்கமும் இல்லை என்று ராஜ்குமார் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.
சைக்கோ படம் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார் நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி. இந்த படத்தின் மைய்ய கதாபாத்திரமே இவர் தான், இவரின் சைக்கோ தனத்திற்காகவே படத்திற்கு சைக்கோ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது .

தமிழ் சினிமாவில் யாருமே நடிக்க தயங்கும் அதீத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும், அந்த படத்தில் சைக்கோ தனத்தின் உச்சம் சொல்லும் அந்த நிர்வாண காட்சிகளில் நடிகர் ராஜ்குமார் நடித்து இருக்கிறார். நடிகர் ராஜ்குமாருக்கு இயல்பிலேயே நன்கு உற்சாக குணம் இருப்பதாகவும். பல நேரங்களில் நண்பர்களுடன் வெளியூர் செல்லும் போதும் மது அருந்தி விட்டு நிர்வாணமாக ஆட்டம் போட்டதாகவும் கூறினார். மேலும், சைக்கோ படத்தில் நிர்வாணமாக நடித்ததை பற்றி எந்த தயக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.

மிஷ்கினின் பார்வை தான் சைக்கோ படம், இந்த படத்தின் வெற்றியை தான் எடுத்து கொள்ள போவதில்லை என்றும் இது முழுக்க முழுக்க மிஷ்கின் படம் அவர் என்னை படப்பிடிப்பின் போது எந்த பிரச்சனையும் இன்றி நன்றாக பார்த்து கொண்டார் என கூறினார். மேலும் மிஷ்கினை நான் படப்பிடிப்பின் போது எந்த விதத்திலும் தொந்தரவு கொடுத்து விட கூடாது என்பதற்காக படப்பிடிப்பின் போது மிக கவனமாய் இருந்தேன் என்றார் ராஜ்குமார்.

நான் படித்து முடித்து விட்டு பகுதி நேர மாடலாக இருந்தேன். மாடலிங் துறையில் நல்ல சம்பளம் கிடைத்ததால், பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு முழு நேர மாடலாக மாறினேன். ஆனால் நான் எதிர்பார்த்த படி வாய்ப்பு வராததால் மேடை நாடக பணியில் சில நாள் ஈடுபட்டு நடித்தேன்.
அப்போது தான் நான் மிஷ்கினை சந்தித்தேன். அன்றிலிருந்து சரியாக 5 வருடங்களாக மிஷ்கினின் உதவி இயக்குனராக பணியாற்றினேன். இந்நிலையில் தான் மிஷ்கின் பிசாசு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். தற்போது ராஜ் குமார் என்ற நடிகர் உருவாக மிஷ்கின் தான் காரணம் என்றார்.

மிஷ்கின் வித்தியாசமான இயக்குனர் அவரின் குழு தேர்வும் வித்தியாசமாக தான் இருக்கும். அவர் தங்களை அதிகமாக வெளிபடுத்தி கொள்ளும் நபர்களை தான் தனது குழுவில் இணைத்து கொள்வார். அதே போல அந்த குணாதிசயம் எனக்கும் இருந்ததால் எளிதில் மிஸ்கின் குழுவில் இணைந்து விட்டேன். மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். துப்பறிவாளன் வெற்றிபடத்தின் இரண்டாம் பாகமே இந்த துப்பறிவாளன் 2 . இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விஷால் மற்றும் பிரசன்னா நடித்துள்ளனர். இவர்களுடன் பல முக்கிய நடிகர்களும் நடித்து உள்ளனர். படம் 2020 மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











