சிம்பு கூட நல்லா சண்டை போடுவேன்.. புதுக்கோட்டையிலிருந்து சரவணன் ஹீரோயினா இவங்க.. அபர்ணா ஓபன் டாக்!
சென்னை: புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக "மலர்களே மலர வேண்டாம்.. ஓய்வெடுங்கள்" என பாடி ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசம் கவர்ந்தவர் தான் அபர்ணா பிள்ளை. ஆனால், ஒரு சில படங்களுக்குப் பிறகு ஒன் டைம் ஒண்டர் போல சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டார்.
நடிகர் சிம்புவின் கிளாஸ் மேட் என்றும் இருவரும் ஒரு விஷயத்துக்காக அடிக்கடி சண்டைப் போட்டுக் கொள்வோம் என்றும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

படிப்புக்காக நடிப்பை விட்டு விட்டதாகவும், அந்த நேரத்தில் சரியாக படங்களை தேர்வு செய்ய முடியாமல் போனது தான் சினிமாவில் தொடர முடியாமல் போக முக்கிய காரணம் என்றும் தனது பேட்டியில் அபர்ணா பிள்ளை கூறியுள்ளார்.
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் ஹீரோயினை மறக்க முடியுமா?: எஸ்.எஸ். ஸ்டான்லி இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தின் நாயகி அபர்ணா பிள்ளை தான். கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கழித்து சில யூடியூப் சேனல்களுக்கு அவர் அளித்த பேட்டிகள் வைரலாகி வருகின்றன.
தனுஷை பார்க்க ஹேப்பியா இருக்கு: 20 வருடங்கள் கழித்து சினிமாவில் தனுஷ் அடைந்திருக்கும் உச்சத்தை பார்க்கவே ரொம்ப ஹேப்பியா இருக்கு. அந்த நேரத்துல நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான் சினிமாவை விட படிப்பு முக்கியம் என அந்தப் பக்கம் போயிட்டேன். மேலும், சரியான படங்களை தேர்வு செய்யவும் என்னால முடியல. அதனால் தான் நடிப்பை விட்டுவிட்டேன் எனக் க்யூட்டாக கூறினார்.
சிம்புவுடன் சண்டை: சிம்புவின் பாட்டியும் என்னோட பாட்டியும் தோழிகள். சிம்புவும் நானும் ஒரே பேட்ச்மேட்ஸ் தான். எங்க இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும் இடமே டான்ஸ் தான். ஆண்களில் நீ பெரிய டான்ஸர் என்றும் பெண்களில் நான் பெரிய டான்ஸர் என்றும் சொல்லிவிட்டு செல்வேன். என் அளவுக்கு டான்ஸ் ஆட முடியாது என அப்போ ஜாலியா சண்டை போட்டிருக்கேன். ஆனால், அவருடன் சேர்ந்து நடிக்காதது வருத்தம் தான் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











