கண்டிப்பாக எல்லோர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.. புத்தம் புது காலை விடியாதா.. நதியா பூரிப்பு!

சென்னை : ஐந்து இயக்குனர்களின் குறுபடத்தொகுப்பாக, புத்தம் புது காலை விடியாதா என்ற படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. வித்யாசமான முயற்சியும் கதையும் கொண்டிருப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended Video

Putham pudhu kaalai vidiyaadha, Arjun Das, Joju, Nadhiya | Young Directors முயற்சி |Filmibeat Tamil

ஹலிதா ஷமீம்,பாலாஜி மோகன்,ரிச்சர்டு ஆண்டனி, சூர்ய கிருஷ்ணா, மதுமிதா ஆகியோர் இயக்கியுள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த தொடரில், நதியா, ஜோஜூ ஜார்ஜ், ரித்திகா, கெளரி கிஷன், அர்ஜூன் தாஸ் போன்றோர் நடித்துள்ளனர். நமது பிலிமிபீட் தளத்திற்கு கொடுத்த ஸ்பெஷல் கேள்வி பதில் இதோ..

ஒரு ஸ்பார்க் உண்டு

ஒரு ஸ்பார்க் உண்டு

கேள்வி : புத்தம்புது காலை விடியாதா.. இந்த படம் தியேட்டர்ல வந்துருக்கலாம்ன்னு நெனச்சிருக்கீங்களா ?

நதியா பதில்: இல்ல.. இது ஓடிடி தளத்துக்காவே உருவாக்கப்பட்டது. அதனால் இதில் நிறைய வித்யாசமான விஷயங்கள் இந்த படத்துல இருக்கு. இந்த 5 செக்மண்ட்லயும் நிறைய விஷயங்கள் இருக்கு. பாக்குற ஒவ்வொருத்தருக்கும் எதாச்சும் ஒரு விஷயம் அவங்க சம்பந்தப்பட்டதா இருக்கும். இது ஒன்னுமே புரிய மாட்டேங்குதுன்னு சொல்லவே முடியாது. ஆனா நிச்சயம் ஒரு ஸ்பார்க் தோனும்.

நான் கேக்குறது இதுதான்

நான் கேக்குறது இதுதான்

கேள்வி : இந்த படத்துல பெண்கள் பங்களிப்பு பத்தி உங்க கருத்து ?

நதியா பதில் : முன்னாடில்லாம் சினிமாவுல ஹேர் ட்ரஸர் மட்டும் தான் பெண்கள் இருப்பாங்க. இப்ப எல்லா துறையிலயும் எல்லா வேலைகளும் இறங்கி நல்லாவே டெடிகேட்டா பன்றாங்க. இந்த படத்துலயும் ரொம்ப நல்லாவே அவங்களோட கிரியேட்டிவிட்டிய குடுத்துருக்காங்க. ரொம்ப எனர்ஜியா இருப்பாங்க எல்லாரும். எப்பவும் அன்பும், பாசமா இருங்க அதான் நான் எல்லார்ட்டயும் கேக்குறது. எல்லாரும் சந்தோஷமா இருங்க..

அதெல்லாம் லக் தெரியுமா

அதெல்லாம் லக் தெரியுமா

கேள்வி : நதியா கூட நடிச்ச அனுபவம் எப்படி ?

ஜோசப் ஜார்ஜ் பதில் : அவங்க எனக்கு ஜோடியா நடிச்சது என்னோட லக்-ன்னு தான் சொல்லனும். ரொம்ப சந்தோஷம். இந்த படத்தோட கதை, திரைக்கதை எல்லாமே ரொம்ப யுனிக்கா சூப்பரா இருக்கு. இந்த கதையில நடந்த பலவிஷயங்கள் என் லைஃப் ல நிறைய விஷயங்களோட கனெக்ட் ஆச்சு

அதோட உண்மையான் பேரு வேற

அதோட உண்மையான் பேரு வேற

கேள்வி : அதுல நாய் கூட நடிக்கற மாதிரி ஒரு சீன் இருந்துச்சே?

அர்ஜூன்தாஸ் பதில் : ஆக்சுவலா எனக்கு நாய்ன்னாலே ரொம்ப பிடிக்கும். படத்துல அந்த நாய் ஒரு முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கு. அதோட கேரக்டர் பேரு டூட். அதோட ரியல் பேரு ரோஜன். என்னோட பெட் எப்படி எனக்கு ரொம்ப க்ளோஸோ.. அது போல ரொம்ப ஒரு நெருக்கமான உணர்வு குடுத்துச்சு. நல்லா நடிச்சிது. ரொம்ப அழகான சீன் ல்லாம் இருந்துச்சு. இவ்ளோ பெரிய டீம், ஆக்டர்ஸ் கூட ஒர்க் பண்ணதே ரொம்ப நல்ல டீம் என்று கலகலப்பாக கலந்துரையாடினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X