ரஜினி மாதிரி ஒரு நேர்மையான நடிகரை பார்க்க முடியாது.. நெகிழ்ந்த பிரபல தயாரிப்பாளர்!
சென்னை : தமிழ் திரைப்படத்துறையில் பலருக்கும் நடிகராக அறிமுகமான பிரமிட் நடராஜன் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை பல முன்னணி கதாநாயகர்களை வைத்து தயாரித்துள்ளார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு வரை படங்களை தயாரித்து வந்த நடராஜன் திடீரென படங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு தற்பொழுது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினிகாந்தை போன்ற ஒரு நேர்மையான நடிகரை பார்க்க முடியாது என ரஜினியுடன் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பற்றி மகிழ்ந்து கூறியிருந்தார்.

பிரமிட் நடராஜன்
இயக்குனர் இமயம் கே பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி வந்த பிரமிட் நடராஜன் தமிழ் ரசிகர்களால் பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட குணச்சித்திர நடிகராக இன்று வரை வலம் வருகிறார்.

சிறந்த நடிகராக
மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தில் மாதவனுக்கு அப்பாவாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடராஜன் அதன்பின் பல்வேறு திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு சிறந்த நடிகராக பெயர் பெற்றிருந்தார்.

மிகப்பெரிய பொக்கிஷமாக
இவர் நடிகராக ஆவதற்கு முன் விநியோகஸ்தராக தயாரிப்பாளராகவும் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். அந்தவகையில் இவர் தயாரித்த படங்களான எட்டுப்பட்டி ராசா, பிஸ்தா, என் ஆசை ராசாவே, ரிதம், சங்கமம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பொக்கிஷமாக விளங்கி வருகிறார்.

தயாரிப்பதை நிறுத்தி விட்டார்
தொடர்ந்து பல திரைப்படங்களை தனது பிரமிட் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வந்த பிரமிட் நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு படங்களில் தயாரிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டு தற்பொழுது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

குறைவான சம்பளத்தை பெற்றார்
இந்நிலையில் தற்போது பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றிய சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இவரின் மேற்பார்வையில் நடக்க இருந்த ரஜினிகாந்தின் ஒரு படத்திற்கு ரூ 15 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு இந்த நிலையில், ஒரு நாள் ரஜினிகாந்தை சந்திக்கையில் அப்போது ரஜினிகாந்த் தான் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அந்த படத்திற்கு தான் ரூ 12.5 லட்சம் மட்டுமே சம்பளம் பெறுவதாகவும் தனக்கு அந்த சம்பளம் கொடுத்தால் மட்டும் போதும் என ஏற்கனவே பேசிய சம்பளத்தை விட மிகக் குறைவான சம்பளத்தை ரஜினிகாந்த் பெற்றார்.

தயாரிப்பாளர்களின் கஷ்டம் புரிந்து
இவ்வாறு அந்தப் பேட்டியில் திரைத்துறையை பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொண்டபோது தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு ரஜினி ஒரு படத்திற்கு தான் வாங்கும் சம்பளத்தை மட்டும் கொடுங்கள் போதும் என்று சொன்ன அந்த நேர்மையான மற்றும் யாரும் அறியாத சுவாரசியமான தகவலை பகிர்ந்துகொண்டு பேசியுள்ளார்.

சதவீதம் கணக்கில் பெற வேண்டும்
நடிகர்கள் அனைவரும் திரைப்படங்களுக்கு வாங்கும் சம்பளத்தை நேரடியாக பெறாமல் அவர்களின் திரைப்படங்களில் வரும் லாபத்தை சதவீதம் கணக்கில் பெற வேண்டும் என கூறி தயாரிப்பாளர்களை காக்குமாறு கோரிக்கையும் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











