ஐசரி கே. கணேஷ் கேட்டும் மறுத்தேன்.. மூக்குத்தி அம்மன் 2 விவகாரம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேட்டி!

சென்னை: சூர்யாவின் 45வது படமான 'கருப்பு' திரைப்படம் மே 14ந் தேதி வெளியாக உள்ளது. த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். கருப்பு வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படம் குறித்து பல விஷயத்தை பேசிய ஆர்.ஜே.பாலாஜி, மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்காதது குறித்து பேசி உள்ளார்

ஆர்ஜே.பாலாஜி: இதில், மூக்குத்தி அம்மன் முதல் பாகம் வெற்றி பெற்றதுமே இரண்டாம் பாகம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போதே நான் மூக்குத்தி அம்மன் 2 கதையை எழுதினேன். ஆனால், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பார்வையாளர்களால் எளிதில் ஊகித்துவிட முடியாத அளவில் வித்தியாசமாக இருக்க வேண்டும் யோசித்தேன். அப்போது தான், மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்திற்கான ஒரு கதைக்கரு (idea) எனக்கு கிடைத்தது. அதாவது இரண்டாம் பாகத்தில் தந்தை கதாபாத்திரம் வீட்டிற்குத் திரும்பிய பிறகு, தாய் கதாபாத்திரம் மீண்டும் கர்ப்பமடைவது தான்.

RJ Balaji instagram
Photo Credit:

மூக்குத்தி அம்மன் 2: ஏற்கனவே நான்கு குழந்தைகள் இருந்த நிலையில், இப்போது ஐந்தாவதாக ஒரு குழந்தை வரப்போகிறது. இந்தக் கதைக்கருவை நான் எனது சொந்த வாழ்க்கையிலிருந்தே எடுத்தேன். அதில் குடும்ப ரீதியான கலகலப்பையும், அதனுடன் உணர்வுபூர்வமான அம்சத்தையும் கலந்து இதை உருவாக்கினேன். அந்தச் சமயத்தில் தான், Badhaai Ho படத்தின் ரீமேக்கை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் கதைக்களமும் ஏறக்குறைய இதேபோலவே அமைந்திருந்ததால், அந்தப் படத்தை உருவாக்க நான் முடிவு செய்தேன்.

இதனால், மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, 'வீட்டுலவிசேஷங்க' படத்தை இயக்கினேன். அப்போது தான் ஐசரி கணேஷ் அவர்கள் என்னிடம் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்கும்படி கேட்டார். ஆனால், என்னிடம் அந்த நேரத்தில் என்னிடம் இல்லாததால் மறுத்துவிட்டேன். அதன் பிறகு தான் அந்த படத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார் என ஆர்.ஜி.பாலாஜி இந்த பேட்டியில் தெளிவாக கூறியுள்ளார்.

Read more about: karuppu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X