ரா ரா ராதா!
அறிமுகமாக பெரிய இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடிக்க வந்து பரபரப்பாகசெய்திகளில் அடிபடும் நடிகைகள் ரொம்பவே குறைச்சல். அந்த வரிசையில் ராதாவும்சேர்கிறார்.
இவர் அலைகள் ஓய்வதில்லை ராதா அல்ல, சூப்பர் ஹிட் படத்தில் அறிமுகமாகியும்கூட பெரிய அளவில் அறியப்படாமல் போய் விட்ட சுந்தரா டிராவல்ஸ் நாயகி ராதா.முதல் படமான சுந்தரா டிராவல்ஸ் பெரிய ஹிட் படம். ஆனால் அதில் நடித்தராதாவுக்குத்தான் அடுத்தடுத்து படங்கள் வராமல் போய் விட்டது. அதற்கு ராதாவின்பெர்சனல் குழப்பங்கள்தான் முக்கியக் காரணம் என்று அப்போது சலசலப்பு எழுந்தது.படப்பிடிப்பின்போது ஏகப்பட்ட பந்தாக்கள் செய்கிறார், கால்ஷீட்டை சொதப்புகிறார்,அடாவடியாக நடந்து கொள்கிறார் என்று புகார்கள் கிளம்பவே ராதாவை நாட யாரும்விரும்பவில்லை. இப்படித்தான் போண்டியானது ராதாவின் மார்க்கெட்.
இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ராதா களம் கண்டுள்ளார்.சத்யராஜ் நடிக்கும் அடாவடி என்ற படத்தில் ராதாவும் இருக்கிறார்.இதில் சத்யராஜுடன் சேர்ந்து குத்தாட்டம், குடையாட்டம் என்று கலக்கிஎடுத்துள்ளாராம் ராதா. என்னப்பா ரொம்ப நாளா காணோம் என்று ராதாவிடம் குசலம்விசாரித்தால், வாய்ப்பு நிறைய வந்தது. ஆனால் ஓவர் கிளாமருக்கு வலைவிரித்தார்கள். அது எனக்கு சரிப்படாது என்பதால்தான் பெரிய கேப் விழுந்து போச்சுஎன்று ஆரம்பித்தார்.
ஆஹா என்று நாம் இழுப்பதற்குள்ளாக அவரே தொடர்ந்தார். தமிழில்தான் நான்அதிகம் நடிக்கவில்லையே தவிர கன்னடத்திலும், தெலுங்கிலும் நிறையநடித்துள்ளேன். கன்னடத்தில் எனக்கு பிடித்தமான கேரக்டர்கள் நிறையவே வந்தன.தமிழைப் போல அங்கு கிளாமர் காட்டுமாறு அதிகம் வற்புறுத்த மாட்டார்கள்தெரியுமா? என்று நம்மிடம் ஆச்சரியம் காட்டினார்.
சரி, இப்ப மட்டும் தமிழுக்கு எதுக்கு வந்தீங்க என்று கேட்டபோது, சத்யராஜுடன்நடிக்கும் வாய்ப்பு என்பதால்தான் வந்தேன். இதில் நான் கிளாமராகவும்நடித்துள்ளேன். அதேசமயம் எனக்கு நடிக்கவும் நல்ல வாய்ப்பு. எனவேதான் இந்தவாய்ப்பை தட்டாமல் ஏற்றுக் கொண்டேன் என்கிறார் ராதா.
ஆனால் நடிக்க வாய்ப்பு என்பதை விட கிளாமருக்குத்தான் ஏகப்பட்ட வாய்ப்பு போலஉள்ளதே என்று இழுத்தால், அதான் சொன்னேனே கிளாமரும் இருக்கிறது என்றுகுசும்பாக புன்னகைத்து சமாளித்தார்.
பரவாயில்லை, பேசக் கூட கற்றுக் கொண்டு விட்டார்.
சரி, விடுங்க.


Click it and Unblock the Notifications











