»   »  நானா அப்படி?-சீறும் ராதிகா

நானா அப்படி?-சீறும் ராதிகா

Subscribe to Oneindia Tamil

என்னுடன் ஆபாசப் படத்தில் நடித்ததாக கூறப்படும் போஸுக்கு வயசு 60. எனக்கோ 25. இப்படி இருக்கையில் எப்படி அது சாத்தியமாகும் என்றுசூப்பர் கேள்வி கேட்டுள்ளார் சீன் படத்தில் நடித்ததாக கைதாகி விடுதலை ஆன டிவி நடிகை ராதிகா.

சமீபத்தில் சென்னை விபச்சாரத் தடுப்புப் போலீஸார் டிவி நடிகை ராதிகாவை விபச்சாரம் செய்ததாகவும், ஆபாசப் படத்தில் நடித்ததாகவும் கூறி கைதுசெய்தார்கள். அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது ராதிகா ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

நடிகை பாபிலோனா, ராதிகா ஆகியோர் நடித்த ஆபாசப் பட சிடிக்களை காவல்துறை ஆணையருக்கு புகாராக அனுப்பிய முரளி என்பவர் கொடுத்தபுகாரின் பேரில்தான் ராதிகாவைப் போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தன்னை பொய் வழக்கில் சிக்க வைத்து இழிவுபடுத்தி விட்டதாக கூறி மாநில மனித உரிமை ஆணையத்தில் ராதிகா புகார்கொடுத்துள்ளார்.

புகார் கொடுத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராதிகா குமுறலுடன் தனது கதையைச் சொன்னார். எனக்கு சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம்வத்தலக்குண்டுக்கு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி சார். பிளஸ்டூ வரை படித்துள்ளேன்.

பஞ்ச கல்யாணி படத்தை எடுத்த மணாளன் என்பவரது மகன் நாசரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டேன். எனது கணவர் டப்பிங் படங்களைஎடுத்து வருகிறார். நானும் ஒரு நடிகை. கடந்த 7 வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்கள், 5 டிவி தொடர்களில் நடித்துள்ளேன்.

இப்போது சொர்க்கம், நிம்மதி, லொள்ளு சபா, மைடியர் பூதம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறேன். நான் கீதாஞ்சலி (ராஜ் டிவியில் வந்தது)தொடரில் நடித்தபோது, ஒரு நிறுவனத்தின் ஸ்டெனோவாக நடித்தேன். அந்த தொடரில் நிறுவன முதலாளி ஒரு பெண் வெறியன். மற்றபெண்களைப் போல என்னையும் அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கெடுத்து விடுவார்.

என்னைப் போல வேறு எந்தப் பெண்ணும் ஏமாறக் கூடாது என்று பெண்களுக்கு அறிவுரை சொல்வது போன்ற கேரக்டரில் நடித்தேன்.

எனக்கு ஆபாசமாக நடிக்கத் தெரியாது, நான் விபச்சாரி இல்லை. நிர்வாணப் படத்தில் நான் நடித்தாக கூறுவதில் உண்மையே இல்லை, சுத்தப்பொய்ங்க.

ஒரு வேளை எனது முகத்தை கிராபிக்ஸ் மூலம் கட் செய்து ஆபாசப் பெண்ணின் உடலில் ஒட்டியிருக்கலாம். அதை விட முக்கியமாக என்னுடன்ஆபாசப் படத்தில் நடித்ததாக கூறப்படும் போஸ் வேறு யாருமல்ல எனது உறவினர்தான்.

அவருக்கு 60 வயதாகிறது. எனக்கோ 25 வயதுதான் நடக்கிறது. அப்படி இருக்கையில், எப்படி நாங்கள் ஆபாசப் படத்தில் நடிக்க முடியும்.? அதுஎப்படி சாத்தியமாகும்?

நான், எனது கணவர், எனது தம்பி ஆகியோர் கடுமையாக உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். பிறகு எதற்கு தவறான வழிக்கு நாங்கள் போகவேண்டும்?

நான் ஆபாசப் படத்தில் நடித்தததால் கைதானதாக செய்தி வந்தது. அதை பெரிய போஸ்டராக அடித்து எனது ஊரில் ஒட்டி விட்டனர். இதனால்சென்னையில் மட்டுமல்லாமல் எனது சொந்த ஊரிலும் பெயரை நாறடித்து விட்டனர்.

இதைச் செய்தது எனது உறவுக்காரர்கள்தான். அவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். மனித உரிமை ஆணைய விசாரணையில் அவர்கள் வெட்டவெளிசத்திற்குக் கொண்டு வரப்படுவார்கள்.

எனது கலையுலக வாழ்க்கையில் இதுவரை ஒரு கரும்புள்ளி கூட விழுந்ததில்லை. எந்த வழக்கும் என் மீது இல்லை. முக்கியமா, விபச்சார வழக்கேகிடையாது.

யாரையும் நான் ஏமாற்றவில்லை, யாரிடமும் நான் மோசம் போனதில்லை. எனக்குக் கவர்ச்சியாகக் கூட நடிக்கத் தெரியாதுங்க. அப்படிஇருக்கையில் எப்படி நிர்வாணமாக நடிப்பேன்?

என்னிடம் ஒரு பெண்ணிடம் கேட்கக் கூடாது அறுவறுப்பான கேள்விகளை எல்லாம் கேட்டு, கொடுமைப்படுத்தி, சித்திரவதைப்படுத்தி சிறையில்அடைத்தனர்.

இதனால் எனக்குப் புதிய சிக்கல் வந்துள்ளது. சினிமா டெலிபோன் டைரக்டரியில் உள்ள எனது செல்போன் எண்ணைத் தேடிப் பிடித்து பலரும்ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புகின்றனர்.

கிழக்குக் கடற்கரைச் சாலைக்குப் பின்னால் வா, அங்கே குடித்து விட்டு ஜாலியாக இருப்போம் என்றெல்லாம் மெசேஜ் வருகிறது. பெரும் மனஉளைச்சலாகப் போய் விட்டது இந்த வழக்கால் என்று புலம்பினார் ராதிகா.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil