»   »  குட்டி ராதிகாவிடம் ரூ.20 கோடி!!

குட்டி ராதிகாவிடம் ரூ.20 கோடி!!

Subscribe to Oneindia Tamil

தனது வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது ஆச்சரியமாக உள்ளதாக நடிகை குட்டி ராதிகா கூறியுள்ளார்.

தமிழில் இயற்கை படம் மூலம் அறிமுகமான குட்டி ராதிகாவுக்கு தமிழில் சிறப்பான வறவேற்பு கிடைக்கவில்லை. இப்போது தனதுதாய்மொழியான கன்னட படங்களில் திறமை காட்டி வருகிறார். இந் நிலையில் நேற்று முன் தினம் பெங்களூரில் உள்ள குட்டி ராதிகாவின் வீட்டில்திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இச் சோதனையில் ரூ. 3.5 கோடி ரொக்கமும், பல்வேறு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் பொங்களூர்டாலர்ஸ் காலனியில் ராதிகா ரூ. 16 கோடி மதிப்பில் ஒரு வீடு வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

சினிமா வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ள ஒரு நடிகையிடம் இவ்வளவு பணம் குறுகிய காலத்தில் சேர்ந்தது எப்படி என்பது ஆச்சரியத்தைஏற்படுத்தியுள்ளது. இப்போது கன்னடத்தில் மட்டுமே சில படங்களில் அவர் நடிக்கிறார். ஒரு படத்துக்கு சம்பளமே சில லட்சங்கள் தான்.

இந் நிலையில் வருமான வரி சோதனை குறித்து குட்டி ராதிகா கூறுகையில்,

என வீட்டில் இரவு 10.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். வரவு, செலவுக்கான ஆவணங்களை என்னிடம்இருந்து சேகரித்தனர். சுமார் 5 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. ஆனால், என்னிடம் எந்த தவறும் இல்லை. எனது வீட்டில் சோதனைநடத்தியது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

நான் கன்னடத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளேன். ஒவ்வொருபடத்துக்கும் ரூ. 8 முதல் ரூ. 10 லட்சம் வரை சமபளம் வாங்கி இருக்கிறேன்.

தற்போது டாலர்ஸ் காலணியில் 5 படுக்கை அறைகள் கொண்ட வீடு வாங்கி புதுப்பித்து வருகிறேன். அந்த வீட்டுக்கான ரூ. 16 கோடியை நான்இன்னும் கொடுக்கவில்லை. கட்டடம் உள்ள இடம் கூட இன்னும் எனக்கு சரியாகத் தெரியாது. ஒரே ஒரு முறை தான் நான் அங்கு சென்றுள்ளேன்என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil