»   »  எனது சீரியல்களில் தேவிபிரியா தொடர்ந்து நடிப்பார்: ராதிகா

எனது சீரியல்களில் தேவிபிரியா தொடர்ந்து நடிப்பார்: ராதிகா

Subscribe to Oneindia Tamil

தேவிப்பிரியாவுக்கு நான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்குஎதுவும் தெரியாது. ஒரு நடிகையாக அவர் தொடர்ந்து எனது சீரியல்களில் நடித்து வருகிறார், நடிப்பார் என்று கூறியுள்ளார் நடிகை ராதிகா.

கோழி வில்லியம் ஐசக் விவகாரத்தில் சிக்கி சிறிது காலம் தலைமறைவாக இருந்த தேவிப்பிரியா சமீபத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன்பெற்றார். அவர் தலைமறைவாக இருந்தபோது, நடிகை ராதிகாதான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக பேச்சு கிளம்பியது.

ராதிகாதான் தேவிப்பிரியாவுக்கு ஆதரவாக இருந்தார், அவரது கல்யாணத்தைக் கூட ரகசியமாக ஏற்பாடு செய்து கொடுத்தவரும் அவர்தான்என்றும் கூறப்பட்டது. ராதிகாவின் தொடர்களான செல்வி, அண்ணாமலை, அரசி ஆகியவற்றில் தேவிப்பிரியாவுக்கு சூப்பர் கேரக்டர்கள்கொடுக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

தேவிப்பிரியா விவகாரத்தில் உங்களது பெயர் அடிபடுகிறதே என்று ராதிகாவை அவரது அலுவலத்தில் சந்தித்துக் கேட்டோம்.

அதற்கு ராதிகா பதிலளிக்கையில், தேவிப்பிரியா ஒரு நடிகை, அவரது தனிப்பட்ட விவகாரங்களில் நான் தலையிட்டதில்லை. தலையிடவும்மாட்டேன். அவரது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு நான் ஆதரவும் தர மாட்டேன்.

ஏன் இப்படி ஒரு அடிப்படை இல்லாத செய்திகள் கிளம்புகிறதோ தெரியவில்லை. தேவிப்பிரியாவை எனக்கு நடிகையாக மட்டுமே தெரியும்.அவரது திறமையைப் பார்த்துத்தான் எனது தொடர்களில் நடிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. மற்றபடி அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்குஎதுவும் தெரியாது. அது எனக்குத் தேவையும் இல்லை.

இப்படி இருக்கையில், நான் எப்படி அவருக்கு அடைக்கலம் தர முடியும்.? இது அடிப்படையே இல்லாத ஒரு வதந்தி. ஒரு நடிகையாக எனதுதொடர்களில் தேவிப்பிரியா தொடர்ந்து நடிப்பார். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதேசமயம், நடிப்புக்கு பாதகம் இல்லாமல்பார்த்துக் கொள்ளும்படி அவரிடம் நான் அறிவுரை கூறுவேன் என்றார் ராதிகா.

அப்ப இத்தனை நாள் தேவிப்பிரியா எங்குதான் இருந்தார்???

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil