நடிகையுடன் ராத்திரியில் பைக்கில் சுற்றிய ரஜினி.. காரை வைத்து இடிக்க போன அனிருத்தின் அப்பா.. இது எப்போ?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் என்றே கொண்டாடப்படுகிறார். நம்பிக்கையுடன் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர் இன்றைக்கு சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். அவர் குறித்த பல சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரஜினி , ஒருமுறை நடிகை ராதிகாவுடன் நள்ளிரவில் பைக்கில் சென்னையில் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது இசையமைப்பாளர் அனிருத்தின் அப்பா ரஜினி மீது காரை மோதுவது போல வேகமாக வந்து காரை நிறுத்தி உள்ளார். இந்த சம்பவம் குறித்து நடிகை ராதிகா அளித்த சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராதிகா பகிர்ந்து கொள்ளும் போது, " ரஜினியின் இருவேறு முகங்களை நான் பார்த்துள்ளேன். நான் அவரை ரஜினி என்றுதான் கூறுவேன். அது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும், ஆனாலும் நான் ரஜினி என்றுதான் கூறுவேன். நான், நடிகை ஸ்ரீதேவி, ரஜினி என மூவரும் இரவு நேரங்களில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் இருந்து வீட்டிற்கு காரில் வேகமாக ரிட்டன் ஆவோம்.

பைக்கில் ரவுண்ட்ஸ்: ஒருமுறை நானும் ரஜினியும் அவரது பைக்கில் இரவு நேரத்தில் சென்னையைச் சுற்றிக் கொண்டு இருந்தோம். அப்போது, ரஜினி இங்கு நான் படுத்து தூங்கி இருக்கிறேன். இங்கு தங்கி இருக்கிறேன். இங்கு சாப்பிட்டு இருக்கிறேன். எனக்கு இந்த இடத்தில் இப்படியான சம்பவம் நடைபெற்றது என்று எல்லாம் சொல்லி வருகிறார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பலரது கஷ்டங்கள் குறித்து தெரியும், ஆனாலும் ரஜினி மிகவும் கஷ்டப்பட்டுதான் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
அனிருத்தின் அப்பா: இப்படி நாங்கள் பைக்கில் சுற்றிக் கொண்டு இருந்தபோது, ஒரு கார் எங்களை நோக்கி வேகமாக வந்தது, சடன் பிரேக் அடித்து நின்றது. இதைப் பார்த்ததும் எனக்கு பதறி விட்டது. யார் என்று பார்த்தால் ரஜினியின் மனைவி லதாவின் சகோதரர் ( அனிருத்தின் அப்பா). அவருக்கு என்னவென்றால் ரஜினி நடுராத்திரியில் ஒரு பெண்ணுடன் பைக்கில் சுற்றிக் கொண்டு இருக்கிறார் என்ற எண்ணத்தில் காரை வேகமாக கொண்டு வந்து நிறுத்தி உள்ளார். ஆனால் நானும் ரஜினியும் வந்தது லதாவுக்கு தெரியும்" என்று தெரிவித்தார். இந்த சுவாரஸ்யமான சம்பவம் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











