நமிதாவை தூக்குவதைப் பார்த்து சரத்குமாரிடம் ராதிகா சொன்ன அந்த வார்த்தை.. மனுஷன் மறக்காம செஞ்ச விஷயம்

சென்னை: சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் தம்பதியர் தங்களது 25 வது திருமண ஆண்டை கொண்டாடினர். இது தொடர்பாக இருவரும் மாறி மாறி அன்பு ததும்ப ததும்ப தெரிவித்துக் கொண்ட வாழ்த்து இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படி இருக்கையில் நடிகை ராதிகா சரத்குமார் அண்மையில் அளித்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது சரத்குமார் மிகவும் அன்பானவர். எந்த அளவுக்கு அன்பு என்றால் அவரைச் சுற்றி உள்ள அனைவரையும் தொடர்ந்து சர்ப்ரைஸ் செய்து கொண்டே இருப்பார். குறிப்பாக, எனது பிறந்த நாளின் போதோ, அவரது பிறந்த நாளின் போதோ, அவர் வெளி ஊரில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தால், அவர் சர்ப்ரைஸ் கொடுப்பார்.

அதாவது நடு ராத்திரி போன் செய்து, யாரோ எனக்கு கிஃப்ட் அனுப்பி உள்ளார்களாம், எனக்கு போன் வந்தது. வீட்டு வாசலில் நிற்கிறார்கள். தயவு செய்து அந்த கிஃப்ட்டை மட்டும் வாங்கி வீட்டில் வைத்து விடு என்று கூறுவார். நானும் செம டென்ஷனில் இந்த ராத்திரியில் யாருடா கிஃப்ட் அனுப்புவது என்று கொஞ்சம் கடுப்பில் போய் வீட்டுக் கதவைத் திறப்பேன். போய் பார்த்தால், அவர் ( சரத்குமார்) நின்று கொண்டு இருப்பார். இப்படி எனக்கு மட்டும் இல்லாமல், மகள்களுக்கு, அம்மாவுக்கு அத்தைக்கு என தன்னைச் சுற்றி உள்ள அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார் என்று தெரிவித்தார்.

Radikaa Sarathkumar Recent Interview About Sarathkumar acts With Namitha
Photo Credit:

நமிதாவுடன் ஓவர் ரொமான்ஸ்: அந்த பேட்டியில் மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார். அதாவது, நான் செம பிஸியாக சின்னத்திரை விஷயங்களை கவனித்துக் கொண்டு, நடித்துக் கொண்டு, குடும்பத்தை பார்த்துக் கொண்டு செம பிஸியாகவும் பரபரப்பாகவும் இருக்கிறேன். அப்போது அவர் நமிதாவுடன் ஏய் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நமிதாவை தூக்கிக் கொண்டு நடனம் ஆடிக் கொண்டு இருக்கிறார். இது குறித்து நான் அவரிடம் ஒரு முறை கேட்டே விட்டேன். நமிதாவை தூக்குகிறீர்கள், என்னைத் தூக்க மாட்டீர்களா என்று கேட்டேன்.

மறக்காமல் சரத் செய்த விஷயம்: ஆனால் அவர் அதை மறக்காமல், நடிகர் சங்க நிகழ்ச்சி வெளிநாட்டில் நடைபெற்ற போது, என்னை அவர் தூக்கினார். அதுவும் ஒரே கையில் தூக்கினார்" என்று ராதிகா பகிர்ந்து கொண்டது தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல், பலரும் சரத்குமார் ரொம்பவும் ரொமான்டிக்கானவர் போலயே என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X