ரகஸ்யாவின் தீராதமாடலிங் ஆசை ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதெல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். சீக்கிரமே அதுக்கு மூட்டை கட்டி விடுவேன் என்றுஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார் ரகஸ்யா.மும்பையில் அவர் பாட்டுக்கு மாடலிங் செய்து கொண்டிருந்தவரைக் கூப்பிட்டு வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.ஸில் சரண், "சிரிச்சிசிரிச்சி வந்தா சீனா தானா டோய் என்று பாட வைத்தாலும வைத்தார், கோலிவுட்டின் ஹாட் கேக்காக மாறி விட்டார் ரகஸ்யா.இவருக்கு சினிமா விநியோகஸ்தர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் மவுசு கூடிக்கொண்டே போகிறது.விஜயகாந்தின் பேரரசு படத்தில் ரகஸ்யாவின் படு கவர்ச்சி ஆட்டத்திற்கு தனி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.இவருக்கு சிங்கிள் பாட்டுக்கு ஆடுவதில் எல்லாம் ஆரம்பத்தில் இஷ்டம் இல்லையாம்.கமல் படத்தில் ஆட கூப்பிடுகிறார்களே என்று தான் வந்து குத்தாட்டம் போட்டு விட்டுப் போனார். போன கொஞ்ச நாளிலேயே படமும் ஹிட்டாகி, பாட்டும் படு ஹீட்டாகபேசப்படவே, ரகஸ்யா சினிமாவில் பிசியாகி விட்டார்.தன்னைத் தேடி ஏகப்பட்ட குத்துப் பாட்டுக்கள் வருவதாக சந்தோஷமாக கூறும் ரகஸ்யாவுக்கு, மனசுக்குள் மாடலிங் மீது தான்இன்னும் ரகசியக் காதல் இருக்கிறதாம்.சீனா தானா பாட்டு இவ்வளவு ஹிட் ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கமல் படம் தானே என்று தான் ஆடினேன். ஆனால் இப்போது என் கையில் ஏகப்பட்ட படங்கள். எல்லாமே குத்துப் பாட்டுக்கள் தான்.பேசிக்கலி, எனக்கு டான்ஸில் அதிக ஆர்வம் உண்டு. அதனால் தான் வருகிற வாய்ப்புகளை விடாமல் ஒப்புக் கொண்டு ஆடிக்கொடுக்கிறேன்.ஆபாசம், குத்துப் பாட்டு என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. டான்ஸ் என்பது மட்டும் தான் எனது மனதில்தெரியும். அதில் ஆபாசம் இருக்கிறதா, இல்லையா என்பது பார்ப்பவர்களின் கண்களைப் பொருத்தது (அடடா!)வசூல் ராஜாவுக்குப் பிறகு சுக்ரன், தேவதையைக் கண்டேன் என ஏகப்பட்ட படங்களில் ஆடி விட்டேன்.இப்போது கையில் 6 படங்கள் இருக்கிறது. அத்தனையிலும் அட்டகாசமாக ஆட்டம் போட்டு வருகிறேன். இளமை இருக்கிறது, தீர்வதற்குள் தீர்த்துக்கட்டி விட வேண்டும் என்பதுதான் எனது பாலிஸி!இப்போது ஆடி வரும் படங்களிலேயே நான் மிகவும் ரசித்து ஆடியிருப்பது பிப்ரவரி 14 படத்தில் தான். அருமையான பாட்டு,நல்ல ட்யூன், டான்ஸும் எதிர்பார்த்ததற்கு மேலாக நன்றாக வந்திருக்கிறது.சிங்கிள் பாட்டுக்கு ஆடுவதிலும் ஒரு திருப்தி இருக்கத் தான் செய்கிறது. எனது உடல் வனப்பு தான் எனது பிளஸ் பாயிண்ட்என்றுசொல்கிறார்கள். கொஞ்ச நாள் ஆடுவேன். ஆட்டம் போரடித்து விட்டால் அப்புறம் இருக்கவே இருக்கிறது மாடலிங். அதிலும் ஒரு கலக்கு கலக்கிவிட்டுத் தான் ஓய்வேன் என்று ஒரே மூச்சில் கூறி நிறுத்தினார் ரகஸ்யா.எப்படியோ, கொஞ்ச நாளைக்கு ரகஸ்யா "நம்ம கூடத்தான்" இருக்கப் போறார், கவலையில்லை!!

By Staff

ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதெல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். சீக்கிரமே அதுக்கு மூட்டை கட்டி விடுவேன் என்றுஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார் ரகஸ்யா.

மும்பையில் அவர் பாட்டுக்கு மாடலிங் செய்து கொண்டிருந்தவரைக் கூப்பிட்டு வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.ஸில் சரண், "சிரிச்சிசிரிச்சி வந்தா சீனா தானா டோய் என்று பாட வைத்தாலும வைத்தார், கோலிவுட்டின் ஹாட் கேக்காக மாறி விட்டார் ரகஸ்யா.

இவருக்கு சினிமா விநியோகஸ்தர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் மவுசு கூடிக்கொண்டே போகிறது.

விஜயகாந்தின் பேரரசு படத்தில் ரகஸ்யாவின் படு கவர்ச்சி ஆட்டத்திற்கு தனி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

இவருக்கு சிங்கிள் பாட்டுக்கு ஆடுவதில் எல்லாம் ஆரம்பத்தில் இஷ்டம் இல்லையாம்.

கமல் படத்தில் ஆட கூப்பிடுகிறார்களே என்று தான் வந்து குத்தாட்டம் போட்டு விட்டுப் போனார். போன கொஞ்ச நாளிலேயே படமும் ஹிட்டாகி, பாட்டும் படு ஹீட்டாகபேசப்படவே, ரகஸ்யா சினிமாவில் பிசியாகி விட்டார்.

தன்னைத் தேடி ஏகப்பட்ட குத்துப் பாட்டுக்கள் வருவதாக சந்தோஷமாக கூறும் ரகஸ்யாவுக்கு, மனசுக்குள் மாடலிங் மீது தான்இன்னும் ரகசியக் காதல் இருக்கிறதாம்.

சீனா தானா பாட்டு இவ்வளவு ஹிட் ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கமல் படம் தானே என்று தான் ஆடினேன். ஆனால் இப்போது என் கையில் ஏகப்பட்ட படங்கள். எல்லாமே குத்துப் பாட்டுக்கள் தான்.

பேசிக்கலி, எனக்கு டான்ஸில் அதிக ஆர்வம் உண்டு. அதனால் தான் வருகிற வாய்ப்புகளை விடாமல் ஒப்புக் கொண்டு ஆடிக்கொடுக்கிறேன்.

ஆபாசம், குத்துப் பாட்டு என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை. டான்ஸ் என்பது மட்டும் தான் எனது மனதில்தெரியும். அதில் ஆபாசம் இருக்கிறதா, இல்லையா என்பது பார்ப்பவர்களின் கண்களைப் பொருத்தது (அடடா!)

வசூல் ராஜாவுக்குப் பிறகு சுக்ரன், தேவதையைக் கண்டேன் என ஏகப்பட்ட படங்களில் ஆடி விட்டேன்.

இப்போது கையில் 6 படங்கள் இருக்கிறது. அத்தனையிலும் அட்டகாசமாக ஆட்டம் போட்டு வருகிறேன். இளமை இருக்கிறது, தீர்வதற்குள் தீர்த்துக்கட்டி விட வேண்டும் என்பதுதான் எனது பாலிஸி!

இப்போது ஆடி வரும் படங்களிலேயே நான் மிகவும் ரசித்து ஆடியிருப்பது பிப்ரவரி 14 படத்தில் தான். அருமையான பாட்டு,நல்ல ட்யூன், டான்ஸும் எதிர்பார்த்ததற்கு மேலாக நன்றாக வந்திருக்கிறது.

சிங்கிள் பாட்டுக்கு ஆடுவதிலும் ஒரு திருப்தி இருக்கத் தான் செய்கிறது. எனது உடல் வனப்பு தான் எனது பிளஸ் பாயிண்ட்என்றுசொல்கிறார்கள்.

கொஞ்ச நாள் ஆடுவேன். ஆட்டம் போரடித்து விட்டால் அப்புறம் இருக்கவே இருக்கிறது மாடலிங். அதிலும் ஒரு கலக்கு கலக்கிவிட்டுத் தான் ஓய்வேன் என்று ஒரே மூச்சில் கூறி நிறுத்தினார் ரகஸ்யா.

எப்படியோ, கொஞ்ச நாளைக்கு ரகஸ்யா "நம்ம கூடத்தான்" இருக்கப் போறார், கவலையில்லை!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X