VJ சித்ரா மாதிரி நானும் சாகணும்.. பல முறை அப்யூஸ் பண்ணான்.. ரிஹானா கண்ணீர் பேட்டி!
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ், பொன்னி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிஹானா பேகம். இவர், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, 18 லட்சம் பணத்தை ஏமாற்றிவிட்டதாக தொழிலதிபர் ராஜ் கண்ணன் பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து நடிகை ரிஹானா பேகம், Puthiya Sinthanai யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், தொழில் தொடங்குவதற்காக நான் ராஜ் கண்ணன் அவர்களுக்கு என்னுடைய நகைகளை வைத்து இருவது லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தேன். அந்தப் பணத்தை அவர் திருப்பிக் கொடுக்காமல் என்னை ஏமாற்றி விட்டார். எனக்கு தெரியாமலேயே என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து பேசிய ரிஹானா, அவருடைய உண்மையான பெயர் ராஜ் கண்ணன் இல்லை அழகர்சாமி அவருடைய சொந்த ஊர் பெசன்ட் நகரில் இருக்கிறது. அங்கு அவர், மீது பல வழக்குகள் இருக்கிறது என்றார். அவருடைய காரில் பெரிய கத்தி இருப்பதை பார்த்து நான் மிகவும் பயந்துவிட்டேன். இவனிடம் என் பணம் இருக்கிறதே, அதை எப்படி வாங்குவது என்று தெரியாமல், நான் காதலிப்பது போல நடிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நாள் இப்படியே நடித்துவிட்டு, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வாங்கவிடலாம் என நினைத்து அவனிடம் தொடர்ந்து நடித்தேன்.

அவன் மோசமான ரௌடி: அவன் உடல் ரீதியாக என்னை பலமுறை அப்யூஸ் செய்தான். நடிப்பாக இருந்தாலும் அவன் மீது இருந்த பயத்தால் நான் அதற்கும் ஒப்புக் கொண்டேன். எப்படியோ போராடி அவனிடம் நான் கொடுத்த பணத்தில் 8 லட்சம் ரூபாயை திரும்பப்பெற்று விட்டேன். என்னுடைய மீதி பணத்தை எப்படி வாங்குவது என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்தேன். அந்த பணம் எனக்கு மிகவும் முக்கியம், அவை அனைத்தும், நான் கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்து சேர்த்து வைத்த பணம், அந்த பணத்தை திருப்பி வாங்குவதற்காகவே அவனின் பிறந்தநாள் அன்று கேக் வாங்கிக் கொண்டு சென்றேன். அன்று எனக்கும் அவனுக்கும் சண்டை வந்து அங்கிருந்து நான் கிளம்பு விட்டேன். ஆனால், அவன் என்னை காரில் பின்தொடர்ந்து கொண்டே வந்தான். வீட்டுக்கு வந்து அசிங்கப்படுத்திவிடுவானோ என்ற பயத்தில், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இரவு முழுக்க காரில் சுற்றிக்கொண்டே இருந்தேன்.
சாக முடிவு எடுத்தேன்: ஒரு கட்டத்தில் மனசு வெறுத்துப்போய்விட்டது, இதற்கு மேல் இருந்து என்ன செய்வது, இவன் கூட இருந்தால், அவமானப்பட்டு சாகவேண்டும் என அதற்கு மானத்தோடு பிஜே சித்ரா போல நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து தற்கொலை முடிவு எடுத்தேன். அப்போது, ராஜ் கண்ணனுக்கு அழுது கொண்டேன், இதற்கு மேல் என்னால், உன்னுடன் போராட முடியாது, என் வாழ்க்கையை நானே முடித்துக் கொள்கிறேன். என்னுடைய குழந்தைகளை பார்த்துக்கொள் என் பணத்தை வைத்து என்னுடைய குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள் என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். அதற்கு அவன், எப்பொழுது சாவ என்று கேட்டான். அதன் பிறகு தான் இவனுக்காக நாம் ஏன் சாகவேண்டும் என்ற எண்ணம் வந்தது, என் குழந்தைகளை நினைத்து அந்த முடிவை நான் மாற்றிக் கொண்டேன் என ரிஹானா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











