twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜா ராஜா சோழன் தான் பாடல் உருவாக இதுதான் காரணம்.. பல அர்த்தம் இருக்கு.. கவிஞர் மேத்தா!

    |

    சென்னை: 1980 - 1990 காலக்கட்டத்தில் வெள்ளி விழா திரைப்படமாக ஓடிய உதயகீதா, பன்னீர்புஷ்பங்கள், வேலைக்காரன், கேளடி கண்மணி உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியவர் கவிஞர் மு.மேத்தா.

    2006ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்ற இவர் புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களிடம் இவரும் ஒருவர்.

    இந்நிலையில் கவிஞர் மு.மேத்தா நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

     எங்கேயும் என்னை விட்டு கொடுக்காத கவிஞர் தான் வாலி.. கவிஞர் மேத்தா உருக்கம்! எங்கேயும் என்னை விட்டு கொடுக்காத கவிஞர் தான் வாலி.. கவிஞர் மேத்தா உருக்கம்!

    பூட்டி வைக்கக்கூடாது

    பூட்டி வைக்கக்கூடாது

    கேள்வி: நீங்கள் எழுதிய பாடல்களில் உங்களை கவர்ந்த பாடல் எது?

    பதில்: நான் எழுதிய பாடல்கள் எல்லாமே நான் ரசித்த வரிகள் தான். எனது பாடல் வரிகளைப் பற்றி என் ரசிகர்கள் கூறும் போது அந்த வரிகள் எனக்கும் மிகவும் அற்புதமான விஷயமாக இருக்கும். என்னுடைய பாடல்களில் எந்த வரிகள் பிடிக்கும், எந்த கருத்து பிடிக்கும், எது என்னுடைய சிந்தனை, எந்த மாதிரி எழுதக் கூடாது என ரசிகர்கள் எனக்கு கூறினால் அது எனது இலக்கிய பயணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனது சினிமா பயணத்திலும், இலக்கியப் பயணத்திலும் என்னை நேசிக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை நானும் நலமாக இருப்பேன். அவர்களுடைய அன்பு குறையாத அளவிற்கு என்னைத் தகுதியானவனாக வளர்த்துக் கொள்வேன். நம்மை நேசிக்கும் உயர்ந்த மனிதர்களை நமது உள்ளத்தில் பூட்டி வைக்கக் கூடாது, பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதிக பிரசங்கித்தனம்

    அதிக பிரசங்கித்தனம்

    கேள்வி: தற்பொழுது பாடல்களில் வரம்பு மீறுவது குறித்து ...

    பதில்: என் பாடல்களில் எப்பொழுதும் வரம்பு மீறும் வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. ஆனாலும் ராஜா ராஜ சோழன் பாடலில் ஒரு இடத்தில் நானும் 'முந்தானை மூடும் ராணி' எனும் வார்த்தைகள் இடம் பெற்றிருக்கலாம். இதுவே என்னுடைய அதிக பிரசங்கித் தனம் என நான் நினைத்ததுண்டு. இப்பொழுது கேட்கும் பொழுது அதை தவிர்த்திருக்கலாம் என நான் நினைப்பதுண்டு என்றார். மேலும் அவர் கூறுகையில், இரட்டைவால் குருவி எனும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ராஜ ராஜ சோழன் தற்போது மிகவும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. நான் ராஜாவாக இருந்தாலும் உனக்கு அடிமை என்று பாடுவதாக அமைந்த பாடல். இதில் சிறிது குறும்பு கலந்திருந்தாலும் சூழ்நிலை வரம்பு மீறாமல் எடுக்கப்பட்ட பாடல். பாடல்கள் எழுதுவதற்கு எனக்கு இடம் ஒரு பொருட்டல்ல. நான் நானாக இருக்க வேண்டும். நான் எழுதும் பாடல் எனக்கு பிடித்திருக்க வேண்டும் என்றார்.

    தீபம் ஒளிரும்

    தீபம் ஒளிரும்

    கேள்வி: பாடல் எழுதுவதற்கு பயிற்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது குறித்து...

    பதில்: இந்தியா முழுவதிலும் கூட பாடல்கள் எழுதுவதற்கு பயிற்சி அளிப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான். அது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. பாடலாசிரியர். பிரியன் அதற்கான முயற்சிகளை செய்கிறார். இதன் மூலம் தமிழில் பாடல் எழுதுவது எப்படி, எந்த பாடல் சிறப்பாக அமையும் என்பதைப் பற்றிய தெளிவு பிறக்கும். பாடல் என்பது தீபம் போன்றது. அதை ஏற்றி வைத்தால் தான் வெளிச்சம் கிடைக்கும். ஒரு சாதாரண மனிதன் சாதாரண தீக்குச்சியை உரசினால் தான் அந்த தீபம் ஒளிரும். அந்த மாதிரி சாதாரண மனிதர்களை என்றும் என் நெஞ்சில் தாங்கியிருப்பேன் என்றார்.

    நிலையான உறுதிப்பாடு

    நிலையான உறுதிப்பாடு

    கேள்வி: வேலைக்காரன் படத்தில் இடம்பெற்ற சிங்காரமா ஊரு பாடல் குறித்து...

    பதில்: நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எதைச் செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்பதில் நிலையான உறுதிப்பாடு உடையவன் நான். எனவே எனது பாடல்களில் எழுத்துப் பிழைகள், உச்சரிப்புப் பிழைகள் இருக்காது.

    வேலைக்காரன் திரைப்படத்தில் நான் எழுதிய 'சிங்காரமா ஊரு' எனும் பாடலை எழுதிய பின் எனக்கே மிகவும் பிடித்திருந்தது. அது எல்லோருக்கும் பிடித்த பாடல். பாடல் கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் அதில் உண்மையும், மக்கள் நலனும் கலந்திருக்கும்.

    தேசத்தின் சூழல் தெரியாமல், நடக்கிற செயல்கள் தெரியாமல் அதைப் பற்றி தெரியாமல் அரசியல்வாதியாக இருந்தாலும், அரசாட்சியில் இருந்தாலும், சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாலும், அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும், அவர்களுக்கு கருத்துரைக்க வேண்டும், இடித்துரைக்க வேண்டும், அவர்களை சரியான இடத்தில் இருத்தி வைக்க வேண்டும்.

    மக்களுக்கு உண்மையாக...

    கேள்வி: தற்போதைய அரசியல் நிலவரம் எப்படியிருக்கிறது?

    பதில்: ஆயிரம் மோடி வந்தாலும் ஒரு காந்திக்கு ஈடாகுமா என்று ஒரு மேடையில் பேசியது முற்றிலும் உண்மையே. அவர் நமது பிரதமராக இருந்தால் அவருக்கு முன் கைகட்டி நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் கைதூக்கி இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களை ஜனாதிபதியாகவோ, பிரதமராகவே தேர்ந்தெடுக்கிறோம். பதவிக்கு வந்த பின் மக்களை மறந்து விட்டு தன்னைப் பற்றியே சிந்திப்பது தவறு. மோடி மக்களிடமிருந்து அந்நியப்பட்டு விட்டார். இந்தக் கருத்தைச் சொல்வதற்கு நான் தயங்கவில்லை. அப்படி தயங்கினால் நான் தமிழ் நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்வதாகும். நான் என்னைக் காப்பாற்றிக் கொள்வது எனது நோக்கமல்ல. என் தமிழ் மக்களுக்கு, இந்திய மக்களின் பிரதிநிதியாக எனது கருத்தை வெளிப்படுத்துவேன். பதவியில் இருப்பதால் யாரையும் போற்றி அவர்களுக்கு பிடித்த மாதிரி பேச வேண்டிய அவசியம் இல்லை. நான் மக்களுக்கு உண்மையாக இருக்கவே விரும்புகிறேன். நான் மக்களவையிலோ, சட்டசபையிலோ உறுப்பினராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மக்களின் பிரதிநிதியாக எப்பொழுதும் இருப்பேன். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=9dLcQayk2Wg இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    Poet M. Mehta wrote songs for many films including Silver Jubilee films Udhayakeetam, Panneer pushapangal, Keladi Kanmani in the period 1980-1990. He was one of the poets who gave rise to new poetry and won the Sahitya Academy Award in 2006. In this case, poet M. Mehta's special interview given to our Filmibeat channel can be found here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X