40 நாட்கள் விஜயுடன் நடித்து இருக்கிறேன்.. ராஜா ராணி பாண்டியன்!

சென்னை : மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்தார் ராஜா ராணி பாண்டியன்.

ராஜா ராணி படத்தின் மூலம் சிறந்த குணசித்திர நடிகராக நமக்கெல்லாம் அறிமுகமானவர் ராஜா ராணி பாண்டியன். இவர் பல வருடங்களாக சினிமாத்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் இளன் பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். ராஜா ராணி பாண்டியன் தன் மகன் இயக்கிய பல குறும்படங்களில் நடித்து இருக்கிறார்.

Raja rani pandian interview

தற்போது மெர்சல் மற்றும் சர்கார் படத்திற்கு பிறகு மாஸ்டர் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராஜா ராணி பாண்டியன். இவர் இதற்கு முன் விஜய் படங்களில் நடித்து இருந்தாலும் ஓரிரு காட்சியிலே விஜயுடன் நடித்துள்ளார் தற்போது விஜயுடன் மாஸ்டர் படத்தில் கிட்டதட்ட 40 நாட்கள் நடித்து உள்ளார். இதை வைத்து பார்க்கும் போது ராஜா ராணி பாண்டியன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பது தெரிகிறது .

ராஜாராணி பாண்டியன் விஜயை பற்றி கூறும் போது மற்ற நடிகர்களை போலவே விஜயின் பொறுமை, தன்னடக்கம் ,நேரத்தை சரியாக பயன்படுத்தவது போன்ற பல நல்ல விஷயங்களையும் மற்ற நடிகர்களை போலவே ஆச்சரியத்துடன் பகிர்ந்து இருந்தார். விஜய் இந்த படப்பிடிப்பு முழுவதும் 'அண்ணே' என்று அன்பாக தன்னை அழைத்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் .

விஜயிடம் ஒரு முறை படப்பிடிப்பு தளத்தில் வைத்தே நீங்க ரொம்ப இளமையுடன் இருக்கீங்க தம்பி என்று கூறினாராம் பாண்டியன் அதற்கு விஜய் உள்ள 'நா படுற கஷ்டம் எனக்கு தானே தெரியும் ' என்று கூறினாராம் .

Raja rani pandian interview
.

மேலும் லோகேஷ் கனகராஜ் தனது மகன் இளனின் நண்பர் என்றும் நடிகர் விஜயை விட அவர் மிகவும் அமைதியானவர் என்றும் கூறினார் ராஜா ராணி பாண்டியன் .

இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி பற்றி கூறிய ராஜா ராணி பாண்டியன் சேதுபதியும் நானும் குறும்பட காலத்தில் இருந்து நண்பர்கள் என் மகன் குறும்படம் எடுத்து கொண்டிருக்கும் சமயத்தில் விஜய் சேதுபதியுடன் சில குறும்படங்களில் நடித்துள்ளேன் அப்போதிலுருந்து விஜய் சேதுபதி என் நண்பர் என கூறினார் ராஜா ராணி பாண்டியன் .

Raja rani pandian interview

பல வருடங்களாக போராடி ராஜா ராணி படத்திற்கு பின்பு தான் ஒரு அடையாளம் பாண்டியனுக்கு கிடைத்துள்ளது .அதை பயன்படுத்தி அவர் தொடர்ந்து நடித்து வருகிறார் இந்த நேரத்தில் இவருக்கு மாஸ்டர் படத்தில் கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு பெரிய இடத்தை நோக்கி இவரை அழைத்து செல்லும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X