எனக்கு பாட்டு பாட தெரியாது..கத்தத்தான் தெரியும்..கிராம நாயகன் சசிகுமார் ஓபன் டாக் !
சென்னை :திரைப்பட்டாளமே திரண்டு வந்து நடித்திருக்கும் படம் ராஜவம்சம். குடும்ப செண்டிமெண்ட்டின் அடுத்த படைப்பாக வெளிவந்து வெற்றி நடைபோடுகிறது.
Recommended Video
கேவி கதிர்வேலு இயக்க சசிகுமார், நிக்கிகல்ராணி, தம்பிராமையா, யோகிபாபு, சதீஷ் என பலரும் நடித்துள்ளனர்.
விவசாயம், ஐடி சம்பந்தப்பட்ட கதையை கமர்ஷியலாகவும், குடும்பபாங்குடனும் இயக்கியுள்ளார் கதிர்வேலு. ராஜவம்சநாயகன் சசிகுமார் நம்மோடு பகிர்ந்து கொண்ட சில சுவாரஸ்யங்கள் இதோ.

புது காம்பினேஷன்
கேள்வி :யோகிபாபுவுடன் காம்பினேஷன்எப்படி?
பதில் : முதல் நாள் ஷூட்லயே டைமிங்ல ஜோக் பண்றது, கலாய்ச்சி விடறதுன்னு கலகலப்பா ஆக்கிட்டாரு. ரொம்ப நல்லாருந்துச்சு. தம்பிராமையா, மனோபாலா, சாம்ஸ், சிங்கம்புலின்னு நிறைய காமெடி பட்டாளமே ஒரே இடத்துல இருந்ததெல்லாம் ரொம்ப வித்யாசமான அனுபவமா இருந்துச்சு.

அதுவேற அதுவேற
கேள்வி : அண்ணாத்த - ராஜவம்சம் ரெண்டு படத்தோட அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட் ஒப்பீடு பற்றி?
பதில் : அது சூப்பர் ஸ்டார் படம். அதெல்லாம் கம்பேர் பண்ணவே கூடாது. ஒவ்வொரு படமும் வேற வேற மாதிரி இருக்கும். முள்ளும் மலரும், உடன்பிறப்பே போன்ற படங்களும் சரி, எல்லாமும் அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட் தான். ஆனா வேற வேற கதை, திரைக்கதை கொண்டது.

கிராமத்து ஆள்
கேள்வி : கிராமத்து படங்களாவே நடிக்கிறீங்களே? என்ன காரணம்?
பதில் : சுந்தரபாண்டியனா குட்டிபுலியா தான் என்ன மக்கள் பாக்குறாங்க. கிராமத்து படங்கள் இப்பகுறைவாதான் வருது. அந்த இடம் ஃப்ரீயா இருக்கறதால நாம அத பன்றோம். நான் கிராம படங்களாவே தேடிப்போகல. அது வருது. ஒரு கேரக்டர் உருவாக்கிட்டு வராங்கன்னா என்ன அவங்க எதோ பங்ஷன்லயோ வெளிலயோ பார்த்ததில்ல. என்ன சினிமாவுல கிராமத்து கேரக்டரா பார்த்துருக்காங்க. அதுவா வரும் போது அத நான் ஏத்துகிறேன். அவ்வளவுதான். ஷூட் போகும் போது சிலர், எங்க வீட்டுல வந்து சாப்பிடுங்க. எங்க வீட்ல வந்து ஷீட் எடுத்துக்கோங்கன்னு மக்கள் சொல்லுவாங்க. அவங்க அன்பு, பாசம், அந்த கேரக்டரோட ஒன்றி போயிருக்கு. அவங்களுக்கும் அது பிடிச்சிருக்கு.

பாடகர் சசிகுமார்
கேள்வி : பாடகர் சசிகுமார் மீண்டும் எப்ப வருவார்?
பதில் : வம்சம் படத்துல சுவடு சுவடுன்னு ஒரு பாட்டு இருக்கு. அதுல நானும் கனியும் பாடியிருக்கோம். கத்தியிருக்கோம்ன்னு தான் சொல்லனும். சிலம்பு வரிசைகள பத்தி சொல்லிபாடியிருப்போம். நான் கத்தினத தாஜ் நூர் நல்லபடியா, அழகா இசையமைச்சிருக்காரு. அதனால அது பாடலா உருவாச்சு.

ரஜினி சொன்னாரா?
கேள்வி : ரஜினி உங்கள தயாரிப்பாளரா ஆகவேண்டாம்ன்னு சொல்லிருக்காரு. இயக்குனரா அடுத்த படம் எப்போ?
பதில் : ரஜினி ஒரு அக்கறையின்பேர்ல, ஒரு நல்லது சொல்லிருக்காரு. அது வேற விஷயம். ஆனா நடிப்பு இயக்கம்ல்லாம் தொடரும். 2022 ல அடுத்த படம் டைரக்ஷன் இருக்கும்.என்று மகிழ்வுடன் சொல்லி முடித்தார் கிராம நாயகன் சசிகுமார்.


Click it and Unblock the Notifications











