எங்களை பாத்த பொண்ணுங்க தெறிச்சி ஓடுவாங்க-ராஜாவுக்கு செக் வில்லன்கள் ஸ்பெஷல் பேட்டி

சென்னை: ராஜாவுக்கு செக் படத்தில் ஒரு கொடூரமான வில்லன் நான். யுனிக்கான கேரக்டர் பண்ணியிருக்கோம். இது த்ரில்லர் படம். ஹீரோ லைப்ல ஒரே நாளில் அவரோட லைஃபையே திருப்பி போடக்கூடய நாலு வில்லன்கள் இருக்காங்க. படம் த்ரில்லிங்கா வந்திருக்கு என தன்னுடைய சினிமா அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டனர் சுரேந்தர், இர்ஃபான், பிரவீன் மற்றும் அஸ்வின்.

ராஜாவுக்கு செக் படம் சென்சார் பண்ணி வந்திடிச்சி. அதனால இந்த படத்தை பத்தி எதுவும் சொல்லக்கூடாது என்றார் வில்லனாக நடித்துள்ள பிரவீன்.

Rajavukku Check Villan Acts exclusive interview

இந்த படம் முழுக்க முழுக்க ரிவேன்ஜ் மூவி தான், எங்களோட வாழ்க்கையில நாங்க பண்ணின தப்புக்காக எங்களை சேரன் மாட்டிவிடுவாரு. அந்த கோவத்தில பழிவாங்குற சமயத்துக்காக வெய்ட் பண்ணிக்கிட்டு இருப்போம். அந்த ரிவேன்ஜ் எப்பிடி எடுக்கிறோம். அந்த ரிவேன்ஜ்னால சேரனோட லைஃப் எப்பிடி மாறுதுன்றது தான் இந்த படத்தோட கதையே என்றார் முக்கிய வில்லனான இர்ஃபான்.

நாங்க இந்த படத்துல நடிக்கிறது ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கு. டிவி சீரியலுக்கும் படத்துக்கும் ரொம்ப வித்தியாசமான ஜர்னரா இருக்கு. அதோட ஆக்டிங் ஸ்டைல் வேற, மூவியோட ஆக்டிங் ஸ்டைல் வேற. இதுல சேரன் சார் கூட ஒர்க் பண்ணின எக்ஸ்பீரியன்ஸ் எப்படின்னா, அவர் ஒரு பெரிய டைரக்டர், பெரிய ஆக்டர் அப்படிங்குற ஈகோ எதுவும் இல்லாம, நார்மலா எல்லார்கிட்டேயும் எப்படி பழகுவாறோ அப்படித்தான் எங்ககூடயும் பழகுவாறு.

நல்லா ஒரு கம்ஃபோர்ட்டபிள் ஜோன் கொடுப்பாரு. ஒரு ஃபைட் சீக்வென்ஸா இருக்கட்டும், மிரட்டுற மாதிரியான சீக்வென்ஸா இருக்கட்டும், அல்லது டயலாக் சீக்வென்ஸா இருக்கட்டும், எதுவா இருந்தாலும் சரி நமக்கு ஏத்தமாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்குவாரு. நமக்கு ஒரு ஸ்பேஸ் கொடுப்பாரு.

பிக் பாஸ்ல எப்படி இருந்தாரு ரியல் லைப்லயும் இருக்காரு. அதை நான் சொல்றதை விட நீங்க ஸ்பாட்ல இருந்தா பாக்கலாம். படத்துல பாத்தீங்கன்னா ஆக்ஷன் சீன்ல எல்லாம் சூப்பரா கலக்கியிருக்காரு. நான் சொல்றதை விட நீங்க படத்துல பாருங்க எப்படி கலக்கியிருக்காருன்னு.

இந்த படத்தை பெண்கள் பாத்தாங்கன்னா, அதுக்கப்புறம் என்னை பாத்தாங்கன்னாலே தெறிச்சி ஓடிருவாங்கன்னு தான் தோணுது. என்ன பண்றது படத்துல அந்த மாதிரி கேரக்டர் கொடுத்திருக்காங்க. நம்ம மூஞ்சிய பாத்தா நல்ல பழமாட்டம் இருக்கணும். ஆனால் பொண்ணுங்கள பாத்தா என்ன பண்ணுவீங்கங்குற விஷயம் தான். அதாவது நம்மளால அடைய முடியும்கிற விஷயம் நம்ம கண்ணு முன்னாடி இருந்தா, அந்த பசங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கங்குறது தான் அந்த பசங்களோட கேரக்டர்ஸ். அதனால அந்த கேரக்டர்ஸ் அப்படி இருக்கும், என்றார் சுரேந்தர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X