கோச்சடையானுக்காக நீண்ட நாளைக்குப் பிறகு டிவியில் ரஜினி சிறப்புப் பேட்டி!
சென்னை: கோச்சடையான் படத்தின் புரமோஷனுக்காக தொலைக்காட்சியில் பேட்டி தருகிறார் ரஜினிகாந்த்.
பொதுவாக எந்த பத்திரிகை, தொலைக்காட்சிக்கும் பேட்டிகள் தருவதில்லை ரஜினிகாந்த். காரணம் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் தோன்றி தன் கருத்தை அவர் சொல்லிவிடுகிறார்.
எந்திரன் வெளியான சமயத்தில் சன் டிவிக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார் ரஜினி. படத்தின் விளம்பரத்துக்கு அந்த பேட்டி பெரிதும் உதவியது. அதில் படம் தொடர்பான கேள்விகள் மட்டுமின்றி, வேறு பல விஷயங்கள் பற்றியும் பேசியிருந்தார்.

எந்திரனுக்குப் பிறகு...
எந்திரனுக்குப் பிறகு இப்போது கோச்சடையான் வெளியாகிறது. ஆனால் அந்தப் படம் போல நேரடி ரஜினி படமாக இல்லாமல், அவரது உடல் அசைவுகளைப் படமாக்கி, அதை மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தின் மூலம் அனிமேட் செய்யப்பட்ட ரஜினி உருவத்தில் இணைத்துள்ளனர்.

ரசிகர்களைத் தயார்ப்படுத்த
இந்தியாவில் இப்படியொரு தொழில்நுட்பத்தில் முழுப் படமும் வந்ததில்லை. அதுவும் 3 டியில்.
ஆனால் இந்தப் படத்தைப் பார்க்க ரசிகர்களைத் தயார்ப்படுத்துவது அவசியமாகிறது. இது ரஜினி படம்.. ஆனால் ரஜினியின் லைவ் ஆக்ஷன் படமில்லை என்பதை அவர்களின் மனதிலேற்ற வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக உள்ளார்.
எனவே பட ரிலீசுக்கு முன் அந்த கோணத்தில் படத்தின் புரமோஷனல் வேலைகளைச் செய்து வருகின்றனர்.

முன்னோட்டம்
ஏற்கேனவே கோச்சடையான் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், நடிகர் சரத்குமார், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் போன்றவர்கள், "இது முழுக்க முழுக்க ஒரு ரஜினி படம். ஆனால் ரஜினி சாரின் உடல் அசைவுகள், குரலில், அவரது மோஷன் கேப்சரிங் உருவத்தில் வரும் படம். அந்த மனநிலையோடு வந்தால் படத்தை அனுபவித்து ரசிக்கலாம்," என்று கூறியிருந்தனர்.

பேட்டி
அடுத்து இப்போது ரஜினியின் சிறப்புப் பேட்டியை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் பேட்டி, கோச்சடையானை வாங்கியுள்ள ஜெயா டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

விவேக்
இந்தப் பேட்டியை எடுப்பவர் நடிகர் விவேக். ஜெயா டிவி அரங்கில் வைத்து இந்தப் பேட்டி இன்று ஷூட் செய்யப்பட்டது. விரைவில் அல்லது ஏப்ரல் 14-ம் தேதி ஜெயா டிவில் இந்த சிறப்புப் பேட்டியைக் காணலாம்.


Click it and Unblock the Notifications











