என்னுடைய துரோணர் ரஜினி! - உருகிய சின்னி

ரஜினி நடித்த கை கொடுக்கும் கை படத்தில் அறிமுகமானவர் சின்னி ஜெயந்த். அதன் பிறகு 412 படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நீயே என் காதலி என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் சின்னி ஜெயந்த் கூறியதாவது:
ரஜினி எனும் துரோணர் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானேன். அவரது குரலை மிமிக்ரி செய்ததற்கே ரசிகர்கள் அத்தனை ஆதரவு கொடுத்தார்கள். இப்போதும் அவரது அன்பு எனக்குண்டு.
சின்னப் புள்ள, கானல் நீர் போன்ற படங்களை இயக்கியுள்ளேன். நான்கைந்து படங்களை தயாரித்துள்ளேன்.
இப்போது மீண்டும் நீயே என் காதலி என்ற படத்தை தயாரித்து இயக்குகிறேன்.
உதயா என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன், இந்தப் படத்தில். ஹீரோயின் தேடி பெரிய வேட்டையே நடத்தினேன். ஒரு வழியா டெல்லியில் ஒரு பொண்ணு நடிக்க தயாரா இருந்தது. நல்லா தமிழ் பேசும்னு வேற சொன்னாங்க.
சொன்னா நம்ப மாட்டீங்க... என் படம் ரொம்ப சின்னப்படம். ஃபிளைட்ல டிக்கெட் போட்டுத் தர மாட்டேன். நீங்க ரயில்லதான் வந்து போகணும்னு சொன்னேன். இதுவரைக்கும் இந்த படத்துக்காக மூணு தடவை ட்ரெயின்ல வந்து போனது அந்தப் பொண்ணு. இப்படிப்பட்ட நடிகைகளை நாமதான் என்கரேஜ் பண்ணணும்...
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டுக்கு ரஜினி சாரைத்தான் அழைக்க நினைத்தேன். ஆனால் இப்போது அவர் இருக்கும் பரபரப்பில் தொந்தரவு செய் வேண்டாமே என்றுதான் சூர்யா - முருகதாஸை வைத்து பாடலை வெளியிட்டேன்," என்றார் சின்னி.


Click it and Unblock the Notifications











