விவேக்: எதிரிகளை மன்னிச்சிருக்கீங்களா சார்?... ரஜினி: எத்தனையோ முறை!!
சென்னை: தனது எதிரிகளை எத்தனையோ முறை மன்னித்திருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது பேட்டியில் தெரிவித்தார்.
ரஜினியின் சிறப்புப் பேட்டி இன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பானது. இந்தப் பேட்டியில் கோச்சடையான் பற்றி மட்டுமல்லாமல், தனது திரையுலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, ஆன்மீகம், ரசிகர்கள் என பல விஷயங்களைப் பேசினார்.

இந்தப் பேட்டியின்போது, ரஜினியிடம் விவேக் கேட்ட ஒரு கேள்வி:
விவேக்: மாற்றம் ஒன்றுதான் மாறாதது... பாடலில், எதிரிகளை ஒழிக்க முதல் வழி மன்னிப்பு என்று கூறியிருக்கிறீர்களே.... நீங்கள் உங்கள் எதிரிகளை மன்னிச்சிருக்கீங்களா சார்?
இதற்கு ரஜினி அளித்த பதில்: ஹ..ஹா... நிறைய மன்னிச்சிருக்கேன்... மன்னிக்கிறதுல நமக்கே ஒரு மகிழ்ச்சி, ஒரு பெருமை, நிம்மதி இருக்கும், என்றார்.

மற்றொரு கேள்வி:
விவேக்: இன்றைய இளைஞர்கள் பலரும் புகைப் பழக்கம் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
ரஜினி: எந்தப் பழக்கமாக இருந்தாலும் அளவுக்கு மீறினா ஆபத்துதான். எந்தப் பழக்கத்துக்கும் அடிமையாகிடாதீங்க. குறிப்பாக புகைப் பழக்கத்துக்கு, என்றார்.

இது எப்படி இருக்கு?
விவேக்: பஞ்ச் டயலாக் என்பதை அறிமுகப்படுத்தியதே நீங்கதான். உங்களுக்குப் பிறகு யார் யாரோ பஞ்ச் அடிக்கிறாங்க... உங்க பஞ்ச் டயலாக்குகளில் உங்களுக்குப் பிடிச்சது எது?
ரஜினி: இது எப்டி இருக்கு... பதினாறு வயதினிலே படத்தில் இடம்பெற்ற பஞ்ச் இது. ரைட்டர் கலைமணிதான் இதை எழுதினார். ரொம்பப் பிடிச்ச டயலாக் இது. பாரதிராஜா சார் அருமையா உருவாக்கின படம்... ரைட்டர்ஸ், டைரக்டர்ஸ் எல்லாரும் கஷ்டப்பட்டு உருவாக்கி அந்தப் பெருமையை நமக்கு கொடுத்துட்டுப் போயிடறாங்க...

ரஜினி பேசிய பஞ்ச்
விவேக்: கோடானு கோடி ரசிகர்களுக்காக ஒரு பஞ்ச் டயலாக் பேசிக் காட்டுங்க...
ரஜினி: இதெப்டி இருக்கு..! (அவர் இதை ரொம்ப சாதாரணமாக சொன்னாலும் அவர் குரலில் கேட்டபோது அப்படி ஒரு ஈர்ப்பு)


Click it and Unblock the Notifications











