twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி பாஜகவில் சேர்ந்து அடங்குவதை விட தனிக்கட்சி துவங்குவது நல்லது: கங்கை அமரன்- எக்ஸ்க்ளூசிவ்

    By Siva
    |

    சென்னை: ரஜினிகாந்த் பாஜகவில் சேர்ந்து அடங்குவதை விட தனி அமைப்பாக வர வேண்டும் என் ஆசை என இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

    இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என நீங்கள் நினைக்கிறீர்களா என்று அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,

    ரஜினி

    ரஜினி

    இப்ப பேசுற பேச்சுகளை எல்லாம் நினைக்கும்போது ரஜினி சீரியஸாக இருக்கிறார் என்று தோன்றுகிறது. ஜெயலலிதா செயல்பாடும், கலைஞரின் செயல்பாடும் இல்லாத நேரத்தில் ஒரு நல்ல தலைமை வேண்டும் என்பது அவரின் மனதில் உள்ளது என்பது நமக்கு தெரியும்.

    அரசியல்

    அரசியல்

    அரசியலுக்கு வரும் முயற்சி செய்கிறார் என்பதை கேள்விப்படும்போது சந்தோஷமாக உள்ளது. அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது. நல்ல மனசு உள்ளவர்.

    கன்னடத்துக்காரர்

    கன்னடத்துக்காரர்

    பல பேர் சொல்கிறார்கள் ரஜினி கன்னடத்துக்காரர் என்று. கன்னடத்துக்காரர் என்றால் என்ன அவர் மனுஷன் தானே. எம்.ஜி.ஆர்.ஐ மலையாளி என்று சொல்வோம், கலைஞரை தெலுங்கு என்போம். ஆனால் தமிழ் என்று ஏற்றுக்கொள்வோம்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    அதே போன்று ஜெயலலிதாவை பார்த்தால் அவர் பிராமணங்க, மைசூரில் இருந்து வந்தார் என்று சொல்லிப்போம். மனுஷங்களை பார்க்கணும். யார் மக்களிடம் அன்பாக உள்ளாரோ அவர் தலைமை ஏற்பதில் தப்பு இல்லை.

    தனிக்கட்சி

    தனிக்கட்சி

    ரஜினி தனிக்கட்சி துவங்கினால் வாழ்த்துவேன். அவர் தனிப்பட்ட முறையில் நிரூப்பிப்பது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அவர் பாஜகவில் சேர்ந்து அடங்குவதை விட தனி அமைப்பாக வந்தால் அவருக்கு என்று நிற்கும் என்பது என் ஆசை. அவர் பாஜகவில் வந்து சேர்ந்தாலும் சந்தோஷம் தான். எங்க கட்சிக்கு வரும்போது வரவேற்காமல் இருக்க முடியுமா?

    English summary
    Multi talented Gangai Amran said that superstar Rajinikanth should float his own party rather than joining any other party.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X