ரஜினி சார் செல்வாக்கில் விஜய்க்கு 10 சதவீதம் கூட இல்லை.. அடித்துச் சொல்லும் சத்யன் ராமசாமி!
கூலி ஆடியோ வெளியீட்டில் ரஜினிகாந்த் 'நிம்மதி இல்லை' என பேசியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து மூத்த ரசிகர் சத்யன் ராமசாமி மனம் திறந்தார். ரஜினி-கமல் உறவு, விஜய் அரசியல் செல்வாக்கு, கூலி படத்தின் வெற்றி குறித்து அவர் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். ரஜினியின் உணர்ச்சிபூர்வமான பேச்சுக்கு பின்னணியில் என்ன?
சமீபத்தில் நடந்த கூலி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய சில வார்த்தைகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. பணம், காசு, புகழ் இருந்தும் தனக்கு நிம்மதி இல்லை என்று அவர் கூறியது பலரையும் கலங்க வைத்தது. இதுகுறித்து மூத்த ரஜினி ரசிகரான சத்யன் ராமசாமி மனம் திறந்து பேசியுள்ளார்.
ரஜினி சார் எவ்வளவோ வெற்றிகளைப் பார்த்துட்டார். ஆனால், ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கஷ்டமாக இருந்தது. குடும்பம் கடவுள் கொடுத்த அமைப்பு என்றும், அதை எவ்வளவு இழுத்து கட்டினாலும் தலைவிதிப்படி நடக்கும் என்று அவர் கூறியது மனதை வருத்தியது என்கிறார் சத்யன்.

ரஜினி ரசிகர்கள் அவரை தங்கள் வாழ்க்கையின் பாடமாகவே கருதுகிறார்கள். அவர் விரல் நுனியிலிருந்து தலைமுடி வரை அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஆனால், நிம்மதி இல்லை என்று அவர் சொன்னது ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. அவரால் கூட எதுவும் செய்ய முடியாது என்பதை நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது என்கிறார் சத்யன்.
கமல்ஹாசன் குறித்து பேசிய சத்யன், ரஜினிகாந்த் எப்போதும் கமல்ஹாசனை உயர்த்திப் பேசுவார். "கமல் அழகு, நடிப்புனா கமல், அவர் முன்னாடி நான் ஒன்றுமே இல்லை" என்று பல மேடைகளில் புகழ்ந்துள்ளார். ஆனால் கமல் ரசிகர்கள் ரஜினி சார் கமலுக்கு எதுவும் செய்யவில்லை என குறை கூறுவது வருத்தம் அளிக்கிறது என்கிறார்.
லோகேஷ் கனகராஜ் கூட ரஜினி சார்கிட்ட "கமல் மாதிரி நடிக்கணும், சும்மா ஸ்டைல் பண்ணிட்டு இருக்க கூடாது" என்று மறைமுகமாக குத்தி காட்டியதாக ரஜினி சார் கூறினார். ஒரு மனிதர் கூட இருக்கும் எறும்பை கூட உயர்த்திப் பேசணும் என்று நினைப்பவர் ரஜினி சார். சின்ன உதவி செய்தவரையும் மறக்காமல் சொல்லிக் கொண்டிருப்பார் என்கிறார் சத்யன்.
விஜய் குறித்து பேசிய சத்யன், அரசியல் செல்வாக்கில் ரஜினிகாந்தை வைத்து ஆதாயம் பண்ணவர்தான் விஜய். அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், விஜய்க்கு இன்று ரஜினி சாருக்கு இருந்த செல்வாக்கில் 10% கூட இல்லை. சினிமாவில் ரஜினி சாருக்கு நிகராக யாராலும் வர முடியாது என்றும் சத்யன் அடித்து கூறுகிறார்.
ரஜினி சாருடைய கூலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யும் என்றும் சத்யன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











