படையப்பா vs கில்லி: விஜய்யால தலைவர் ரஜினி ரெக்கார்ட்டு கிட்டக் கூட வரமுடியாது - சத்யன் ராமசாமி!
சென்னை: இந்த மாதம் டிசம்பர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் தியேட்டர் ஓனர்களுக்கும் பலத்த ஏமாற்றமே மிஞ்சியது. கார்த்தியின் வா வாத்தியார், பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட படங்கள் அறிவித்தபடி வெளியாகாமல் ஏமாற்றிவிட்டன.
பாலகிருஷ்ணாவின் தெலுங்கு படமான அகண்டா 2 திரைப்படமும் ஆளவிடுங்கடா சாமி என்கிற அளவுக்கு ரசிகர்களை வச்சு செய்த நிலையில், நம்மளை காப்பாற்ற யாரு வருவார் என எதிர்பார்த்த தியேட்டர் ஓனர்களுக்கு யாமிருக்க பயமேன் என ஆறுபடையப்பாவாக படையப்பா ரீ ரிலீஸ் வந்து சற்றே நிம்மதியை கொடுத்துள்ளது.

இந்த ஆண்டு முழுவதுமே தமிழ் சினிமா ரசிகர்கள் ஆசை ஆசையாக விடாமுயற்சி, தக் லைஃப், ரெட்ரோ, கூலி என டாப் ஹீரோக்களின் படங்களை தியேட்டருக்குப் போய் பார்த்து ஏமாந்துப் போன நிலையில், தியேட்டரில் ரசிகர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி கொண்டாடினார்களோ அதே போல கொண்டாடும் அளவுக்கு படையப்பா ரீ ரிலீஸ் அமைந்துள்ளது.
சத்யன் ராமசாமி பேட்டி: இதே போலத்தான் கடந்த ஆண்டு தமிழ் சினிமா ட்ரையாக இருந்த நேரத்தில் தளபதி விஜய்யின் கில்லி ரீ ரிலீஸ் வெளியாகி திரையரங்குகளை கச்சேரிகளாக மாற்றியது. இந்நிலையில், அதே போல படையப்பா ரீ ரிலீஸ் படமும் கொண்டாட்ட படமாக மாறியுள்ளது. ஆனால், படையப்பா ரீ ரிலீஸ் அதிக வசூல் செய்ததா? அல்லது கில்லி ரீ ரிலீஸ் அதிக வசூல் செய்ததா என்கிற விவாதம் சோஷியல் மீடியாவில் எழுந்து வரும் நிலையில், ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் சத்யன் ராமசாமி பிரத்யேகமாக பிலிமிபீட் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
படையப்பா ரெக்கார்டை கில்லியால் தொட முடியாது: சத்யன் ராமசாமியின் கருத்துப்படி ஒக்கடு படத்தின் ரீமேக்கான கில்லி படத்தை விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஒரிஜினல் கதையான படையப்பா படம் ரிலீஸ் ஆன போதே ஏகப்பட்ட சாதனைகளை படைத்தது எனக்கூறியுள்ளார். ரீ ரிலீஸிலும் படம் பாக்ஸ் ஆபீஸில் சக்கைப்போடு போடுகிறது. ஜெயிலர் 2 அடுத்து வந்தால், அது மிகப்பெரிய வரலாறு படைக்கும் என்றும் கில்லி உடன் எல்லாம் படையப்பா படத்தை ஒப்பிடக் கூடாது என்று பேசியுள்ளார். செம கலகலப்பான பேட்டியாக உருவாகியுள்ள இந்த வீடியோவை க்ளிக் செய்து என்ஜாய் பண்ணுங்க! படையப்பாவோ, கில்லியோ எவ்ளோ வசூல் செய்தது என்பதை விட அந்த படங்கள் அப்போது கொடுத்த திருப்தியை புதிய படங்கள் ரசிகர்களுக்கு கொடுப்பதில்லை என்பதும் இதுபோன்ற ரீ ரிலீஸ்களை ரசிகர்கள் கொண்டாட வேண்டுமே தவிர ஆராய்ந்து ஒரு பயனும் இல்லை.


Click it and Unblock the Notifications