ரஜினி எங்கேயோ இருக்காரு.. விஜய், அஜித் எல்லாம் கிட்ட நெருங்கவே முடியாது.. ரவீந்திரன் துரைசாமி பேட்டி

சென்னை: ரஜினிக்கும் விஜய்க்கும் தான் பாக்ஸ் ஆபிஸ் போட்டி என சொன்ன காலம் எல்லாம் மலை ஏறி விட்டது. வாரிசு படத்தின் மொத்த வாழ்நாள் வசுலையும் 4 நாட்களில் கடந்து கெத்துக் காட்டி வரும் நிலையில், ரஜினி எங்கேயோ போய் விட்டார் என ரவீந்திரன் துரைசாமி பிலிமி பீட் தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி நடித்து வெளியான பொன்னியின் செல்வன் படங்கள் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், இந்த ஆண்டு வெளியான விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு படங்களுமே அந்த படங்களின் சாதனைகளை முறியடிக்க முடியாமல் திணறின.

Rajinikanth is far higher than Vijay at Box Office - Raveendren Duraisamy Interview

இந்நிலையில், விக்ரம் படத்தின் வசூலையும் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலையும் கடந்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக ரஜினிகாந்தின் ஜெயிலர் மாறப் போகிறது என ரவீந்திரன் துரைசாமி பேசியுள்ளார்.

ரஜினி vs விஜய் போட்டியே கிடையாது: நடிகர் ரஜினிகாந்துக்கும் விஜய்க்கும் தான் வசூல் போட்டி நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், என் லெவலே வேற என பீஸ்ட் படத்தை விட இரண்டு மடங்கு அதிக வசூலை எட்டி ரஜினிகாந்த் உச்சம் தொட்டுள்ளார்.

Rajinikanth is far higher than Vijay at Box Office - Raveendren Duraisamy Interview

படையப்பா, சந்திரமுகி, எந்திரன் படங்களுக்கு மக்கள் கூட்டம் தியேட்டரை நோக்கி எப்படி சென்றதோ அதே போன்ற அளவுக்கு ரஜினிகாந்தின் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு அலைமோதி வருகின்றனர். படம் பார்த்த பலரும் ஒரு முறை மட்டும் பார்க்காமல் ரிப்பீட் மோடில் பார்த்து வருகின்றனர்.

Rajinikanth is far higher than Vijay at Box Office - Raveendren Duraisamy Interview

மினிமம் கியாரண்டி ஹீரோ விஜய்: ரஜினி அளவுக்கு விஜய் மாஸ் கிடையாது. ஆனால், உண்மையை சொல்லித்தான் ஆகணும். நடிகர் விஜய் ஒரு மினிமம் கியாரண்டி ஹீரோ. 10 ரூபா முதலீடு செய்தால், 12 ரூபாய் வசூல் செய்து தருபவர். ஆனால், அந்த இடத்தில் அஜித், சூர்யா உள்ளிட்ட யாருமே இல்லாதது குறிப்பிடத்தக்கது என ரவீந்திரன் துரைசாமி தனது பேட்டியில் பேசியுள்ளார்.

Rajinikanth is far higher than Vijay at Box Office - Raveendren Duraisamy Interview

மேலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு எண்டுகார்டு போட்டிருந்தாலும், அது எண்ட் கார்டு இல்லை. ஒருவேளை டிரெண்டை மாத்தி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X