Exclusive - KH X RK படத்தோடு சினிமாவிலிருந்து விலகும் ரஜினி?.. அவர் விட்டுக்கொடுக்கமாட்டாரு.. பிரபலம் ஓபன்
சென்னை: ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகி சோஷியல் மீடியாவை பற்ற வைத்திருக்கிறது. அனைத்து தரப்பினரிடமும் இந்த வீடியோ பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும் படமாக இது இருக்கும் எனவும் அடித்து கூறுகிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்திருக்கிறார்.
ரஜினியும், கமலும் 70 வயதை கடந்துவிட்டார்கள். ஆனால் இப்போதும் அவர்கள் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது. அவர்கள் தங்களது கரியர் ஆரம்பத்தில் தொடர்ந்து சேர்ந்து நடித்தார்கள். பிறகு சில காரணங்களால் பிரிந்து நடிக்க ஆரம்பித்தார்கள். இப்போது 40 வருடங்கள் கழித்து மீண்டும் சேர்ந்து நடிக்க கமிட்டாகியிருப்பது அனைத்து ரசிகர்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
KH X RK ப்ரோமோ: இந்தப் படத்துக்கு தற்காலிகமாக KH X RK என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க; ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிக்கிறார். இன்று படத்தின் ப்ரோமோ வெளியானது. இரண்டு பேரும் அந்த ப்ரோமோவில் மாஸாகவும், கூலாகவும் இருக்கிறார்கள். அனைவரிடமும் இந்த ப்ரோமோ வீடியோ பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்திருக்கிறார்.

பாலாஜி பிரபு பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் 80கள், 80களின் இறுதியில் பீக்கில் இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர்களது படங்கள் தியேட்டர்களில் தெறிக்கும். அந்த மாதிரியான காலகட்டத்தில் நான் அவர்களது ரசிகர்களாக இருந்தேன். அவர்கள் இரண்டு பேருமே மிக முக்கியமான ஆளுமைகள். ரஜினி மேக்ஸிமமான என்ட்டெர்டெயினர். அதேபோல் கமல் நிறைய வெரைட்டியில் படங்கள் செய்திருக்கிறார். மக்களின் பல்ஸை ரஜினி பிடித்து நடிக்க ஆரம்பித்தார். கமலோ எந்த பேட்டர்னில் நடிப்பார் என்றே நம்மால் யூகிக்க முடியாது.
படத்தின் ப்ரோமோ பற்றி: நீண்ட காலத்துக்கு பிறகு அவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். பக்குவமான இரண்டு ஆர்ட்டிஸ்ட்டுகள் சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த ப்ரோமோ காண்பித்திருக்கிறது. ஸ்க்ரீனில் இரண்டு பேரும் ஷேர் செய்யும்போது வேற லெவலில் இருக்கும். ஒருவருக்கொருவர் விட்டே கொடுக்கமாட்டார்கள். ரஜினியெல்லாம் எப்போதும் விட்டே கொடுக்கமாட்டார். கமலாகவே இருந்தாலும் விட்டுக்கொடுக்கமாட்டார். நாம்தான் எப்போதும் டாப்பில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அவர். கமலும் அதே மாதிரியான எண்ணத்தில்தான் இருப்பவர்.
எந்த ஈகோவும் இல்லை: இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தால் கண்டிப்பாக அவர்களுக்கிடையே ஈகோ வரும் என்று சொன்னார்கள். ஆனால் இந்த ப்ரோமோவை பார்க்கையில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பது தெரிகிறது. ஏனெனில் அவர்கள் இரண்டு பேரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். பெரிய புரிதலோடு இருக்கிறார்கள். இது வேறு மாதிரியான படமாக இருக்கும். கண்டிப்பாக பெரிய ரெக்கார்டை படைக்கும். அதேமாதிரி இந்தப் படத்தோடு ரஜினி திரைத்துறையிலிருந்து விலகவிருப்பதாகவும் சொல்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











