Exclusive - KHXRK படத்தில் கமல் பெயர் முதலில் வர உதயநிதிதான் காரணம்.. ரஜினி தட்டி தூக்கிடுவார்.. பிரபலம் ஓபன்
சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். படத்துக்கு KHXRK என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ப்ரோமோ வீடியோ ஓரளவுக்குத்தான் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அந்தப் படம் குறித்து பிரபல ரஜினி ரசிகர் சத்யன் ராமசாமி ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்திருக்கிறார்.
ரஜினியும், கமலும் இணைந்து நடிப்பார்களா என்ற நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியிருக்கிறது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிக்கும் அந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில்தான் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பு அந்த வீடியோவுக்கு இருந்தது. ஆனால் அது ரசிகர்களை முழுவதுமாக திருப்திப்படுத்தவில்லை. மேலும் இதில் கமலின் முதலில் போட்டது, படத்தில் யார் ஹீரோ உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

சத்யன் ராமசாமி பேட்டி: இந்நிலையில் பிரபல ரஜினி ரசிகரும், திரை விமர்சகருமான சத்யன் ராமசாமி ஃபில்மிபீட் தமிழுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில், "இந்த ப்ரோமோ வீடியோவில் வழக்கம்போல் நெல்சனின் டச் இருந்தது. ஆனால் இந்த வீடியோ ப்ரோமோ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. நெல்சனின் ப்ரோமோ இப்படித்தான் இருக்கும் என்பது தெரியும். ஆனால் ஜெயிலர் 2 ப்ரோமோ போன்று ஒரு வெயிட்டை கொடுத்திருக்கலாம். இதில் கதையின் க்ளிம்ப்ஸ் ஏதாவது ஒன்று இருந்திருக்கலாம்.
இரண்டு பேரும் டான்களா?: இந்தப் படத்தில் இரண்டு பேரும் டான்களாக இருப்பார்களோ என ப்ரோமோவை பார்த்து யூகிக்கத்தான் முடிகிறது. கூலி ப்ரோமோவை பார்த்து கண்டதை சொன்னார்கள். ஆனால் அந்தப் ப்ரோமோவுக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. எனவே இந்த ப்ரோமோவை வைத்து எதையும் யூகிக்க கூடாது. இருந்தாலும் கொஞ்சம் ஹைப் ஏற்றியிருக்கலாம். இந்த ப்ரோமோ ஒரு நாள் மட்டும்தான் பேசுபொருளாக இருந்தது. இரண்டு பேருமே இந்தியாவின் மிகப்பெரிய நடிகர்கள். அதனால் இன்னும் கொஞ்சம் Effort போட்டிருக்கலாம்.
கமல் பெயர் ஏன் முதலில்?: கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் வைத்திருக்கிறார். அவர் தனது கட்சியை திமுகவுடன் பெரும்பாலும் இணைத்துவிட்டார். திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர் உதயநிதி. இந்தப் படத்தை தயாரிப்பது ரெட் ஜெயன்ட். அப்போ யாருடைய பெயரை முதலில் போடுவார்கள். படத்தில் ரஜினிக்கு வெறும் மூன்று சீன்கள் மட்டும் கொடுத்தாலே அவர் அதை வைத்து மற்றவர்களை முடித்துவிடுவார். ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் என்று வந்துவிட்டால் யாரும் ரஜினியை ஒன்றுமே செய்ய முடியாது. அவரை முன்னால் போடுங்கள், நடுவில் போடுங்கள், ஏன் ஓரமாக கூட நிற்க வையுங்கள் இல்லை காட்டவே காட்டாதீர்கள்; நீங்கள் எதை செய்தாலும் அவரை ஸ்க்ரீன் ப்ரெசன்ஸில் எதுவுமே செய்ய முடியாது. தட்டி தூக்கிவிடுவார். அதனால்தான் கமலே ஒதுங்கிவிட்டார். எவ்வளவு ரஜினியை ஒதுக்க முயன்றாலும் அவர் ஸ்கோர் செய்துவிட்டு போய்விடுவார்.
படத்தில் யார் வில்லன்?: கமல்ஹாசனை வில்லனாக போட்டால் கண்டிப்பாக படம் ஓடாது. அவர் வில்லனாக நடித்து ஓடிய ஒரு படத்தை சொல்லுங்கள். அதேசமயம் ரஜினியை வில்லனாக போட்டால் சூப்பராக இருக்கும். என்னை பொறுத்தவரை அது செமயாக இருக்கும். கமல்ஹாசன், பாரதிராஜா, சிவக்குமார் ஆகியோரே ரஜினியின் வில்லத்தனமான நடிப்பை பாராட்டத்தானே செய்திருக்கிறார்கள். ரஜினி வில்லனாக இருந்தால் டபுள் ஓகே. அதைவிட மாஸ் மொமண்ட் எதுவுமே இருக்காது" என்றார்.


Click it and Unblock the Notifications















