கேரவன் வரைக்கும் தான் ரஜினிகாந்த்.. கீழே இறங்கிட்டா சூப்பர் ஸ்டார்.. சாண்டி மாஸ்டர் ஓபன் டாக்!

சென்னை: இது பழைய 1950 மாடல் கொஞ்சம் பார்த்து பண்ணுங்க என சாண்டி மாஸ்டரிடம் சொன்னதாக கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. ஆனால், அதெல்லாம் சும்மா என்றும் கேரவன் வரைக்கும் தான் வயதான ரஜினிகாந்தாக இருப்பார். கேரவன் விட்டுக் கீழே இறங்கிவிட்டால் சூப்பர் ஸ்டார் தான் என சமீபத்தில் சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் சாண்டி மாஸ்டர் சூப்பர் ஸ்டாரை புகழ்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் "சிக்கிடு சிக்கிடு" பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடன இயக்குநர். அந்த பாடலுக்காக ரஜினிகாந்த் சாரிடம் எப்படி வேலை வாங்கினேன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் ஓபனாக பேசியுள்ளார் சாண்டி மாஸ்டர்.

Rajinikanth only in Caravan if he getting down he is Super Star - Sandy Master opens up
Photo Credit:

ஒவ்வொரு முன்னணி நடிகர்களுக்கும் ஒருவகையான நடனம் மற்றும் உடலசைவு உள்ளது. அதை வைத்து தான் அவர்களுக்கான பாடல்களில் நடன அசைவுகளை கொடுத்து வருகிறேன் என்றும் தெளிவாக கூறினார்.

கீழே இறங்கிட்டா சூப்பர் ஸ்டார்: மாஸ்டர் பாடி பார்ஸ் எல்லாம் ரொம்ப வீக்கா இருக்கு, செட்டில் பார்த்து ஸ்டெப்ஸ் எல்லாம் கொடுங்க என கேரவனுக்கு அழைத்து அவ்வளவு பவ்யமாக பேசினார். ஆனால், கீழே கேரவனை விட்டு இறங்கியதும் சூப்பர் ஸ்டார் போல செம ஸ்பீடாக மாறி என்ன கொடுத்தாலும் ஆடுறேன் என அவர் காட்டிய எனர்ஜியை பார்த்து பிரமித்துப் போய்விட்டேன் என சாண்டி மாஸ்டர் புகழ்ந்து தள்ளினார். கேரவனில் இருக்கும் வரைக்கும் தாங்க அவர் ரஜினிகாந்தாக உள்ளார். கீழே இறங்கிட்டா சூப்பர் ஸ்டார் தான் என சாண்டி மாஸ்டர் சொல்லும் போதே தலைவர் ஃபேன்ஸ் கூஸ்பம்ப்ஸ் அடைவது நிச்சயம்.

ஜெயிலர் 2வுக்கு வெயிட்டிங்: கமல் சாருக்கு ஒருமாதிரி டான்ஸ் ஸ்டெப்ஸ் இருக்கும், ரஜினி சாருக்கு ஒரு ஸ்டைல் இருக்கும், விஜய் சாருக்கு, அஜித் சாருக்கு, சூர்யா சாருக்கு என தனித்தனி ஸ்டைல் இருக்கும். அவங்க டான்ஸ் ஆடின பாடல்களை எல்லாம் ஒரு வாரம் போட்டுப் பார்ப்பேன். அவங்களுக்கு எது வருது, எது வரலன்னு புரிந்துக் கொண்டு ஸ்டெப்ஸ் அமைப்பது தான் என்னோட ஸ்டைல் என்று சாண்டி கூறினார். மேலும், அடுத்து ஜெயிலர் 2வுக்கு ரொம்பவே காத்திருப்பதாகவும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X