என்னோட மனைவி இன்னைக்கு உயிரோட இருக்க காரணமே ரஜினிகாந்த் தான்.. லிவிங்ஸ்டன் நெகிழ்ச்சி!
சென்னை: நடிகர் லிவிங்ஸ்டன் மனைவிக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கபட்டு இருந்தார். உயிரையே காப்பாற்ற முடியாத சூழலில் நடிகர் ரஜினிகாந்த் தான் உதவினார் என சமீபத்திய பேட்டியில் உருக்கமாக கூறியுள்ளார்.
பாக்கியராஜ் இயக்கி நடித்து 1982ம் ஆண்டு வெளியான டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து சினிமாவில் அறிமுகமான லிவிங்ஸ்டன் வில்லனாகவும் ஹீரோவாகவும் குணசித்ர கதாபாத்திரங்களிலும், காமெடியனாகவும் நடித்து அசத்தினார்.

ஆனால், சமீப காலமாக அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. ஏகப்பட்ட கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த அவருக்கு ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சுந்தர புருஷன்: ரஜினிகாந்த் உடன் வீரா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த லிவிங்ஸ்டன் சுந்தர புருஷன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் நடித்த சொல்லாமலே படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதன் பின்னர் மீண்டும் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு விரலுக்கு ஏத்த வீக்கம் படத்திலும் லீடு ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெயம் ரவியின் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் காமெடியனாக அவர் வரும் இடம் இன்னமும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. என் புருஷன் குழந்தை மாதிரி படமும் லீடு ஹீரோவாக அவருக்கு பெரியளவில் கைகொடுத்தது.
லால் சலாம் படத்தில்: ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்த லிவிங்ஸ்டன் கார்கி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில், மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் நண்பராகவே நடித்திருந்தார். அந்த படத்தின் சூட்டிங் சமயத்தில் தான் லிவிங்ஸ்டன் மனைவி ஜெஸ்ஸிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

லிவிங்ஸ்டன் மனைவியை காப்பாற்றிய ரஜினி: மனைவியை மருத்துவமனையில் சேர்த்து இருந்த செய்தி உதவி இயக்குநர்கள் மூலமாக எப்படியோ ரஜினி சார் காதுகளுக்கு சென்று விட்டது. உடனே என்னை அழைத்து, என்ன ஆச்சு எதுவும் சொல்ல மாட்டியா, உன்னை நான் ஒரு பிரதரா தானே பார்க்கிறேன். எவ்ளோ செலவாகும் எனக் கேட்டார். ஆனால், அவரிடம் பணம் வாங்க நான் ரொம்பவே தயங்கினேன். அப்படியெல்லாம் யோசிக்காத என பணம் கொடுத்து உதவினார்.
15 லட்சம் ரூபாய்: ஒட்டுமொத்தமாக என் மனைவியின் மருத்துவ செலவுக்கு தேவையான 15 லட்சம் ரூபாய் அப்படியே எடுத்துக் கொடுத்து, மேலும், தேவைப்பட்டால் தயங்காமல் கேளு என்றார். நான் ஏற்கனவே கடனில் இருக்கும் விஷயம் அவருக்கு தெரியும் போல, பெரிதாக சேமிப்புகளும் இல்லை. சூப்பர் ஸ்டார் மட்டும் பணம் கொடுத்து உதவவில்லை என்றால் என் மனைவியை என்னால் காப்பாற்றியிருக்க முடியாது என லிவிங்ஸ்டன் உருக்கமாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
தங்கமான மனசு: எனக்கு மட்டுமில்லை என்னை போல பல கலைஞர்களுக்கு உரிய நேரத்தில் எதையும் பார்க்காமல் உதவி செய்யக் கூடிய தங்கமான மனசு கொண்டவர் ரஜினி சார் என லிவிங்ஸ்டன் பேசியது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர்கள் பற்றிய உண்மையான விஷயங்கள் தெரியாமல் வெறும் நெகட்டிவிட்டியை மட்டுமே சோஷியல் மீடியாவில் பரப்பி வருவது வருத்தம் அளிக்கும் செயல் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications