twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாழ்க்கையில் எல்லாமே நடிப்புதான்.. அதை சரியா செய்ய வேண்டும்- சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டி முழு விபரம்

    |

    Recommended Video

    வாழ்க்கையில் எல்லாமே நடிப்புதான்.. ரஜினி பேட்டி முழு விபரம்

    ரஜினி.. இந்த மூன்றெழுத்து மந்திரத்தில் கட்டுப்பட்டுக் கிடக்கிறது தமிழ் சினிமா. அதனால்தான் அன்றாடச் செய்திகளில் ரஜினி என்ற பெயரோடு ஏதோ ஒரு செய்தி வெளியாகி ட்ரெண்டிங் ஆவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் அண்மையில் ரஜினிகாந்துக்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருது வழங்கப்பட்டது. இதையொட்டி, தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு ரஜினி சுமார் 24 வருடங்களுக்கு பின்னர் அளித்த ஒரு பேட்டி இப்போது பரவலாகி வருகிறது. அரசியல் கேள்வி ஒன்று கூட இல்லாத அந்த பேட்டி எடுத்த பெண்மணிக்கு ரஜினியின் இமாலய சாதனை எதையும் தெரிந்திருக்கவில்லை. பேட்டியின் ஊடே ரஜினி 'அமிதாப் என் நண்பர்' என்று சொன்ன போது மட்டும் 'வாவ் அமிதாப்-ஜி உங்க ப்ரண்டா? ' என்று காம்பியர் வியந்து கேட்டதும் , யாரோ எழுதிக் கொடுத்த கேள்விகளை நெட்டுரு போட்டு வந்தாலும் ரஜினியின் பதில்கள் ஒவ்வொன்றும் ஆழமாக, அர்த்தமுள்ளவைகளாக இருந்ததால் சோஷியல் மீடியாவில் வளைய வளைய இந்த பேட்டி வருவதுதான் ஹைலைட்.

    Rajinikanths Doordarshan Interview full text!

    இனி அந்த பேட்டியின் சாராம்சம் இதோ:

    கேள்வி :மிக சாதாரண சூழலில் இருந்து இந்த இடத்துக்கு வந்தவர் நீங்கள். திரும்பிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?

    ரஜினி பதில் :இதற்கு என் அம்மா, அப்பாவுக்கு, கடவுளுக்கு, சினிமா துறைக்கு, இயக்கு நர்கள், ரசிகர்களுக்குதான் நன்றி கூற வேண்டும்.

    கேள்வி :உங்களது இந்த ஒட்டுமொத்த பயணத் திலும் திருப்புமுனையாக அமைந்த ஒரு விஷயம் என்று எதை குறிப்பிடுவீர்கள்?

    ரஜினி : இயக்குநர் கே.பாலசந்தரை சந்தித்ததுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை. சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் படித்திருந்தாலும் ஒரு ஹீரோ ஆவேன் என்றெல்லாம் நினைக்கவில்லை. பாலசந்தர்தான் என்னை அடையாளம் கண்டு கொண்டார். அப்போது எனக்கு தமிழ்கூட தெரியாது. அவர்தான் என்னிடம், ''நீ தமிழ் மட்டும் கற்றுக்கொள். உன்னை எங்கே கொண்டு செல்கிறேன் பார்'' என்றார். என் மீது அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். என்னை எனக்கே அடையாளம் காட்டியவர் அவர்தான்.

    Rajinikanths Doordarshan Interview full text!

    'அபூர்வ ராகங்கள்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில்தான் நடித்தேன். பாலசந்தர் என்னிடம் ''இது ஒரு தொடக்கம் அல்ல; ஒரு சோதனை முயற்சிதான்'' என்றார். ஒரு சரியான தொடக்கம் என்று 'மூன்று முடிச்சு' படத்தை சொல்லலாம். ஒரு நல்ல குணச்சித்திர நடிகனாக என்னை உருவாக்க அவர் விரும்பினார். நான் ஒரு ஹீரோ ஆவேன் என்று அவரே கூட எதிர் பார்க்க வில்லை. ஹீரோவாக எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் கலைஞானம். அதிர்ஷ்டவசமாக அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமுதல், அந்த திசையிலேயே வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

    கேள்வி : நீங்கள் மிகவும் பணிவானவர், எளிமையானவர் என்று உங்கள் ரசிகர்கள், உங் களை அறிந்தவர்கள் கூறுகிறார்களே..

    ரஜினி : நான் இயல்பாக இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் இயல்புக்கு மீறி இருப்பதே பொதுவான விஷயமாக மாறிவிட்டது. எனவே அது வித்தியாசமாக தோன்றலாம்.

    கேள்வி:-சினிமாவில் உச்சத்தில் இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

    ரஜினி:- நான் இயல்பாக இருக்கிறேன். மற்றவர்களை போலவே நான் வாழ்கிறேன்.

    கேள்வி: தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஹாலிவுட் படங்களில் எல்லாம் நடித்திருக்கிறீர்கள். அது சவாலாக இருந்ததா?

    ரஜினி :நடிப்பு, உணர்ச்சிகள் ஆகியவை எல்லா இடங்களிலும் ஒன்றுதான். மொழிதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. ஆரம்பகாலத்தில் இந்தி படங்களில் நடிக்க மிகவும் சிரமப் பட்டேன். பின்னர் சிறிது சிறிதாக கற்றுக் கொண்டேன். பெங்களூருவில் இருந்த போது என் தாய்மொழியான மராத்தி, கன்னடம், இந்தி தெரியும். ஆனால் சினிமாவில் பேசுவது வேறு மாதிரியானது.

    Rajinikanths Doordarshan Interview full text!

    கேள்வி :நீங்கள் இயக்குநரின் நடிகரா?

    ரஜினி :ஆம். நிச்சயமாக.

    கேள்வி :கதையை எப்படி முடிவு செய்கிறீர்கள்.. கதையை வைத்தா, இயக்குநரை வைத்தா?

    ரஜினி :முதலில் இயக்குநரை வைத்துதான் கதையை தேர்ந்தெடுப்பேன். பின்னர் அவரோடு அமர்ந்து ஆலோசித்து, 'இப்படி செய்யலாம்.. அப்படி செய்யலாம்..'என்று யோசனை சொல்வேன். அடிப்படையில் நான் திரைப்படக்
    கல்லூரி மாணவர் என்பதால் நிறைய மாற்றங்கள் செய்வேன். பாலசந்தரும் அதைத்தான் சொல்லித் தந்திருக்கிறார். 'இயக்குநர் சொல்வதை அப்படியே செய்வதற்கு நீ எதற்கு? உன் யோசனைகளையும் சொல்லவேண்டும்' என்பார்.

    கேள்வி :உங்களுக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்க உங்களை ஊக்கப்படுத்தியது எது?

    ரஜினி : படத்தில் வில்லன் கதாபாத்திரத்துக்கு எந்த எல்லையும் இல்லை. அவனால் எதுவும் செய்ய முடியும். அதனால், அவனுக்கான மேனரிஸங்களை உருவாக்குவது எளிது. ஹீரோவுக்கு அப்படி அல்ல. ஹீரோவுக்கு சில வரையறைகள் உண்டு. எனவே ஒவ்வொரு படத்திலும் ஒரு புது மேனரிஸத்தை, ஸ்டைலை உருவாக்க வேண்டி இருந்தது

    கேள்வி:-உங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் எது?

    ரஜினி:-ராகவேந்திரா படம் எனது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

    கேள்வி :உங்கள் கண்களில் தீ இருந்ததாக பாலசந்தர் குறிப்பிட்டிருந்தார். அது இப்போதும் இருக்கிறதா?

    ரஜினி : நீங்கள்தான் சொல்ல வேண்டும். அது கடவுள் அருள். நான் என் நடிப்புத் தொழிலை மிகவும் ரசிக்கிறேன். இதை ஒரு சுமையாகவோ, வேலையாகவோ நான் பார்க்கவில்லை. ஒரு விளையாட்டாகத்தான் பார்க்கிறேன். எனவே எனக்கு எந்த டென்ஷனும் இல்லை. நாம் எதை செய்தாலும் ரசித்து செய்ய வேண்டும். அவ்வளவுதான்!

    கேள்வி:-அடிக்கடி இமயமலைக்கு செல்கிறீர்களே? ஏன்?

    ரஜினி:-புத்துணர்வு பெறுவதற்காகவே ஒவ்வொரு முறையும் இமயமலை செல்கிறேன்.

    கேள்வி :மூன்று தலைமுறையிலும் உங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்? நீங்கள் ஒரு சகாப்தமா அல்லது ஒரு நிகழ்வா?

    ரஜினி : நான் ஒரு நடிகன் மட்டுமே!

    கேள்வி:-சினிமாத்துறைக்கு புதியதாக வரும் இளைஞர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

    ரஜினி:-அவர்கள் வேலையை விரும்பி செய்ய வேண்டும்.

    கேள்வி:-உங்கள் வாழ்வில் பெரிய உத்வேகமாக யாரை கருதுகிறீர்கள்?

    ரஜினி:- அமிதாப்பச்சன்.

    கேள்வி:-குடும்ப உறவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?

    அதாவது உங்கள் நண்பர்களுக்கு நண்பனாக, உங்கள் குழந்தைகளுக்கு தந்தையாக, எங்கள் அனைவருக்கும் ஒரு நடிகராக எப்படி வித்தியாசப்படுகிறீர்கள்?

    பதில்:-(சிரிக்கிறார்) கேமராவுக்கு முன்னால் நடிப்பது மட்டுமல்ல; கேமராவுக்கு பின்னால் அனைத்துமே நடிப்புதான். வாழ்க்கையில் எல்லாமே நடிப்புதானே. ஆனால் சரியாக நடிக்க வேண்டும், அவ்வளவு தான். உங்கள் கதாபாத்திரங்களை உண்மையாகவும், நேர்மையாகவும் செய்ய வேண்டும்.

    English summary
    Superstar Rajni Calling himself a director's actor, he said that he gives first preference to the director. "When a script comes to me, I see the director first. If I have some suggestion, I convey it to them. If they accept, it's a yes. Basically, I improvise a lot. If I just do what the director says, then what is my input there. So, I improvise and I do it where it is required," he disclosed.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X