twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிரிக்கக்கூடாதுன்னா எப்படி? மனம் திறக்கும் ராஜவம்ச நாயகி நிக்கிகல்ராணி

    |

    சென்னை : சசிகுமார் நிக்கிகராணி நடிப்பில் சமீபத்தில் வெளியான குடும்ப திரைப்படம் ராஜவம்சம். தம்பிராமைய்யா, விஜயகுமார், யோகிபாபு, சதீஷ் என்று பலரும் நடிக்க கதிர்வேலு இயக்கியுள்ளார்.

    மாநாடு ,வனம் ஆகிய படங்கள் வெளியான அதே நாளில் ராஜவம்சம் ரீலீஸ் ஆகி உள்ளது . கிராமத்து இளவரசன் சசிகுமார் எப்போதும் போல மிகவும் எதார்த்தமாக நடித்து மக்கள் மனதை கவர்ந்து உள்ளார்.

    யாகவராயினும் நாகாக்க படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமான நிக்கிகல்ராணி ராஜவம்சத்தில் நாயகியாக நடித்துள்ளார்

    தமிழ் நன்றாக பேசும் நிகில்கல்ராணி, கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் பேசுவதிலும் நடிப்பதிலும் திறமைசாலி. ராஜவம்சம் திரைப்பட அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

    சாதனை படைத்த 'மாநாடு… ரசிகர்களுக்கு நன்றி சொன்ன படக்குழு!சாதனை படைத்த 'மாநாடு… ரசிகர்களுக்கு நன்றி சொன்ன படக்குழு!

     சிரிக்க கூடாது

    சிரிக்க கூடாது

    கேள்வி : ராஜவம்சம் திரைப்படம் அனுபவங்கள் ல மறக்கமுடியாத ஒன்னு சொல்லுங்களேன்

    பதில் : 25 நாள் பொள்ளாச்சியில் ஷூட்டிங். யோகிபாபு, சதீஷ், சிங்கம்புலின்னு நிறைய பேர் இருக்காங்க. அதுல நாலஞ்சி பேர் சுத்தி நின்னு காமெடி பண்ணுவாங்க. நான் சிரிக்காம நிக்கிற மாதிரியான ஷாட் ல்லாம் இருக்கும். எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும். சிரிச்சிடுவேன். அப்பறம் ஒன்மோர் போகவேண்டியதா இருக்கும்.

     ஹைட்ன்னா பயம்

    ஹைட்ன்னா பயம்

    கேள்வி : பாடலுக்கு கடுமையான ப்ராக்டீஸ் ல்லாம் எடுத்தீங்களாமே?

    பதில் :

    க்ளைமேக்ஸ்க்கு முன்னாடி ஒரு பாட்டு வரும். ஹெலிபேட் மேல இருக்குற மாதிரியான காட்சிகள் ல்லாம் வரும். அதுமட்டும் எனக்கு கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. ஏன்னா எனக்கு ஹைட்ன்னா பயம். ஹெலிபேட் கார்னர் ல நிக்கவச்சி டான்ஸ் பண்ணனும். லேசா மயக்கம் வர்ற மாதிரில்லாம் தோணும். இருந்தாலும் முயற்சி பயிற்சில்லாம் பண்ணி அத நல்லவிதமா பண்ணி முடிச்சாச்சு.

     நான் இப்படித்தான்

    நான் இப்படித்தான்

    கேள்வி : எப்பவும் சிரிச்சிகிட்டே ஜாலியா இருக்கீங்களே எப்படி?

    பதில் : இதுதான் நான் . வீட்லயும் அப்படிதான் இருப்பேன். அதுக்காக தனியா ப்ராக்டீஸ் பண்ணி, ஒரு மாதிரி என்ன க்ரியேட் பண்ணிக்கறதெல்லாம் இல்ல. எனக்கு ஒரு சீன் குடுத்தா அங்க போய், அந்த கேரக்டரா மாறி நடிச்சிட்டு வந்துடுவேன். அப்பறம் என்னோட இயல்புல நான் கேஷ்வலா ஜாலியா இருப்பேன். அவ்வளவுதான்

     திரும்பி பார்த்தா

    திரும்பி பார்த்தா

    கேள்வி : 29வருட நிக்கி கல்ராணி பத்தி சொல்லுங்க?

    பதில் : என்னோட கெரியர் ஆரம்பிக்கும் போது, இந்த இடத்துக்கு வருவேன், மக்கள் இவ்வளவு அன்பு ஆதரவு குடுப்பாங்க-ன்னு எதுவுமே எதிர்பார்க்கல. அப்படி வரனும், இப்படி ஆகனும்ன்னு ல்லாம் நான் ஆரம்பிக்கல. என்னோட பெஸ்ட் குடுத்துட்டு இருக்கேன். எதிர் பார்க்காமலே இதெல்லாம் என் வாழ்க்கையில கிடைச்சிருக்கு.

    கேள்வி : Proud moments ஷேர் பண்ணலாமே?

    பதில் : 1983ங்கிற படம் தான் என் முதல் படம். என்னோட முதல் படத்த தியேட்டர் ல பார்க்கும் போது, ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. மறக்கவே முடியாது என்னால. உட்கார சீட் இல்லாம, நடந்து போற இடத்துலல்லாம் உட்கார்ந்து பார்த்தாங்க மக்கள். அன்னைக்கு ஹவுஸ்புல் தியேட்டரே. அதெல்லாம் நெனக்கும் போது ரொம்பவே பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு.

    Recommended Video

    Rajavamsam | 49 முக்கிய நடிகர்கள் நடிச்சிருக்காங்க | Director Kathirvelu Exclusive| Filmibeat Tamil
     நானே டப்பிங்

    நானே டப்பிங்

    கேள்வி : எந்த டப்பிங் ஆர்டிஸ்ட் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?

    பதில் : எனக்கு வாய்ஸ் குடுத்த டப்பிங் ஆர்டிஸ்ட்ல ரொம்ப எனக்கு பொருத்தமா பேசினதுல ரவீனா ரொம்ப பிடிக்கும். என்னோட வாய்ஸ்க்கு என்னோட பாடிலேங்வேஜ் க்கு ரொம்ப பொருத்தமா பேசுவாங்க. நல்லா தமிழ் பேசுறீங்களே, நீங்களே டப் பண்ணலாமேன்னு என்ன பலபேர் கேட்டுருக்காங்க. ஆனா எனக்கு இன்னும் கான்ஃபிடண்ட் வரல. பேசுவேன், ஆனா சில உச்சரிப்புகள் மிகச்சரியா சொல்ல தெரியாது. கத்துகிட்டு இருக்கேன் என்று மகிழ்ச்சியாக நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் நிக்கி கல்ராணி.இந்த வீடியோ பேட்டியை பில்மிபீட் தமிழ் யூட்யூபில் முழுவதுமாக காணலாம்.

    English summary
    Rajvamsam Movie Heroine Nikki Galrani Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X