திருமணமானாலும் சிச்சுவேஷன்சிப்பில் தான் இருக்கோம்.. ரகுல் ப்ரீத் சிங் கணவர் பேச்சு.. நடிகையின் பதில்!

மும்பை: நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவரும் தயாரிப்பாளருமான ஜாக் பக்னானி சமீபத்தில் தனது மனைவியை பக்கத்தில் வைத்துக் கொண்டே தாங்கள் திருமணம் செய்துக் கொண்டாலும் சிச்சுவேஷன்ஷிப்பில் (Situationship) தான் இருக்கிறோம் என பேசியது சோஷியல் மீடியாவில் செம ட்ரோல் ஆகி வருகிறது.

இந்நிலையில், தனது கணவரின் கருத்துக்கும், குவியும் ட்ரோல்களுக்கும் தனது நிலைப்பாட்டை நடிகை ரகுல் ப்ரீத் சிங் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Rakul Preet Singh reacts over her Husband Jacky Bhagnani s Situationship comment and troll

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங் திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ரகுல் ப்ரீத் சிங்: கன்னடத்தில் 2009ம் ஆண்டு வெளியான கில்லி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் அருண் விஜய்க்கு ஜோடியாக தடையற தாக்க படத்தில் அறிமுகமானார். புத்தகம், என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே, அயலான் மற்றும் இந்தியன் 2 படங்களில் நடித்துள்ளார். இந்தியன் 3 திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளருடன் திருமணம்: என்ன தான் சினிமா ஹீரோயின்களை ரசிகர்கள் கனவுக்கன்னிகளாக பார்த்தாலும், எந்தவொரு நடிகையும் ரசிகர்களை எல்லாம் திருமணம் செய்துக் கொள்ளவே மாட்டார்கள். தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, தொழிலதிபர் என்று தான் செட்டில் ஆகின்றனர் என ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக் பக்னானியை திருமணம் செய்துக் கொண்டபோதும் ரசிகர்கள் புலம்பினர்.

சிச்சுவேஷன்ஷிப் தான்: 2024ம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், தொடர்ந்து சினிமாவில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு கணவனும் மனைவியும் ஜோடியாக வந்து பேட்டிக் கொடுத்த நிலையில், திருமணம் ஆனாலும், நாங்க சிச்சுவேஷன்சிப்பில் தான் இருக்கிறோம் என ஜாக் பக்னானி பேசியதும், இப்போ கூட என் எக்ஸ் கேர்ள் ஃபிரெண்ட் போன் பண்ணா நல்லா லவுட் ஸ்பீக்கரில் போட்டுத்தான் பேசுவேன் என்றும் பந்தா காட்ட, இருவருக்கும் இடையே ஏதாவது மனக்கசப்பு உள்ளதா? ரகுல் ப்ரீத் சிங் கணவர் ஏன் இப்படி பேசிவிட்டார் என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

நடிகையின் பதில்: இந்நிலையில், ட்ரோல்கள் ஒரு எல்லையை மீறிச் சென்ற நிலையில், அந்த காட்சிகளையும் ட்ரோல்களையும், மீம்களையும் பார்த்து நாங்க ரெண்டு பேர் ஜோடியாக சிரித்தோம். அவர் பேசியதை தவறாக புரிந்துக் கொண்டு ட்ரோல் செய்வதற்கும் ஒரு அளவு உண்டு. எங்களுக்குள் எந்த பஞ்சாயத்தும் இல்லை, தேவையான வதந்திகளை கிளப்ப வேண்டாம் என ரகுல் ப்ரீத் சிங் பதறியடித்துக் கொண்டு பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X