twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Sexuality குறித்து வெளிப்படையாக பேசும் பெண்கள்...ராம் கோபால் வர்மா,அப்சரா,நைனா ஸ்பெஷல் பேட்டி

    |

    சென்னை: தனக்கு சூர்யாவை பிடிக்கும் என்றும், நேரம் கைக்கூடி வந்தால் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தெரிவித்தார்.

    இரண்டு பெண்களுக்கு இடையேயான காதலும் மதிக்கப்பட வேண்டும் என்றும், எந்த ஒரு பெண்- Sexuality குறித்து வெளிப்படையாக பேசுகிறாரோ அவர் தான் சிறந்த பெண்மணி என்றும் தெரிவித்தார்.

    பெண்கள் சார்ந்த சர்ச்சைக்குரிய திரைப்படங்களை இயக்குவதும், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் ராம்கோபால் வர்மா, தற்போது இயக்கி ஏப்ரல் 8ம் தேதி வெளியாகும் "காதல்... காதல் தான்" திரைப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில், நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி இங்கு பார்க்கலாம்

    சோனமுத்தா போச்சா.. RRR அளவுக்கு புரமோஷன் பண்ணாரே ராம் கோபால் வர்மா.. எந்த தியேட்டரும் வாங்கலையாம்!சோனமுத்தா போச்சா.. RRR அளவுக்கு புரமோஷன் பண்ணாரே ராம் கோபால் வர்மா.. எந்த தியேட்டரும் வாங்கலையாம்!

    பெண்களின் காதல் மதிக்கப்பட வேண்டும்

    பெண்களின் காதல் மதிக்கப்பட வேண்டும்

    கேள்வி: இத்திரைப்படத்திற்கு "காதல்... காதல் தான்" என்ற தலைப்பை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

    பதில்: ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே உள்ளது மட்டும் காதல் அல்ல. இரண்டு பெண்களுக்கு மத்தியில் ஏற்படும் உணர்வும் காதல் தான். இரண்டு பெண்களுக்கு இடையேயான காதலும், மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் வைக்கப்பட்டது தான் இந்த தலைப்பு.

    லெஸ்பியன் உறவு

    லெஸ்பியன் உறவு

    கேள்வி: "காதல்... காதல் தான்" திரைபடத்தின் மையக்கருத்து என்ன?

    பதில்: இத்திரைப்படம் மிகவும் தனித்துவமானது. ஒரு நல்ல அனுபவத்தை தரும். ஆணும், பெண்ணும் காதல் செய்யும் படங்களை போல தான் இருக்கும். இத்திரைப்படம் ஒரு நாடகம் மாதிரி. இரண்டு பெண்கள் சில வில்லன்களிடம் மாட்டிக் கொண்டு தப்பிக்கிறார்கள். ஆனால் அவர்கள் லெஸ்பியின் பெண்கள் என்பதால் சில சம்பவங்கள் நடக்கின்றன. இரண்டு லெஸ்பியன் பெண்களாக அப்சரா, நைனா ஆகியோர் நடித்துள்ளனர். அப்சரா பல குறும்படங்களில் நடித்துள்ளார். இருவரும் நான் சொல்ல வருகின்ற கருத்தை உள்வாங்கி மிக சிறப்பாக நடித்துள்ளனர்.

    யாருடைய கண்கள் அழகானது

    யாருடைய கண்கள் அழகானது

    கேள்வி: அப்சரா, நைனா ஆகிய இருவரில் உங்களை அதிகம் கவர்ந்தவர் யார்? கேமரா கோணத்திலிருந்து யாருடைய கண்கள் மிக அழகானது என்று நினைக்கிறீர்கள்?

    பதில்: இவர்கள் இருவருமே மிகவும் பயங்கரமான பெண்கள். நைனாவின் கண்கள் மிகவும் அழகானவை. அப்சராவின் கண்களை விட தீர்க்கமானதாக தோன்றும். அதனால் தான் நைனாவிற்கு டாமினேஷன் பண்ணக்கூடிய ஆண் கதாபாத்திரத்தை வழங்கினேன். அப்சராவின் கண்களும் அழகானது. அது பார்ப்பவர்களை கவரக்கூடியதாக இருக்கும். அப்சரா நைனாவை விட கூடுதல் உயரம் இருந்தாலும் நைனா தான் அவரை டாமினேட் செய்யும் ரோல் செய்தார்கள். என்னை பொறுத்தவரை இருவரையும் எனக்கு பிடிக்கும் என்றார்.

    கோவாவில் பெண்கள் கட்டிப்பிடித்து படப்பிடிப்பு

    கோவாவில் பெண்கள் கட்டிப்பிடித்து படப்பிடிப்பு

    கேள்வி: பெண் லெஸ்பியன் குறித்த இத்திரைப்படத்தின் வெளிப்புற படப்பிடிப்பின் போது நீங்கள் அடைந்த சிரமங்கள் என்ன?

    பதில்: லைட்டிங், லொகேஷன் போன்றவை சிரமமமாக இல்லை. வெளிப்புற படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது. படப்பிடிப்புகளில் ஆணும், பெண்ணும் இணைந்து நடிக்கும் காட்சிகளை பார்த்திருந்த மக்களுக்கு, அப்சரா, நைனா என்று இரண்டு பெண்கள் கட்டிப்பிடித்து படப்பிடிப்பு நடந்த பொழுது,இப்படி வித்யாசமாக நடித்ததை வித்தியாசமாக பார்த்தனர். அவுட்டோர் ஷூட்டிங் சிரமங்கள் சில இருந்தாலும் இன்டோர் ஷூட்டிங்கில், யூனிட் ஆட்கள் முன்பு அப்சரா, நைனா ஆகிய இருவரும் சிரமம் இல்லாமல் நடித்தனர்.

    என் ரசனை

    என் ரசனை

    கேள்வி: சமீப காலகட்டங்களில் நீங்கள் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே. ஏன்?

    பதில்: அப்படி ஒன்றும் கிடையாது. எனது படங்களில் ஹீரோக்களுக்கு எதார்த்தமான சண்டை காட்சிகள் அமைத்திருப்பேன். ஒவ்வொரு திரைப்படமும் வெவ்வேறு காரணங்களுக்காக எடுக்கப்படுகின்றன. அவை அனைத்தும் எதார்த்தமாக அமைய வேண்டிய அவசியமில்லை. ஆனால் என் ரசனை மற்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்றதுபோல் அதில் கற்பனையான சில விஷயங்கள் மக்களை கவர்வதற்காக சேர்க்கப்படுவது உண்டு. மனிதன் லட்சம் மனிதர்களை அடித்து வீழ்த்துவதும் போல் காட்சிகளை அமைப்பது உண்டு. இது சில சமயங்களில் பலனளிக்ககூடியதாகும். பல வித உணர்வுகளை ருசிப்பது போல அது இருக்கும் என்றார்.

    Sexuality - ஒரு கருவி

    Sexuality - ஒரு கருவி

    கேள்வி: நீங்கள் இயக்காத மற்ற அடல்ட் கன்டென்ட் படங்களில் தாங்கள் விரும்பும் படம் எது? காரணம் என்ன?

    பதில்: Basic Instinct. ஏனெனில் அத்திரைப்படத்தில் ஒரு பெண்ணின் கதாபாத்திரம் மிகவும் வலிமையான ஒரு பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருப்பாள். அவளுடைய Sexuality ஐ ஒரு கருவியாக பயன்படுத்தியிருப்பாள். அவற்றை அவள் பெருமையாக நினைப்பாள். வெட்கப்பட மாட்டாள். எனக்கும் இதில் குற்ற உணர்ச்சி உண்டு. எந்த பெண்ணும் தன்னுடைய Sexuality பற்றி வெளிப்படையாக கூறுகிறாரோ, அவள் சிறந்த பெண்மணி. ஆண்கள் இதை தவறாக கருதுகிறார்கள். பெண்கள் இதைப் பற்றி பேச தயங்குகிறார்கள். என்னை பொறுத்தவரை "Basic Instinct" இந்த படம் தான் என்னுடைய பேவரைட் படம்.

    சூர்யாவை பிடிக்கும்

    சூர்யாவை பிடிக்கும்

    கேள்வி: தென்னிந்தியா நடிகர்களான சூர்யா சிம்பு, விஜய், அஜித் போன்றவர்களை சந்திக்க திட்டம் உள்ளதா?

    பதில்: இரத்த சரித்திரம் போன்ற படத்திற்கு தென்னிந்தியாவில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சூர்யா ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. சூர்யாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் தற்போது எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. நேரம் அமைந்தால் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்றார்.

    டேக் வாங்கவில்லை

    டேக் வாங்கவில்லை

    கேள்வி: நைனா, அப்சரா நீங்கள் இருவரும், இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் லெஸ்பியன் கான்செப்ட் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் நீங்கள் என்ன கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்?.

    நைனா கங்குலி பதில் : ஆரம்பத்தில் கொஞ்சம் அசௌகரியமாக தான் பீல் பண்ணினேன். லெஸ்பியன் போன்ற படங்களில் நடிப்பது எனக்கு முதல்முறை. நான் எப்பொழுது எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்வேன். கதாநாயகர்களுடன் நடிக்கும்பொழுது இருக்கும் பீலிங் போல இல்லாமல் இது கொஞ்சம் சாப்ட் பெர்மான்ஸாக இருந்தது. ஆணின் உடல் மொழியை காட்டிலும் பெண்களின் உடல் மொழி கொஞ்சம் மென்மையாக இருந்தது. அப்ஸராவுடன் நடிக்கும்பொழுது மிகவும் மென்மையாக இருந்தது. இந்த படத்தில் நான் நடிக்கும்பொழுது அதிக டேக் வாங்கவில்லை. அந்த சீனுக்கு தேவையான புரிதல் எனக்கு இருந்ததால், நடிப்பது ஈஸியாக இருந்தது. இப்படத்திற்கு நான் இந்தியில் டப்பிங் பேசியுள்ளேன் என்றார். இதே கேள்விக்கு பதிலை அப்சராவும் கூறினார்.

    அப்சரா பதில் : நான் சில குறும்படங்களில் நடித்துள்ளேன். எனது சின்ன வயது கனவு நனவாகியுள்ளது. சினிமாவில் சாதிப்பது மிகவும் கடினம் என்பது எனக்கு தெரியும். அதனால் நான் இன்ஜினியரிங் முடித்தேன். இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷம். குடும்ப உறுப்பினர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். இப்படத்திற்கு நான் வங்காள மொழியில் டப்பிங் பேசியுள்ளேன்.

    Pan India Film மற்றும் இந்த வெரைட்டி படங்கள்...

    கேள்வி: லெஸ்பியன் மற்றும் வயது வந்தோருக்கான படங்களை மட்டும் ஏன் Pan India படமாக எடுப்பதில்லை?RGV films என்ற brand உங்களுக்கு உண்டு நீங்கள் முயற்சி செய்யலாமே ...

    பதில்: Pan India என்பதற்கு விளக்கம் என்னவென்றால் திரைப்படத்தின் பின்னணி மற்றும் அதில் உள்ள Regional Flavor போன்றவற்றின் அடிப்படையில் ஒரு திரைப்படத்தை எந்த மொழியில் வேண்டுமானாலும் திரையிடலாம். ஆனால் பல திரைப்படங்கள் அது போன்று வெளியிடப்படுவதில்லை. நானும் கண்டிப்பாக Pan India Films ஸ்கிரிப்ட் தயார் செய்து வருகிரேன்.

    கேள்வி: ஏப்ரல் 8ல் படம் வெளியாகிறது. படம் குறித்து உங்களின் எதிர்பார்ப்பு என்ன?

    பதில்: நான், நைனா, அப்சரா ஆகிய நாங்கள் மூவரும் இது பற்றி ஏற்கனவே முடிவெடுத்துள்ளோம். படம் வெளியானதும் எப்படிப்பட்ட எதிர்மறை விளைவுகள் இருந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். சில பேர் இது மாதிரியான படங்களை விரும்பலாம். விரும்பமாலும் போகலாம் என்றார். நெட்பிலிக்ஸ் மற்றும் பல ஒடிடி தளங்களில் இது போன்ற படங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தாலும், சென்சார் போடு வயது வந்தோருக்கான படங்களுக்கு சுதந்திரம் அளிப்பதில்லை என்று ராம் கோபால் வர்மா கூறினார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/v2RQBgNsMZk இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் இயக்குனர் ராம்கோபால் வர்மா, நடிகை அப்சரா, நடிகை நைனா கங்குலி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    Ram Gopal Varma, Actress Apsara and naina Ganguly Exclusive Interview about Kadhal Kadhal than Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X