Captain Prabhakaran: ராசி இல்லாத நடிகைனு சொன்னாங்க.. அத மாத்துனது விஜயகாந்த்.. ரம்யா கிருஷ்ணன்!
சென்னை: ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் விஜயகாந்தின் நூறாவது திரைப்படமாகும். இந்த படத்தில் சரத்குமார், மன்சூர் அலிகான், ரூபினி, லிவிங்ஸ்டன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 4K தொழில்நுட்பத்துடன் வரும் 22ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது அதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், பேசிய ரம்யா கிருஷ்ணன் பேசினார்.
இசையானி இளைராஜாவின் இசையில், கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம் பெற்ற பாசமுள்ள பாண்டியரே, ஆட்டமா தேரோட்டமா என்ற பாடலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பாடலாக உள்ளன. குறிப்பாக ஆட்டமா தேரோட்டமா பாடலுக்கு ரம்யா கிருஷ்ணன் ஆடிய ஆட்டத்தை இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ரம்யா கிருஷ்ணன்: நான் சினிமாவில் அறிமுகமான போது தமிழில் எனக்கு வாய்ப்பு வராததால் தெலுங்கு பக்கம் சென்றேன். அங்கு ஒரு சில படங்கள் நடித்துவிட்டு கேப்டன் பிரபாகரன், படத்தில் இரண்டாவது கதாநாயகி என்று தான் சொன்னார்கள். ஆனால், ஆட்டமா தேரோட்டமா பாடல் இப்போது வரைக்கும் எவர் கிரீன் பாடலாக உள்ளது. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆனபோதும், அந்தப் பாட்டுக்கு இவ்வளவு பேரும் புகழும் இருந்ததோ, அதே பெயரும் புகழும் இப்போதும் அதே பாட்டுக்கு இருக்கிறது எனக்கும் இருக்கிறது. அப்படி ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்த செல்வமணி சார் அவர்களுக்கும், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் என் நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன். கேப்டன் பிரபாகரன் படம் தியேட்டரில் வெளியாகி முதலில் எப்படி வெற்றி பெற்றதோ அதைவிட டபுள் மடங்கு வெற்றியை இந்த திரைப்படம் பெற்று தர வேண்டும் அதற்காக மேலே இருந்து அவர் நிச்சயம் வாழ்த்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று ரம்யா கிருஷ்ணன் கூறினார்.
விஜய பிரபாகரன்: இந்த நிகழ்ச்சியில் பேசிய, விஜய பிரபாகரன், எனக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைத்ததற்கு முக்கிய காரணமே இந்த திரைப்படம் தான். கேப்டன் பிரபாகரன் படம் எடுக்கும் போது தான், நான் பிறந்தேன். அதேபோல விடுதலைப்புலிகளின் தலைவன் பிரபாகரன் நினைவாக அப்பா எனக்கு இந்த பெயரை வைத்ததாக பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறார். இந்த பெயரை வைத்ததற்கான அர்த்தம் எப்போது உனக்கு புரியாது, ஆனால், நான் இல்லாத போதும் இந்த பெயர் உன்னை உயர்த்தும் என்று அப்பா என்னிடம் சொல்லி இருக்கிறார். அதற்கான காரணம் என்ன எனக்கு இப்போதுதான் புரிகிறது. எனக்கு எம்பி பதவி எல்லாம் முக்கியமே இல்லை. கடைசி வரை நான் விஜயகாந்த் மகன் என்கின்ற பெருமை மட்டுமே எனக்கு போதும். இந்த உலகத்தில் நான் இருக்கும் கடைசி நிமிஷம் வரைக்கும் என்னுடைய அப்பாவை நான் நினைத்துக் கொண்டே தான் இருப்பேன். தினமும் அவரை நினைத்து நான் அழுது கொண்டே தான் இருக்கிறேன் என்றார். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் இளவரசு, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், இயக்குநர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டு விஜயகாந்தை நினைவு கூர்ந்து பேசினார்கள்.


Click it and Unblock the Notifications











