பாம்பு கடிச்சதே தெரியல.. கடைசி நேரத்தில் பேசிய வார்த்தை.. அப்பா மரணம் ரம்யா பாண்டியன் பேட்டி
சென்னை: ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ சூட் நடத்தி, ஓவர் நைட்டில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். போட்டோ ஷூட் மூலமாகக்கூட ஒருவரால் இவ்வளவு பெரிய பிரபலமாக மாற முடியும் என்பதைத் திரையுலகில் நிரூபித்துக் காட்டியவர் இவர். எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், தற்போது தன்னுடைய அப்பா குறித்தும், அவரது எதிர்பாராத மரணம் குறித்தும் மனம் திறந்து பேசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் உருக வைத்துள்ளார்.
நடிகை ரம்யா பாண்டியன்: டம்மி டப்பாசு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா பாண்டியன், அந்தப் படத்தைத் தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை எனப் பல திரைப்படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், இவருக்குத் திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையையும், அடையாளத்தையும் கொடுத்தது அந்த மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட் தான். அந்த போட்டோ ஷூட்டிற்குப் பிறகு அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக மாறினார் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் வலம் வந்து கொண்டு இருக்கும் ரம்யா பாண்டியன், தற்போது 'அருள்வான்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் நாளை ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அப்பாவின் திடீர் மறைவு: தற்போது 'அருள்வான்' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து வரும் ரம்யா பாண்டியன், தன்னுடைய அப்பாவின் மரணம் குறித்து மிகவும் இறுக்கமான குரலில் பேசியுள்ளார். என்னுடைய அப்பா பாம்பு கடித்ததால் தான் இறந்துபோனார். ஆனால், பாம்பு கடித்திருக்கிறது என்ற விஷயமே அவருக்குத் தெரியவில்லை. என்னுடைய அம்மாதான், அவர் காலில் ஏதோ தழும்பு இருக்கிறது, பாம்பு கடித்திருக்கலாம்... அவரை ஹாஸ்பிடலுக்குப் போகச் சொல் என்று என்னிடம் சொன்னார். ஏனென்றால்,அப்பாவிற்கு என் மீது பாசம் நான் சொன்னால் தான் அப்பா கேட்பார்.
கடைசி நேரத்தில் கூட: ஆனால், அது பாம்பு கடி என தெரியாமல் போய்விட்டதால், அதற்குள்ளாக விஷம் ஏறி அவருடைய கிட்னி, ஹார்ட், மூளை என உடல் உறுப்புகள் அனைத்தும் அடுத்தடுத்து செயலிழந்து விட்டன. அவருடைய மூளை செயலிழப்பதற்கு முன்பாகக் கூட, மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்த அப்பா, என்னை பற்றித் தான் மிகவும் பொறுமையாக அங்கே இருந்த டாக்டரிடம் பேசிக் கொண்டிருந்தார். அன்று தான் என் அப்பாவும் நானும் கடைசியாகப் பேசிக்கொண்டது. அதற்கு அடுத்த நாளே நினைவு முழுவதையும் இழந்துவிட்டார். அதன் பிறகு நினைவே வராமல் அப்படியே அப்பாவும் இறந்துவிட்டார் என்று ரம்யா பாண்டியன் தனது தந்தையின் கடைசி நிமிடங்களை நினைவுகூர்ந்து பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications