வில்லி வேஷம்தான் வேணும்! - சவால்விடும் ரம்யா

By Shankar

சமீபத்தில் வெளிவந்த 'தடையற தாக்க' படத்தில் ஒரு பெண் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. யாருப்பா இந்தப் பொண்ணு என்று பார்த்தவர்களைக் கேட்க வைத்த அவர் பெயர் ரம்யா.

அக்கா, தோழி, அண்ணி வேடங்களில் நடித்தாலும், ஒரு கதாநாயகிக்குரிய அழகும் இளமையும் கொண்டவர் ரம்யா.

ஏன்? கதாநாயகியாக நடிக்க முயற்சிக்க கூடாது என ரம்யாவிடம் கேட்டபோது..

"சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஏகப்பட்ட போட்டி. அப்படியே ஒரு படத்தில் அறிமுகமானாலும் அந்த வாய்ப்பை தொடர்ந்து தக்க வைத்துகொள்வதற்கு படாதபாடு பட வேண்டும். என்னைப் பொறுத்தவரை கிடைக்கிற கேரக்டர் ரோல்களில் திறமையைக் காட்டுவது பிடித்திருக்கிறது.

எப்படி நடிக்க வந்தீர்கள்?

நான் எம்.ஏ. பப்ளிகேஷன்ஸ் படித்துள்ளேன். மாடலிங் துறையில் ஆர்வம் அதிகம்.அப்படியே சின்னத்திரைக்குள் நுழைந்தேன். 'இது ஒரு காதல் கதை' நான் அறிமுகமான முதல் சீரியல். அதைத் தொடர்ந்து கரு. பழனியப்பன் இயக்கி நடித்த 'மந்திரப்புன்னகை' படத்தில் கதாநாயகனின் சின்ன வயது அம்மாவாக நடித்தேன். எல்லோராலும் பாராட்டப்பட்ட அந்த கேரக்டர் மூலம் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. டீசண்டான பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதனாலேயே சில படங்களில் என்னால் நடிக்க முடியவில்லை.

'தடையற தாக்க' படம் பார்த்தவர்கள் அத்தனை பேரும் என்னை அடையாளம் கண்டு கொண்டு பாராட்டுகிறார்கள். அந்தப் படத்தில் வில்லனை ஒரு ஆட்டுதொட்டியில் சந்திப்பது போன்று ஒரு காட்சி வரும். அந்த காட்சியை ஒரிஜினல் 'ஆட்டுதொட்டி' பகுதியில் 3 நாட்கள் படமாக்கினார்கள். அப்படியொரு இடத்தை நான் பார்த்ததே கிடையாது. ஆனாலும் மிகவும் சிரமப்பட்டு நடித்தேன். தற்போது 'கண்டுபிடி கண்டுபிடி' எனும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் சீமான் சார் ஜோடியாக நடித்துள்ளேன். ஒரு திருமண மண்டபத்திற்குள் நடக்கும் கதை. இதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியள்ளார் இதன் இயக்குனர்.

'கண்டுபிடி கண்டுபிடி' விரைவில் ரிலீசாக உள்ளது. பாலுமகேந்திரா சார் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்காத ஒரு புதுப்படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன். தமிழ் சினிமாவின் கேமரா கவிஞரும், மிகப்பெரிய இயக்குனருமான அவர் படத்தில் நடிப்பதை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன்.

எனக்கு யாராவது 'வில்லி' வேடம் கொடுத்தால் அதில் கண்டிப்பாக கலக்குவேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன் என்றார் ரம்யா.

More from Filmibeat

Read more about: ramya ரம்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X