4 மணிநேரம் தூக்கம், வீட்டிற்கு செல்லக் கூட நேரமில்லை: ரஷ்மிகா
சென்னை: நடிகை ரஷ்மிகா தினமும் 4 மணிநேரம் தான் தூங்குகிறாராம்.
கன்னட நடிகையான ரஷ்மிகா தெலுங்கு, தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் அவருக்கு ஜோடியாக ரஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிப்பு, படங்கள் குறித்து ரஷ்மிகா கூறியதாவது,

பிசி
நான் காலை 6 மணிக்கு வேலைக்கு செல்கிறேன். இரவு 8 மணிக்கு தான் வீடு திரும்புகிறேன். அதன் பிறகு ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வேன், மீட்டிங்குகளுக்கு செல்வேன். நான் தூங்க இரவு 2 மணி ஆகிவிடும். இப்படித் தான் கடந்த சில வாரங்களாக என் வாழ்க்கை மிகவும் பிசியாக உள்ளது. ஆனால் எனக்கு இது பிடித்துள்ளது.

ரசிகர்கள்
நான் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்களை நினைவு வைத்து அந்த பெயரை வைத்தே ரசிகர்கள் என்னை அழைக்கிறார்கள். அது தான் என் நடிப்புக்கு கிடைத்துள்ள வெற்றி. நான் தற்போது நிறைய மாறிவிட்டேன். முன்பெல்லாம் மேடையில் பேச பயப்படுவேன். நான் பேசுவதை யார் கேட்கப் போகிறார்கள் என்று நினைப்பேன். ஆனால் மக்களுக்கு என்னை பிடித்துள்ளதால் தான் நான் மேடையேறியுள்ளேன் என்பதை புரிந்து கொண்டுள்ளேன்.

வீடு
நான் ரொம்ப பிசியாக இருப்பது பிடித்துள்ளது. எனக்கு வீட்டிற்கு செல்ல நேரம் இல்லை. ஆனால் இது வேலை செய்ய வேண்டிய நேரம் என்பதை என் பெற்றோர் புரிந்து கொண்டுள்ளது எனக்கு உத்வேகமாக உள்ளது. 90களில் நடிகை குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டியதாக என் அப்பா சொன்னார். நல்ல நல்ல படங்கள் மூலம் மக்கள் என்னை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று ரஷ்மிகா தெரிவித்துள்ளார்.

கோவில்
ரஷ்மிகாவின் பேட்டியை பார்த்தவர்கள் அவர் தனக்கும் கோவில் கட்டுமாறு மறைமுகமாக கூறுவதாக தெரிவித்துள்ளனர். கன்னடத்தில் சரளமாக பேசுவது கஷ்டம் என்று கர்நாடகாவை சேர்ந்த ரஷ்மிகா தெரிவித்தது சாண்டல்வுட் ரசிகர்களுக்கு பிடிக்காமல் வறுத்தெடுத்துள்ளனர். இந்நிலையில் கோவில் கேட்குதாக்கும் இந்த அம்மாவுக்கு என்று விளாசுகிறார்கள். ரஷ்மிகா எது சொன்னாலும் பிரச்சனையாகிவிடுகிறது. அவர் சாதாரணமாக பேசினால் கூட விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications











