அதுக்கு ஒத்துக்கிட்டா நான் சீக்கிரமே காணாமல் போய்விடுவேன்: விஜய் ஹீரோயின்

By Siva

Recommended Video

Rashmika Speech: என்னை abuse செய்யாதீங்க ராஷ்மிகா பேச்சு

சென்னை: பல பட வாய்ப்புகளை நிராகரிப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ரஷ்மிகா மந்தனா.

கன்னட நடிகையான ரஷ்மிகா தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம் ரஷ்மிகா கோலிவுட் வந்துள்ளார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் தளபதி 64 படத்தில் ரஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ரஷ்மிகா

ரஷ்மிகா

ரஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்துள்ள டியர் காம்ரேட் தெலுங்கு படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் ரஷ்மிகா. ரஷ்மிகா தன்னை தேடி வரும் பல பட வாய்ப்புகளை ஏற்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குநர்கள்

இயக்குநர்கள்

கமர்ஷியல் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் நான் தான் அதை ஒப்புக் கொள்வது இல்லை. நான் நடிக்கும் கதாபாத்திரம் வலுவானதாக இல்லை என்றால் மக்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அனைவருக்கும் ஈகோ உள்ளது. அதனால் நான் கமர்ஷியல் படங்களில் நடிக்க மறுப்பது இயக்குநர்களுக்கு நிச்சயம் பிடிக்காது. ஆனால் அவர்கள் ஒரு நிமிடம் என் நிலையில் இருந்து யோசித்தால் நான் ஏன் இப்படி செய்கிறேன் என்பது புரியும். நான் வெறும் பொம்மை இல்லை.

பெருமை

பெருமை

நான் கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்தால் சில ஆண்டுகள் தான் தாக்குப்பிடிக்க முடியம். நான் எத்தனை ஆண்டுகள் இந்த துறையில் இருக்கிறேன் என்பதை தாண்டி நான் நடிக்கும் படங்களை நினைத்து பெருமைப்பட விரும்புகிறேன். கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேனே என்று பிற்காலத்தில் நான் வருத்தப்பட விரும்பவில்லை.

ஹீரோயின்

ஹீரோயின்

ஒரு படத்திற்கு ஹீரோ போன்றே ஹீரோயினும் முக்கியமே. ஹீரோவும், ஹீரோயினும் ஒரே மாதிரி வேலை செய்தாலும் ஹீரோயின்கள் வெகுகாலம் நீடிப்பது இல்லை. நடிகை ஒருவர் 15 ஆண்டு காலம் திரைத்துறையில் நீடித்தாலும் அது ஒரே மாதிரி இருக்காது என்கிறார் ரஷ்மிகா மந்தனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X