சோப்பு விற்கலாம்? அதத்தான் விற்கக்கூடாது? ஐஸ்வர்யா பளீச் பேச்சு!
சென்னை: பழம் பெரும் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா தனது அம்மாவைப் போலவே நடிகையானார். இவர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான ராசுகுட்டி படத்திற்கு பின் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யா, ஆறு படத்தில் சவுண்டு சரோஜா கதாபாத்திரம் இவருக்கு பக்காவாக பொருந்தி இருந்தது. தற்போது இவர் லீடர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருக்கும் இவர், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், லெஜன்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது, வலைப்பேச்சு பிஸ்மியை கட்டிப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலானது குறித்து பேசிய ஐஸ்வர்யா, பிஸ்மி மற்றும் ரியாஸ் இருவரையும் எனக்கு 90 காலகட்டத்தில் இருந்து தெரியும், இருவருமே அந்த காலகட்டத்தில் ஸ்டூடியோவிற்கு வந்து போட்டோ எடுப்பார்கள். அப்போதில் இருந்தே பிஸ்மி மற்றும் ரியாஸ் இருவரும் நண்பர்கள். பிஸ்மியை நான் சந்தித்து கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு மேல் ஆகிறது. அவருடைய வலைப்பேச்சு இன்டர்வியூ பார்த்து இருக்கிறேன். ஆனால், நேரில் சந்தித்து பல வருடத்திற்கு மேல் ஆகிவிட்டதால், மகிழ்ச்சியில் அவரை அப்படி கட்டிப்பிடித்தேன்.

ஐஸ்வர்யா பாஸ்கர்: பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள், கேமரா இருக்கிறது என்பதற்காக நார்மலாக அவரிடம் சென்று பேச முடியுமா? அவன் என் நண்பன் நண்பனை கட்டிப்பிடித்து பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. அன்றைய இசை வெளியீட்டு விழாவில் பழைய பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். அந்த இடத்தில் ரியாசை சந்தித்து இருந்தாலும் இதே போல தான் கட்டிப்பிடித்து பேசி இருப்பேன் அது என்னுடைய இயல்பு என்னுடைய பழக்கம் என்றார்.
சோப்பு விற்பது தப்பா: தொடர்ந்த சோப் விற்பனை செய்வது குறித்து பேசிய ஐஸ்வர்யா, நான் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்த நேரத்தில் என்னுடைய தேவைகளுக்காக சோப்பு விற்பனை செய்தேன். அது குறித்து பலவிதமான விமர்சனங்கள் வந்தன. இதில் என்ன தவறு இருக்கிறது. கேக்கு விற்பனை செய்யலாம், மளிகை கடை வைக்கலாம், இட்லி கடை கூட வைக்கலாம், வேற எதையாவது விற்பனை செய்வதற்கு பதிலாக சோப்பை விற்பனை செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை. மரியாதையாக எந்த தொழிலை செய்தாலும் அது மதிக்கப்பட வேண்டும். எனக்கு பட வாய்ப்பு இல்லாமல் போனால் கூட நான் இட்லி கடை வைத்துக் கூட பிழைத்துக் கொள்வேன் எனக்கு எந்த விதமான பிரச்சனையும் கிடையாது என ஐஸ்வர்யா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











