சில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்
Recommended Video

மும்பை: சில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் ரவி கிஷன்.
சுமார் 30 ஆண்டு காலமாக திரையுலகில் உள்ளவர் ரவி கிஷன். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ரவியும் படுக்கைக்கு அழைப்பது குறித்து மனம் திறந்துள்ளார். விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ள ரவி இது குறித்து கூறியதாவது,

படுக்கை
பட வாய்ப்புக்காக பெண்களை மட்டும் அல்ல ஆண்களையும் தான் அழைக்கிறார்கள். இது எல்லாம் சகஜம். இதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று போகப் போக தான் தெரியும்.

நடிகர்கள்
சில நடிகைகள் நடிகர்களை கொடுமைப்படுத்துகிறார்கள். படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெற்றால் வாழ்க்கையில் ஒரு போதும் முன்னேற முடியாது. உங்களை விற்று பெறும் வாய்ப்பால் உங்களுக்கு எதிர்காலம் இல்லை.

வெறுப்பு
படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் உங்களை விற்று தான் இந்த நிலைக்கு வந்தீர்கள் என்ற நினைப்பே உங்களை கொடுமைப்படுத்தும் என்றார் ரவி.

ரன்வீர் சிங்
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் ரன்வீர் சிங் தான் பாலிவுட்டுக்கு வந்த புதிதில் தன்னை சிலர் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்தார். நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











