பிளாக் மேஜிக் பண்றாங்க.. என்னை சாகடிக்காம விட மாட்டாங்க.. உடைந்து அழுத ரவி மோகன்!
சென்னை: ஆர்த்தி ரவி, கெனிஷா விஷயம் சோஷியல் மீடியாவில் மிகவும் பூதாகரமாகி இருக்கும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். இந்த 14 வருடம் நான் அனுபவித்த வலி, வேதனை, அவமானத்தை யாரும் அனுபவிக்கக்கூடாது. நான் சாக வேண்டுமென நினைக்கிறார்கள், அது நடந்துவிடும் என கண்கலங்கி பேசினார்.
தன்னுடைய வாழ்க்கையில் தொடர்ந்து சைபர் புல்லிங், தனிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளால் நான் மனமுடைந்து இருக்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. இருந்தும் என்னை ஏன் நிம்மதியாக வாழ விட மாட்டீர்கள்? இத்தனை நாட்களாக நான் அமைதியாக இருந்தது தான் என் தவறு. அதற்கு மேல் நான் அமைதியாக இருக்க மாட்டேன். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள், என் வாழ்க்கையில் அதுதான் நடந்திருக்கிறது.

ரவி மோகன்: 23 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இதுவரை என் மீது எந்த விதமான குற்றச்சாட்டும் வந்ததில்லை. ஆனால், இப்போது அழகில் மயங்கி போய்விட்டான் என சொல்கிறார்கள். என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். அத்தனை வருடங்களாக நான் பார்க்காத அழகா? கெனிஷா ஒருவர் தான் என்னை நன்றாக புரிந்து கொண்டார். அவரையும் இப்போது இங்கிருந்து அனுப்பிவிட்டீர்கள். என் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் வந்து தீர்ப்பு சொல்லாதீர்கள். மூன்று எழுத்து இட்லி நடிகை தன்னுடைய குடும்ப வாழ்க்கை, நண்பர்கள் மற்றும் உறவுகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவர் யார்? என் குடும்பத்தை பற்றி பேசுவதற்கு அவர் யார்? அதோடு என்னை பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
கையை அறுத்துக்கொண்டேன்: என் குடும்ப வாழ்க்கையில் என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா? கல்யாணம் பண்ணும்போதே என் பெற்றோர் இந்த பெண் வேண்டாம் என்று கெஞ்சினார்கள். அந்த திருமணமே எப்படி நடந்தது தெரியுமா? கையை அறுத்துக்கொண்டு தான் நடந்தது. வேண்டுமானால் திருமண போட்டோவை பாருங்கள். இப்போ நான் கையை அறுத்துக்கொண்டு இருக்கிறேன். என் பசங்களை பார்க்க அனுமதிக்கவில்லை. ஸ்கூலுக்கு போனாலும் அனுமதிக்கவில்லை. அவங்க என் பசங்க, எனக்கு இல்லையா பாசம்? என் பசங்களுக்காகத்தான் நான் 14 வருடம் அமைதியாக இருந்தேன்.
இனி சும்மா இருக்க மாட்டேன்: பிளாக் மேஜிக் பண்றாங்க. நான் அவங்க கூட இருக்கும் போதும் பண்ணாங்க, இப்பவும் பண்றாங்க. ரத்தம் ரத்தமா வாந்தி எடுக்கிறேன். அவங்களுக்கு நான் சாக வேண்டும். நான் உயிரோடு இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். அதுதான் நடக்கப்போகுது. ஆனால், அதற்கு முன்னாடி எல்லா ஆதாரங்களையும் நான் வெளியிடுவேன். சும்மா இருக்க மாட்டேன். பல வெற்றிப்படங்களை கொடுத்து கோடி கோடியா சம்பாதித்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு இன்று வாடகை வீட்டில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். அவர்கள் சொகுசாக வாழ்கிறார்கள்.

பல அவமானங்கள்: திருமண வாழ்க்கையில் பல விஷயங்கள் வெளியுலகத்திற்கு தெரியாது. பல ஆண்டுகள் நான் அடிமையாக இருந்தேன். என்னை ஒரு "கம்பெனி ஆர்டிஸ்ட்" போல கட்டுப்படுத்தி, அவர்களின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைத்தார்கள். நான் விரும்பிய படங்களில் என்னால் நடிக்க முடியவில்லை. அந்த வீட்டில் வெளியில் சொல்ல முடியாத பல அவமானங்கள் நடந்தது. அதில் இருந்து தப்பித்து நான் வெளியில் வந்தேன். நான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து 4 வருடம் ஆகிறது. ஆனால், இரண்டு வருடமாக இந்த விஷயத்தை பெரிதாக்கி, பெண்ணின் பின்னாடி போய்விட்டான் என சொல்கிறார்கள்.
சீண்டிப்பாக்காதீங்க: சமூக வலைதளங்களில் நடக்கும் மோசமான கருத்துக்களால் எத்தனை பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் தெரியுமா? ஒருவரின் வாழ்க்கையிலும், இமேஜிலும் விளையாடாதீர்கள். நிறைய பேர் என்னை சீண்டி பார்க்கிறார்கள். யாராக இருந்தாலும் நேரடியாக வரட்டும், நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் என்ற ஜெயம் ரவி, எனது விவாகரத்து பிரச்சனை முடிவுக்கு வரும் வரை என் படங்கள் எதுவும் வெளியாகாது. என்னால் நடிக்க முடியவில்லை. எனக்கு எப்போது விவாகரத்து கிடைக்கிறதோ, என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் எப்போது நிம்மதியாக இருக்கிறேனோ, சமூக ஊடகங்கள் என்னை விமர்சிப்பதை எப்போது நிறுத்துகிறதோ, அன்றுதான் நான் மீண்டும் நடிக்க வருவேன். இந்த இக்கட்டான நேரத்தில் என்னுடன் இருந்தவர்களுக்கு நான் எப்படிப்பட்டவன் என்று தெரியும். அவர்கள் என்னுடன் இருப்பார்கள்" என ரவி மோகன் உடைந்து கண்கலங்கி பேசினார்.


Click it and Unblock the Notifications