எங்க ரெண்டு பேருக்கும் ஈகோ சண்டை நடக்கும்.. மீண்டும் மகனுடன் படம் பண்ணப் போறேன்.. ரவி மோகன் ஓபன்!

சென்னை: ஜெயம் ரவியாக ரசிகர்களுக்கு 22 ஆண்டுகளாக பரீட்சையமானவர் காதலிக்க நேரமில்லை படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக ஞானோதயம் பிறந்து தனது பெயரை ரவி அல்லது ரவி மோகன் எனக் கூப்பிடுங்கள் என்றும் ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என அன்பு கோரிக்கையை வைத்திருந்தார். இந்நிலையில், காதலிக்க நேரமில்லை படத்தின் புரமோஷனுக்காக அவர் அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் மகனுடன் இணைந்து படம் பண்ணப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ரவி தனது மனைவி ஆர்த்தி ரவியை கடந்த ஆண்டு பிரியப்போவதாக அறிவித்து நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக நின்றது அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்றும் எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்ளலாமே என்றும் கூறினர்.

jayam ravi ravi mohan kadhalikka neramillai

ரவி தன்னிடம் பேசவே விரும்பவில்லை என்று ஆர்த்தி ரவி அந்த விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்காத நிலையை வெளிப்படுத்தியது மேலும், பூகம்பத்தை கிளப்பியது.

ஈகோ சண்டை நடக்கும்: அண்ணன் மோகன் ராஜாவுடன் படம் பண்ணுவது தான் தனக்கு ரொம்பவே கம்ஃபர்ட்டான ஒன்று என பேசிய ரவி, எங்களுக்குள்ள ஷூட்டிங் ஸ்பாட்டில் ஈகோ சண்டையும் நடக்கும். ஆனால், அது படத்துக்காக மட்டுமே இருக்கும். எங்கப்பா எங்களுக்கு சொன்ன ஒரே விஷயம் என்னன்னா நாம வீட்ல எப்படி வேணா திட்டிக்கலாம். ஆனால், படத்தை பார்த்துட்டு ஆடியன்ஸ் திட்டக் கூடாது என்பார். அதைத்தான் ஃபாலோ செய்கிறோம் என்றார்

மகனை இயக்க ஆசை: நடிகனாக ஆகவில்லை என்றால் இயக்குநராக மாறியிருப்பேன் எனக் கூறிய ரவி டிக் டிக் டிக் படத்திற்கு பிறகு மகன் ஆரவ் சினிமாவில் காணோமே என்கிற கேள்விக்கு, அவனது பள்ளிப் படிப்பு பாதிக்கக் கூடாது என்பதால் விலகி இருக்கிறார். ஆனால், நடிக்கத்தான் ரொம்ப ஆசை. எங்க அப்பா நானும் அவனும் நடிக்கும் ஒரு படத்திற்கான சூப்பர் ஸ்க்ரிப்ட்டை வைத்திருக்கிறார். என்னோட இயக்கத்தில் நானும் மகனும் கூடிய சீக்கிரமே இணைந்து நடிப்போம் என்றும் ரவி மனம் திறந்து பேசியுள்ளார்.

jayam ravi ravi mohan kadhalikka neramillai

காதலிக்க நேரமில்லை வசூல்: பொங்கல் தினத்தன்று வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் முதல் நாளில் 2.25 கோடி மட்டுமே வசூல் செய்தது. 2ம் நாளான மாட்டுப் பொங்கலுக்கும் அந்த படம் பிக்கப் ஆகவே இல்லை. வெறும் 1.52 கோடி தான் வசூல் செய்தது. 3வது நாளான காணும் பொங்கலான இன்றும் இதுவரை அந்த படத்தின் வசூல் வெறும் 1 கோடிக்கும் குறைவாகவே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட ரவியின் இந்தப் படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X