என் கண் அவர மட்டும் தான் பாத்துச்சு.. அவரால தான் இந்த படமே ஓடும்..‘பராசக்தி‘ பார்த்த கெனிஷா பேட்டி!
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடித்திருக்கும் படம் பராசக்தி. படம் இன்று தியேட்டரில் வெளியாகிய கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை காசி தியேட்டரில் ரசிகர்களோடு சேர்ந்து பார்த்த ரவி மோகனின் தோழி கெனிஷா, செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில், ஜெயம் ரவி வில்லனா பண்ணா என்ன..? ஹீரோவா பண்ணா என்ன..? அவரால தான் இந்த படமே ஓடும்.. என் கண்ணுக்கு வேற யாரும் தெரியல. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கடந்த ஆறு மாதமாக அவர் மிகவும் கஷ்டப்பட்டார் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆனால், இந்த படத்தை பார்க்கும் போது அவருக்காக தான் இந்த படத்தையே எடுத்து இருக்கிறார்களோ? என எனக்கு தோன்றுகிறது. அவர் ஹீரோவாக நடித்தாலும் வில்லனாக நடித்தாலும் எவர்கின், அவர் தான் பெஸ்ட். ரவி தான் இந்த படத்தில் நம்பர் ஒன் ஆக இருக்கிறார்.

பாடகி கெனிஷா: இத்தனை நாட்களாக ரவியை ஒரு கதாநாயகனாக பார்த்துவிட்டு நெகட்டிவ் ரோலில் பார்த்ததால் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும், ஆனால், இரண்டாவது பாதியில் ரவியை பார்க்கும் போது அவரைத் தாண்டி எதுவுமே இல்லை என்ற எண்ணம் வந்துவிடும் என்றார். இதைத் தொடர்ந்து பராசக்தி படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கெனிஷா, அரசின் சட்ட திட்டங்களை நான் பதிக்கிறேன், நம்புகிறேன். அதற்கு எதிராக யாரும் எதையும் செய்ய முடியாது. சென்சார் போர்டு அது கடமையை செய்கிறது. ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிந்து படம் வெளிவந்து உள்ளது. படத்தை மக்கள் ரசித்து பார்த்து கொண்டாடுகிறார்கள் என்றார்.
இதையடுத்து, ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சினை காரணமாக ரிலீஸ் ஆகாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கெனிஷா, இது குறித்து ஏற்கனவே ரவி தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். அவர் சொன்னது போல, ஜனநாயகன் படம் என்னைக்கு வெளியாகிறதோ அன்னைக்கு தான் பொங்கல், எனக்கும் அப்படித்தான் என கெனிஷா பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











