சீவலப்பேரி பாண்டியன் 2ம் பாகத்தில் நடிக்க ரெடி.. நடிகர் நெப்போலியன் சுவாரஸ்ய பேட்டி!
சென்னை: டெவில்ஸ் நைட் உள்ளிட்ட மூன்று ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகர் நெப்போலியன் தற்போது பிலிமி பீட்டுக்கு கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
வேட்டி சட்டையுடன் கையில் அருவா பிடித்தபடி அய்யனார் போல சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த நடிகர் நெப்போலியன், இந்த வயதிலும், ஆர்வம் குறையாமல், அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.

எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையை கைவிடக் கூடாது, முயற்சி செய்து கொண்டே இருக்கணும் என அவர் அடுக்கடுக்காக பாசிட்டிவ் கருத்துக்களாக பேசும் இந்த வி கனெக்ட் பேட்டி, ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் நம்பிக்கையை ஊட்டி பாசிட்டிவிட்டியை வளர்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
டெவில்ஸ் நைட்,: டான் ஆஃப் தி நைட் ரோக், எனும் த்ரில்லர் படத்தில் நடிகர் நெப்போலியன் நடித்துள்ளார். சாம் லோகன் கலோகி எனும் ஹாலிவுட் இயக்குநர் இயக்கி உள்ள இந்த் த்ரில்லர் படம் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது.
விரைவில் இந்திய ரசிகர்கள் பார்வைக்கும் வரவுள்ளதாக இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தியேட்டரில் வெளியிடலாம் என காத்திருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக OTT தளத்தில் வெளியிடும் சூழல் உருவாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
ரகுவரன், சத்யராஜ், நெப்போலியன் மூன்று பேரில் யார் உயரம் என்ற கேள்விக்கு, ரகுவரன் சரி சமமாக இருப்பார் என நினைக்கிறேன். சத்யராஜ் 6.2 உயரம் நான், 6.3 ஆனால், உயரத்தை விட எல்லா வற்றிலும் என்னை விட அவர் உயர்ந்தவர் என கலகலப்பாக பேசினார்.
பின்னர், சீவலப்பேரி பாண்டி பட நினைவுகளை பகிர்ந்து கொண்ட அவர், அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால், இப்போதும் தான் நடிக்கத் தயார் என கூறியுள்ள இந்த முழு பேட்டியை காண வீடியோ லிங்கை க்ளிக் செய்யுங்க!


Click it and Unblock the Notifications











