Real Thug: மணிரத்னம் நிஜமாவே ‘தக் லைஃப்’ மனுஷன் தான்.. ஒரே ஒரு வார்த்தையால் கமலை காலி பண்ணிட்டாரே!

சென்னை: எம்ஜிஆர், கருணாநிதியின் கதையை ஆரம்ப காலத்திலேயே 'இருவர்' என படம் எடுத்து தான் ஒரு ரியல் 'தக் லைஃப்' மனுஷன் என நிரூபித்த மணிரத்னம் தொடர்ந்து பல உண்மையான மனிதர்களின் வாழ்க்கை வரலாறு கதைகளை படமாக எடுத்தும் புராண கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் குறித்த தனது பார்வையையும் கோர்த்து எடுத்த படங்கள் எல்லாமே என்றைக்குமே அவருடைய பெயரை தமிழ் சினிமாவில் ஒலிக்கச் செய்துக் கொண்டே இருக்கும்.

வரதராஜ முதலியார் எனும் ஒரு கேங்ஸ்டரின் கதையை 'நாயகன்' படமாக கொடுத்த மணிரத்னம் கர்ணன் கதையை தளபதி படமாகவும், ராமாயணத்தில் வில்லனாக காட்டப்பட்ட ராவணனை ஹீரோவாக்கி ராவணன் என்கிற படத்தையும் எடுத்து பல முறை தான் ஒரு தக் லைஃப் இயக்குநர் என்பதை உரக்கச் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்.

Real Thug Maniratnam s epic Thug Life answer and he roast Kamal Haasan with a stunning comment
Photo Credit:

சமீபத்தில் கோபிநாத்துக்கு அளித்த பேட்டியில், ஒரே ஒரு வார்த்தையில் கமல்ஹாசனை டோட்டலாக காலி செய்து மீண்டும் தனது பவரை பகிரங்கமாக நிரூபித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர்.

ரியல் தக்: தக் லைஃப் என்றதுமே ஒரு தொப்பி, வாயில் ஒரு சுருட்டு, கழுத்தில் பெரிய தங்கச் சங்கிலியுடன் செய்யப்பட்ட எடிட் தான் ரசிகர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும். தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரியல் லைஃப் தக்குகள் வாழ்ந்துள்ளனர். வாழ்ந்துக் கொண்டும் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் ரியல் தக்குகள் பற்றிய பட்டியலை எடுத்து அலசும் போது அதில், தக் லைஃப் படத்தை எடுத்துள்ள இயக்குநர் மணிரத்னம் குறித்து பேசாமல் இருக்க முடியாது. முதல் ஆளாகவே அவரைப் பற்றியே அலசுவோமே என்கிற எண்ணத்துடன் அவரை பற்றி படிக்க ஆரம்பித்தாலே ஏகப்பட்ட விஷயங்கள் வந்துக் கொட்டிக் கொண்டே இருக்கிறது.

நாயகன்: 1985ம் ஆண்டு வெளியான பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மணிரத்னம் இதய கோவில், மெளன ராகம் படங்களை தொடர்ந்து எடுத்த நாயகன் திரைப்படமே அவரை ரியல் லைஃப் தக் ஆக்கி விட்டது. காட் ஃபாதர் படத்தின் மீது கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இருவருக்குமே இருந்த பெரிய பாதிப்பு அந்த படத்தில் இருந்தாலும், இங்கே உள்ள ஒரு வரதராஜ முதலியாரின் கதையை பல தடைகளை கடந்து பஞ்சாயத்துகளை தாண்டி படமாக மாற்றி தேசிய விருது வென்றதெல்லாம் இப்போ இருக்க இயக்குநர்கள் பலரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத தக் லைஃப் சம்பவம்.

Real Thug Maniratnam s epic Thug Life answer and he roast Kamal Haasan with a stunning comment
Photo Credit:

இருவர்: எம்ஜிஆர் மட்டுமே மறைந்து விட்டார். கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பலர் உயிரோடு இருக்கும் போதே இருவர் எனும் படத்தை 1997ம் ஆண்டு இயக்கி வெளியிடுகிறார். ஆனந்தன் எனும் நடிகன் கதாபாத்திரத்தில் மோகன்லால் மற்றும் தமிழ்ச்செல்வன் எனும் எழுத்தாளர் அரசியல் தலைவராக மாறும் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜை வைத்து படமெடுத்து இருப்பார். எம்ஜிஆர் மற்றும் கலைஞர் குறித்த உருவக படமாகவே இருவர் படம் வெளியாகி இருக்கும். இன்று அந்த படத்தை பார்த்தால் கூட இந்த காட்சியை எல்லாம் எப்படி தைரியமாக எழுதி, படமாக்கி ரிலீஸ் செய்ய முடிந்தது என்கிற எண்ணம் எழத்தான் செய்கிறது. சமீப காலத்தில் ஒரு பாடல் வரி தவறாக இருந்தால் கூட அதை நீக்க வேண்டும் என்று போராட ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால், பல அரசியல் அழுத்தங்களை எல்லாம் சமாளித்து சிக்ஸர் அடித்திருப்பார் மணிரத்னம்.

Real Thug Maniratnam s epic Thug Life answer and he roast Kamal Haasan with a stunning comment
Photo Credit:

58 நிமிஷம் கமல் பேசுவார்: இப்படி மணிரத்னம் பற்றிய பழைய தக் லைஃப் விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், லேட்டஸ்ட்டாக அவர் கமல் பற்றி பேசியது தான் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. கோபிநாத் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்காக எடுத்த பேட்டியில், "நீங்களும் கமல் சாரும் ஒரு காபி ஷாப்பில் 1 மணி நேரம் பேச வேண்டும், ஆனால், சினிமா பற்றி மட்டும் பேசக் கூடாது. என்ன பேசுவீங்க?" எனக் கேட்க, கமல் 58 நிமிஷம் எதை பற்றி வேண்டுமானாலும் பேசுவார், நான் கடைசி 2 நிமிஷம் ஓ சூப்பர் என சொல்லிவிடுவேன் என தக் லைஃப் தலைவனாகவே பதில் அளித்து கோபிநாத்தை மிரள விட்டுவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X